Skip to Content

04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XIX. Life
 
The conclusion is a logical necessity.
Page No.184
Para No.18
It imposes itself.
We can observe the surface process.
There emerges this inevitability.
It does so in the light of the evolutionary theme.
Let us put aside all other considerations.
Still this is evident.
Life in the plant is differently organised than in the animal.
Yet it is the same power.
It is marked by several characteristics.
Birth, growth and death are some of them.
Propagation by seed is a characteristic.
Death by decay is one more.
It comes by malady or violence too.
Maintenance is by indrawing of nourishing elements.
They are from without.
Life depends on light and heat.
It is capable of productiveness and sterility.
19. வாழ்வு
 
இம்முடிவு தர்க்கரீதியாகத் தவிர்க்க முடியாது.
தன்னை ஏற்கும்படி நிர்ப்பந்திக்க வல்லது.
மேல்மனத்தில் நடப்பதைக் காணலாம்.
தவிர்க்க முடியாது என்பது அங்கு தெரியும்.
பரிணாமத்தைக் கருதினால் இது விளங்கும்.
மற்றதை அனைத்தும் விலக்குவோம்.
விலக்கியபின்னும் இது தெளிவு.
தாவரத்திலுள்ள வாழ்வு விலங்கிலுள்ள வாழ்விலிருந்து வேறுபட்டது.
இருந்தாலும் இரண்டும் ஒன்றே.
வாழ்வுக்குப் பல குணங்களுண்டு.
பிறப்பு, வளர்ப்பு, மரணம் ஆகியவை சில.
விதையிலிருந்து செடி வளர்வது ஓர் அம்சம்.
அழிவால் வரும் மரணம் அடுத்தது.
கஷ்டத்தாலும், வன்முறையாலும் மரணம் வரலாம்.
உணவுப்பொருளை உட்கொள்வதால் உயிர் வாழ்வது ஓர் அம்சம்.
இவை புற அம்சங்கள்.
உயிருக்கு வெளிச்சமும், உஷ்ணமும் தேவை.
பெருக்கமும், மலடித்தனமும் உண்டு.
 
Sleep, waking, energy, depression are yet others.
Passage from infancy to maturity of age is one.
The plant contains the essences of the forces of life.
Therefore it is the natural food of animal existences.
Life has a nervous system.
It is conceded.
It reacts to stimuli.
There is a beginning of submental sensations.
It is an undercurrent.
It is purely of vital sensations.
Thus the identity becomes closer.
Still, plants are evidently a stage of life evolution.
It is an intermediate stage.
It is there between animals and inanimate Matter.
Life is a Force evolving out of Matter.
It culminates in Mind.
If this is true, we know what to expect.
We are bound to suppose that it is already there in Matter itself.
It is submerged or latent in Matter.
Matter is material subconscience or inconscience.
For from where else can it emerge?
Matter evolves life.
It presupposes a previous involution of it.
Or, we can suppose it is a new creation.
If so, it must have been introduced into Nature.
That would be magical.
Or, it would be unaccountable.
Let us suppose it to be so.
Then it must be a creation out of nothing.
தூக்கம், விழிப்பு, சக்தி, சோகம் ஆகியவை சில.
சிறு பிராயத்திலிருந்து வளர்ந்து முதிர்வது ஒரு குணம்.
உயிருக்குத் தேவையான சக்தியைத் தாவரம் பெற்றுள்ளது.
அதனால் தாவரம் விலங்கிற்கு உணவாகிறது.
வாழ்வுக்கு உணர்ச்சி மண்டலம் உண்டு.
இதை ஏற்கலாம்.
தொட்டால் இவ்வுணர்ச்சி செயல்படும்.
மனத்திற்குக் கீழுள்ள உணர்வு இங்கு ஆரம்பமாகிறது.
இது மறைவாகச் செயல்படும் சக்தி.
இது நரம்பின் உணர்ச்சி.
இதன்மூலம் ஐக்கியம் உருவாகிறது.
வாழ்வின் பரிணமத்தின் தாவரம் ஒரு நிலை.
இது இடைப்பட்ட நிலை.
