Skip to Content

05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • விருந்துபசாரம்
    • சாப்பாடு போடுவது.
      இது தேவையில்லாதது.
      தேவையானாலும், தேவையில்லாவிட்டாலும் போட முறையுண்டு.
      போடும்பொழுது போடுபவர் வயிறு குளிரவேண்டும்.
      சாப்பிடுபவர் சிறிது குறைவாகச் சாப்பிட்டு, அதிகமாகச் சாப்பிட்டதாக உணரவேண்டும்.
      சாப்பாட்டின் quality தரம் எதுவானாலும் அது உள்ளே - வாயிலில்லை - இனிக்கவேண்டும்.
      அதற்கு அடையாளம் அவர்கள் மீண்டும்மீண்டும் வருவது, சாப்பாட்டைக் கேட்டுச் சாப்பிடுவது.
      சாப்பாடு அப்பொழுது பிரசாதமாகும்.
      முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
      முகமலரும்படிப் போட அகம் மகிழவேண்டும்.
      சாப்பாடு போடுவதால் வீட்டில் பண்டங்கள் provisions பெருகவேண்டும்.
      சாப்பிடுபவர் விரும்பும் சமையல் தானே அமையவேண்டும்.
      இந்த ஒரு வேலையை முறையாகச் செய்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் பஞ்சம் வாராது.
      ஆசாரக் குடும்பங்களில் மிச்சம் கூடாது என்பதால் திட்டமாகச் சமைப்பார்கள்.
      அவன் பரம்பரைப் பட்டினிக்கு அது ஒரு காரணம்.
      ஆசாரமானவன் சாப்பிட்ட மிச்சத்தை ஆசாரமில்லாதவன் சாப்பிடுவது ஆசாரத்திற்குக் குந்தகம்.
      இந்த நோக்கம் ஒரு வகையில் உயர்ந்தது.
      இதன்மூலம் ஆசாரமானவன் அனைவரிடமுமிருந்து பிரிகிறான்.
      ஆசாரமானவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஏழைகள்.
      உலகத்திலிருந்து ஓர் ஏழை பிரிந்து மற்ற ஏழைகளுடன் ஐக்கியமாவது ஏழ்மை நீடிக்க உதவும்.
      பூரணயோகம் வாழ்வனைத்தும் யோகம் என்கிறது.
      ஆசாரமானவன் ஒதுங்கி ஏழையாகிவிட்டான் என்பது உண்மையானால் அன்னை பக்தர் மற்றவரிடமிருந்து விலகி வசதி பெறுவது எப்படி உண்மையாகும்?
      சன்னியாசி வாழ்க்கையை ஒதுக்குவது அவன் தத்துவம்.
      நாம் - அன்பர்கள் - எப்படி அவனிலிருந்து மாறுபட்டவர், நாமும் அவன் போலவேயில்லையா?
      நம் - அன்பர் - தத்துவம் வாழ்வை ஏற்பது.
      வாழ்வை ஏற்பதுஎனில் வாழ்வின் தாழ்ந்த நிலைகளை ஏற்பது என்று கொள்ளாமல் வாழ்வின் பெரிய அம்சங்களை ஏற்பதுஎனப் பொருள்.
      படித்தவன் வாழ்வை ஏற்பதுஎன்பது, படிக்காதவனை இதர அம்சங்களில் சேர்ப்பது, படிப்பு சம்பந்தமான விஷயத்தில் சேர்ப்பதில்லை.
      நாலு பேர் ஓடும்பொழுது நடுவே ஓடு என்றால் நாலு நல்லவர் எனப் பொருள். ஓர் ஊரில் அனைவரும், நாட்டாமைக்காரன் உள்பட, திருடினால் நாமும் திருட வேண்டும் எனப் பொருளில்லை. ஆபீஸில் அனைவரும் இலஞ்சம் வாங்கினால் நாமும் இலஞ்சம் வாங்கவேண்டும் எனப் பொருளில்லை.
      • சன்னியாசி வாழ்வின் எந்த அம்சத்தையும் ஏற்பதில்லை.
      • அன்பர் வாழ்வின் பண்பு நிறைந்த பகுதிகளை ஏற்கிறார். தாழ்ந்த பகுதிகளை ஏற்க மறுக்கிறார்.
      சாப்பாடு அளவு கடந்து போட்டதால் எவரும் நஷ்டமடைந்ததில்லை.
      நாகரீகத்தின் அடிப்படையும், சிகரமும் சாப்பாடேயாகும்.
      நமக்கு நாகரீகம் தேவையில்லை.
      அன்னைக்கு நல்லது நமக்கும் நல்லது.
      உலகத்துச் சட்டம் அத்தனையையும் நாம் கடந்து வருவது அவசியம்.
      சாப்பாடு போடும் நாகரீகம் ஹோட்டல் இல்லாத காலத்து நாகரீகம்.
      இன்று அது தேவையில்லை.
      ஒரு பழக்கத்தைக் கடக்க அதை அனுஷ்டித்து பூர்த்தி (saturate) செய்து தாண்டிவர வேண்டும். Overcome செய்ய வேண்டும்.
      பலருக்குச் சாப்பாடு போடுவதே அதிர்ஷ்டமாகும், யோகமாகும்.
      அன்னம் என்றால் உடல்.
      ஜடமான மக்களுக்குத்தான் (physical people) சாப்பாடு அவசியம்.
      மற்றவருக்கு அந்த அவசியமில்லை.
      It is only courtesy. அது ஒரு நாகரீகம்.
      வெளிநாட்டில் ஹோட்டலில் அவரவர் பில் அவர்களே கொடுப்பார்கள்.
      அது அநாகரீகம். சமூகமே சுயநலமாக, கருமியாக இருப்பதைக் காட்டுகிறது.
  • சுத்தம்
    • சுத்தம் தெய்வீகமானது.
      சுத்தம் தரும் செல்வத்தை நான் வலியுறுத்துகிறேன்.
      உலகில் நல்லவை அனைத்தும் சுத்தத்தின் அடிப்படையில் எழுந்தவை.
      நல்லதுஎனில் - ஆத்மா, ஞானம், ஐக்கியம், சுமுகம், மௌனம், சாந்தி, சக்தி, அழகு, சந்தோஷம், அன்பு - அவற்றிற்கு அடிப்படையுண்டு. அவற்றுள் சுத்தம் முக்கியம்.
      அழுக்கு, அலங்கோலமுள்ள இடத்தில் வியாதி, அறியாமை, சண்டை, நஷ்டம், திருடு, சந்தேகம், தப்பபிப்பிராயம், திறமைக் குறைவு இருக்கும்.
      சுத்தம் சோறு போடும்.
      ஆங்கிலேயர்களை டாக்டர்கள் குளித்தால் ஆயுள் குறையும் என்றனர். பல நூற்றாண்டுகள் அவர்கள் குளிக்காமல் இருந்தனர். மிருகமாக இருந்தனர், குளிப்பதில்லை.
      பிரபல பிரெஞ்சு அரசர் பதினான்காம் லூயி வாழ்நாளில் இரு முறையே குளித்தார்.
      ஞானஸ்நானம் செய்தது ஒன்று, உடல் புதைக்கப்படுமுன் குளிப்பாட்டியது அடுத்தது.
      காரல் மார்க்ஸ் குளித்ததேயில்லை.
      200 வருஷத்திற்குமுன் பல்பொடி, பிரஷ் இல்லை.
      சர்ச்சில் ஆங்கிலேயர் உடலில் அழுக்கு படைபடையாக இருக்கிறது என்றார்.
      வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கண்ணாடிபோல் சுத்தமாக வைத்திருந்தனர்.
      ஆங்கிலேயர் பொய் சொல்வதில்லை.
      அகம் தூய்மையானால், புறம் அசுத்தமாகும்.
      இந்தியர் சுத்தத்தை தெய்வீகமாக்கினர் என ஆங்கிலேயர் கூறுகின்றனர்.
      பாண்டியில் (soldiers) சோல்தா வீடுகள் பளிங்கு போலிருக்கும்.
      ஒழுங்கும், சுத்தமும் சுபிட்சம் தரும்.
      சுத்தமின்றி வரும் செல்வம் நல்லது செய்யாது.
      அழுக்கும் செல்வமும் சேர்ந்திருப்பதைக் காணமுடியாது.
      உரத்த குரலும் அழுக்கும் இணை பிரியாமலிருக்கும்.
      சுத்தத்தைவிட சுத்தம் தேவைஎன்பது முக்கியம்.
      சொரணை உரத்த குரலுக்கும், அழுக்குக்கும் உதவாது.
      சொரணை அழுக்கை விலக்கும்.
      ரோஷம் என்பது வேண்டாத சொரணை.
    சுத்தம் எந்த அளவுக்குச் சோறு போடும்?
    • உலகிலேயே அதிக மழை 425'' பெய்யும் சிரபுஞ்சியில் கோடையில் தண்ணீர் பஞ்சம்.
    • இந்திய ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும் பொழுது, ஓய்வு பெற்றபின் வருமானத்திற்குண்டான ஏற்பாடுகளைச் செய்தார்.
    • நம்மூரில் காபி, டீ சாப்பிட்டாலும், ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலும் வாயை அலம்புகிறோம். மேல் நாட்டார் (200 ஆண்டுகட்கு முன்) பல் துலக்குவதில்லை, எந்த சாப்பாட்டிற்குப்பின்னும் வாயலம்புவதில்லை. அன்றே அவர்கள் பெரும்பணக்காரராக இருந்தனர். நாம் எப்பொழுதும் ஏழைகளாக இருக்கிறோம்.
    • மேல் நாட்டார் எப்பொழுதும் மெல்லிய குரலில் பேசுவார்கள். வழக்கமாக நமக்கு உரத்த குரல் உண்டு.
    • அவர்கள் அயராத உழைப்பாளிகள். நமக்கு வேலை செய்யப் பிடிக்காது.
    • குறித்த நேரத்தில் செயல்படுவது நமக்கு வழக்கமே இல்லை. அவர்களால் ஒரு நிமிஷம் தாமதிக்க முடியாது.
    • அவர்கள் பிறரை உதவிகேட்கமாட்டார்கள். நாம் அனைவரையும் உதவி கேட்போம்.
    • கொடுத்த வார்த்தை அவர்கட்கு வேதவாக்கு, மாறுவதுஎன்பது அவரறியாதது. நமக்கு வார்த்தை "சும்மா''. நடந்தால்தான் நிலை.