விலங்கிற்கும் ஜடத்திற்கும் இடையே தாவரம் உண்டு.
ஜடத்தினின்று வாழ்வு ஒரு சக்தியாகப் பரிணமிக்கிறது.
இதன் முடிவு மனம்.
இது சரியானால், என்ன எதிர்ப்பார்க்கலாம்என நாம் அறிவோம்.
ஏற்கனவே ஜடத்தில் இது இருப்பதாக நாம் கொள்ளலாம்.
ஜடத்துள் மறைந்து வித்தாக வாழ்வுள்ளது.
ஜடம்என்பது ஜடஇருள், ஜடமான ஆழ்மனம்.
வேறு எங்கிருந்து வாழ்வு வெளிவர முடியும்?
ஜடம் பரிணாம வளர்ச்சி பெறுகிறது.
இது உண்மையானால், ஏற்கனவே வாழ்வு ஜடத்துள் மறைந்திருக்க வேண்டும்.
இல்லையேல், புதிய சிருஷ்டிஎனக் கொள்ளலாம்.
அப்படியானால், அது இயற்கையுள் புகுந்ததாக இருக்கலாம்.
அது மந்திர வித்தையாகும்.
அல்லது, இது விளக்க முடியாததானதாகும்.
நாம் இதை அப்படியே கொள்வோம்.
அப்படியானால் சூன்யத்திலிருந்து வாழ்வை உற்பத்தி செய்திருக்க வேண்டும்.
Or, it must be a result of material operation.
In that case it cannot be accounted for by anything in the
operations themselves.
Nor can it be explained by any element in them.
That element may be of kindred nature.
We can conceive it descended from above.
It may be from some supraphysical plane above.
It must be above the material universe.
The first two suppositions are arbitrary.
We can dismiss them.
The last explanation is possible.
It is quite conceivable.
It is true in the occult view of things.
There can be a pressure from some plane above.
It must be above the material universe.
We can think it has assisted the emergence of life here.
But, this does not include the origin of life from Matter itself.
It may be a primary and necessary movement.
The Life world or Life plane can exist.
It may exist above the material plane.
That by itself does not lead to the emergence of Life in matter.
For that the Life plane must exist as a formative stage.
It must be part of a descent of Being through several grades.
They can be powers of itself.
The descent must be into the Inconscience.
It must result in the involution of itself with all these powers in Matter.
It must be for a later evolution and emergence.
The signs of this submerged life may be discoverable.
அல்லது ஜடம் செயல்படுவதால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும்.
அதுவே சரியெனில் ஜடச்செயலுள் எதனாலும் இதை விவரிக்க முடியவில்லை.
வேறு எந்த வகையாலும் இதை விளக்க முடியாது.
இந்த அம்சம் வாழ்வுக்குரியதாக இருக்கலாம்.
மேலிருந்து இறங்கி வந்ததாக நாம் கொள்ளலாம்.
மேல் நிலையிலுள்ள ஒரு லோகமாக அது இருக்கலாம்.
அது ஜடலோகத்திற்கு மேலிருக்க வேண்டும்.
முதலிரண்டு கொள்கைகட்கும் அடிப்படையில்லை.
நாம் அவற்றை நிராகரிக்கலாம்.
கடைசி விளக்கம் ஏற்கக்கூடியது.
இது அறிவுக்குப் பொருத்தமானது.
சூட்சும உலகுக்கு இக்கொள்கை பொருந்தும்.
மேலேயுள்ள ஒரு லோகம் நிர்ப்பந்தம் செய்யலாம்.
அது ஜடலோகத்தைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
அந்த லோகம் வாழ்வு இங்கே எழ உதவியதாகக் கொள்ளலாம்.
ஜடத்திலிருந்து வாழ்வு வெளிவருவதை இது எப்படி ஏற்கும்?
இது அடிப்படையான அவசியமான செயலாக இருக்க வேண்டும்.
வாழ்வின் நிலை, வாழ்வின் லோகம் இருக்க வேண்டும்.
அது ஜடத்திற்கு மேலிருக்க வேண்டும்.