    இவற்றுள் நல்லவை பணம் ஈட்டும், அல்லவை பணத்தை அழிக்கும். ஒருவர் பெற்ற செல்வம் எது மிச்சமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. முன்யோசனை, பெற்றதைக் காப்பாற்றுவது, எதையும் நாடாதது, சுத்தம், மென்குரல், உழைப்பு, குறித்த நேரத்தில் செயல்படுவது, பிறர் உதவியை நாடாதது, வார்த்தையைக் காப்பாற்றுவது பணம்பெறும். மற்றவை ஏழ்மையை வளர்க்கும். இரண்டும் சேர்ந்து எது மிகையாக இருக்கிறதோ அது நம் செல்வத்தை நிர்ணயிக்கும்.

  • ஒழுங்கு (Regularity, Orderliness)
    • Regularity (ஒழுங்கு).
      குறித்த நேரத்தில் செயல்படுவதும், அழகாக அடுக்கி வைப்பதும் சேர்ந்தது ஒழுங்கு.
      Punctualityம், orderlinessம் சேர்ந்தது regularity.
      தினமும் சூரியன் அதற்குரிய நேரத்திலுதிப்பது regularity.
      நம் வீடு, அல்லது கம்பனியில் நடக்கும் விஷயங்கள் அது போல் நடந்தால் செல்வம், செழிப்பாக இருக்கும்.
      வருஷா வருஷம் இந்த நாளில் இப்படித்தான் நடக்கும் என்பது regularity, ஒழுங்கு.
      அப்படியிருக்க குறித்த நேரத்தில் செயல்படுவது punctuality எல்லா இடங்களிலுமிருக்க வேண்டும்.
      செயல்களில் முறை orderliness காணப்படும்.
      பெருஞ்செல்வம்பெற ஒழுங்கு regularity போதும்.
      (It is a subconscious orderliness such as our breathing, eyesight or hearing).
      பார்வை, மூச்சு ஆகியவை ஆழ்மன ஒழுங்கு.
      ஒரு வீட்டிற்கு 5 வருஷம் கழித்துப் போனால், "இப்போது எல்லாம் மாறிவிட்டது”அல்லது "அதெல்லாம் அந்தக் காலம்” எனக் கேள்விப்படுகிறோம். உலகம் மாறும்.
      ஒழுங்கு regularity இருக்க அடிப்படையான விஷயங்கள் மாறக்கூடாது.
      ஒரு முறை அன்பு - காதல் - பிறந்த இதயம் விஷயம் மாறி பல ஆண்டுகளானபின் ஆழத்தில் தேடிப் பார்த்தால் அதே அன்பு, அதே காதல் உயிருடனிருப்பது தெரியும்.
      Heart never grows old. இதயத்திற்கு வளர்ச்சியால் தளர்ச்சியில்லை.
      Body grows old, not heart. உடல் தளரும், உள்ளம் தளராது.
      (It is the regularity of heart which we call love).
      மறந்தறியாதது மனம்.
      சூரிய சந்திரர் கதி மாறலாம், நெஞ்சம் மாறாது.
      டிராலப் நாவல்களில் 20 அல்லது 30 காதல் காட்சிகளுண்டு.
      அங்கு இந்த விளக்கத்தைக் காணலாம்.
      காதல் பிறந்த நெஞ்சம் காதலையறியும்.
      மேல் நாட்டார் வேலையில் ஒழுங்கைக் கண்டனர்.
      அங்கு ரயில் ½ நிமிஷம் தாமதமாகாது.