அது இருப்பதால் வாழ்வு ஜடத்தினின்று எழுகிறது எனக் கூற முடியாது.
அது நடக்க வாழ்வு லோகம் உருவம் பெறும் நிலையிலிருக்க வேண்டும்.
ஒரு ஜீவன் மேலிருந்து கீழே வரும் பல நிலைகளில் இது ஒன்றாக இருக்க வேண்டும்.
அந்த ஜீவனின் சக்தியாக அப்பகுதிகளிருக்கலாம்.
இறங்கி வருவது ஜடஇருளில் நுழைய வேண்டும்.
இந்த எல்லா சக்திகளும் ஜடத்துள் புதைந்திருக்க வேண்டும்.
பிறகு பரிணாமத்தால் வெளிவர முன்கூட்டி இப்படி நடக்க வேண்டும்.
அமிழ்ந்துள்ள வாழ்வின் அடையாளங்களைக் காணலாம்.
Maybe unorganised or rudimentary in material things.
Or there may be no signs.
It may be because this involved Life is in full sleep.
All this is no question to us.
They are of no capital importance.
The material Energy aggregated.
It forms and disaggregates.
In either case it is the same power.
It is in another grade of itself.
That Life-Energy expresses itself in birth, growth and death.
It just does the works of Intelligence.
As in a somnambulist subconsciousness.
It betrays itself as the same Power.
In another grade it attains the status of Mind.
It has a character.
It shows it contains in itself.
It may not be in their characteristic organisation.
It may not be in their process.
They are the yet undelivered powers of Mind and Life.
Life reveals itself.
Page No.186
Para No.19
It is essentially the same everywhere.
From atom to man it is the same.
The atom contains the subconscious stuff.
It contains the movement too of being.
They are released into consciousness in the animal.
The plant life is a midway stage in the evolution.
Life is really a universal operation.
It is an operation of conscious-Force.
அவை ஒழுங்கற்றிருக்கலாம் அல்லது ஜடத்தில் சிறியதாக இருக்கலாம்.
அடையாளமில்லாமலிருக்கலாம்.
மறைந்துள்ள உயிர் முழுவதும் தூங்குவதால் அப்படியிருக்கிறது.
இதெல்லாம் நமக்குக் கேள்வியில்லை.
அவற்றிற்குத் தலையாய முக்கியத்துவம்என்பது இல்லை.
ஜட சக்தி திரள்கிறது.
உருவம் பெற்று அழிகிறது.
எப்படியானாலும் அது ஒரே சக்தியே.
அது வாழ்வின் வேறொரு நிலையைச் சேர்ந்தது.
பிறப்பு, வளர்ப்பு, மரணத்தில் வாழ்வின் சக்தி வெளிப்படுகிறது.
அது அறிவின் வேலையைச் செய்கிறது.
ஏவல் செய்யப்பட்டவனின் ஆழ்மனம் போல் வேலை செய்கிறது.
அதுவும் அதே சக்தியாகத் தன்னை வெளிப்படுத்தும்.
அடுத்த கட்டத்தில் அது மனமாகிறது.
அதற்கொரு சுபாவமுண்டு.
தன்னைத் தன்னுள் அடக்கியதாக அது காட்டுகிறது.
அதுவே அதன் குறிப்பான செயலமைப்பாக இருக்காது.
அவர் வழியாக இருக்காமலிருக்கலாம்.
இவை மனமும் வாழ்வும் இதுவரை வெளிப்படுத்தாத சக்திகளாக இருக்கலாம்.
வாழ்வு வெளிப்படுகிறது.
எங்கும் அது அடிப்படையில் ஒன்றே.
அணுவினின்று மனிதன்வரை வாழ்வுஎன்பது ஒன்றே.
அணுவுள் ஆழ்மனம் உள்ளது.
ஜீவனின் சலனமும் அதனுள் உள்ளது.
விலங்கின் ஜீவியத்தில் அவை விடுபடுகின்றன.
பரிணாமத்தின் இடையில் தாவர வாழ்வுள்ளது.
வாழ்வு உண்மையில் பிரபஞ்சச் செயலாகும்.