      வாழ்வில் சில மாறுவதில்லை.
      காதல் அடுத்தது.
      வேலையில் ஒழுங்கு சுபிட்சம்.
      உணர்வில் ஒழுங்கிற்கு காதல்எனப் பெயர்.
      சுபிட்சம், ஒழுங்கு ஆகியவை வளமான வாழ்வின் அஸ்திவாரங்கள்.
  • ஒழுங்கு முறை (Orderliness)
    • தமிழில் ஒழுங்குதவிர orderlinessஐக் குறிக்கும் சொல்லில்லை. எனக்குத் தெரியவில்லை.
      ஒழுங்குஎனில் கட்டுப்பாடு (discipline, regularity, etc.).
      ஒழுங்கு அழகானது.
      இக்காலத்தில் கடைகளில் ஒழுங்கு காணப்படுகிறது.
      அழகுஎன்பது மனம்பெறும் ஆனந்தம்.
      ஆனந்தம் சச்சிதானந்தப்பகுதி.
      சச்சிதானந்தம் கடவுள்.
      எனவே முடிவாக ஒழுங்கு தெய்வம்.
      குறித்த நேரத்தில் செயல்படுவது சக்தி வாய்ந்தது.
      ஒழுங்கு அதனின்று வருவது.
      குறித்த நேரத்தில் எல்லாவிஷயங்களிலும் செயல்பட சம்மதிக்கும் ஏழை பெரும்பணக்காரனாவான்.
      ஜெர்மனியில் ரயில் 1 நிமிஷம் தாமதமாக வருவதில்லை.
      குறித்த நேரத்தில் செயல்படும் கட்டுப்பாடு ஏற்றுக் கொண்டால், வாழ்வை ஊடுருவும்.
      எனவே அது சக்தி வாய்ந்தது.
      குறித்த நேரத்தில் செயல்படுவது அரச இலட்சணம்.
      ஆரம்பம் நேரத்திலிருந்தால் முடிப்பதும் நேரத்தில் முடிக்க வேண்டும்.
      ஒவ்வொரு காரியமும் நேரத்தில் நடந்தால்தான் அது முடியும்.
      அது பெரிய காரியம்.
      அதை ஏற்றால் மனம் உயரும்.
      இதற்கு இந்தசக்தி அதன் முறையினின்று (organisation) வருகிறது.
      முறை சக்தி.
      • ஆர்வம் சக்தியைத் தரும் (energy).
      • உறுதி அதைச் செயல்படச் செய்யும் (force).
      • முறை அதைச் சக்தியாக்கும் (power).
      • பலன் வருவது திறமையால் (skills). 
        Energy
        force
        power
        results
         
        Aspiration
        direction
        organisation
        skills
         

      நேரத்தில் செயல்படுவது, ஒழுங்கு, ஒழுங்கு முறை, சுத்தம் ஆகியவை சேர்ந்து செயல்படும்.
      எதையும் பிரித்து எடுக்க முடியாது.
      மேல் நாட்டார் வீடுகளைப் படத்தில் காண்கிறோம்.
      தட்டு, டம்ளர், கப் எவ்வளவு பளபளப்பாக இருக்கின்றன.
      ஸ்கேலால் அளந்து அவற்றை ஒழுங்காக வைப்பார்கள்.
      எல்லா பாத்திரங்களும் வெள்ளியாலானவை. அது aristocracy. அவர்கள் பணக்காரர்கள்.

      ஒழுங்கு செல்வம் தரும்.

தொடரும்....



book | by Dr. Radut