சித்சக்தியின் செயலது.
 
It acts subconsciously on and in Matter.
Life is the operation that creates forms.
It maintains, destroys and recreates these forms.
It does so to the bodies.
It attempts by play of nerve-force.
It does so by currents of interchange.
It stimulates energy to awake conscious sensation.
It does so in those bodies.
In this operation there are three stages.
The lowest is in Matter.
The vibration is still asleep there.
It is entirely subconscious.
Therefore it appears wholly mechanical.
There is a middle stage.
Here it is capable of response.
It is still submental.
It is on the verge of consciousness.
The highest is our conscious mentality.
It is mentally perceptible sensation.
This is a transition.
It becomes a basis for the development of sense mind.
It develops intelligence also.
It is in the middle stage it is Life to us.
We distinguish it from Matter and Mind.
In reality it is the same in all three stages.
It is always a middle term between Mind and Matter.
It is a constituent of Matter.
It is instinct with Mind.
It is an operation of Conscious-Force.
It is not the mere formation of substance.
ஜடத்திலும், அதன்மீதும் அது ஆழ்மனத்தால் செயல்படும்.
ரூபங்களை சிருஷ்டிப்பது வாழ்வு.
காத்து, அழித்து, மீண்டும் அவற்றைப் புதுப்பிக்கிறது.
அதையே உடலுக்கும் செய்கிறது.
உணர்வின் சக்தியின் லீலைமூலம் இதைச் செய்ய முயல்கிறது.
சக்தி ஓட்டங்கள் கலப்பதன்மூலம் இதைச் செய்கிறது.
விழிப்பான உணர்ச்சியை எழுப்ப அது சக்தியைக் கிளப்புகிறது.
அதையும் உடலில் செய்கிறது.
இதில் மூன்று கட்டங்களுண்டு.
கடைசி கட்டம் ஜடம்.
அங்கு சக்தியின் கதிர் உறங்குகிறது.
அது முழுவதும் ஆழ்மனத்திற்குரியது.
அதனால் அது முழுவதும் இயந்திர இயக்கமாகத் தோன்றுகிறது.
இடைப்பட்ட நிலையுண்டு.
இங்கு உணர்ச்சிக்குப் பதில் உண்டு.
இருந்தாலும் இது மனத்திற்குக் கீழ்ப்பட்டது.
இது ஜீவியத்தின் எல்லைக்குள் வருகிறது.
அதன் உச்சக்கட்டம் நம் விழிப்பான மனம்.
அது மனம் அறியும் உணர்வு.
இது மாறும் நிலை.
புலன் அறிவு வளர இதுவே அடிப்படை.
இது அறிவையும் வளர்க்கும்.
இடைப்பட்ட நிலையில் நாம் அதை வாழ்வுஎன்கிறோம்.
ஜடம், மனத்திலிருந்து நாம் அதைப் பிரித்துப் பார்க்கிறோம்.
எல்லா நிலைகளிலும் அது ஒரே சக்தியே.
எப்படியும் அது மனத்திற்கும், ஜடத்திற்கும் இடையே நிற்கும்.
இது ஜடத்தில் உள்ளது.
இதற்கு மனம் உண்டு.
சித்-சக்தி இவ்விதம் செயல்படும்.
பொருள் உருவம் பெறுவதில்லை இது.
Nor is it the operation of Mind.
Its object of apprehension is substance and form.
It is rather an energising of conscious being.
It is the cause and support of the formation of substance.
It is an intermediate source and support.
It supports the conscious mental apprehension.
Life is this intermediate energising of conscious being.
Life liberates into sensitive action.
It also does it for reaction.
It liberates a form of the creative force of existence.
It was working subconsciously or inconsciently.
It is absorbed in its own substance.
It supports in action the apprehensive consciousness.
It liberates it into action.
It is called mind.
It gives it a dynamic instrumentation.
It works on its forms.
It also works on forms of life and matter.
It is a middle term.
It connects and supports them – the mutual commerce.
They are mind and matter.
Life provides this means of commerce.
It does so by the continual currents of her pulsating nerveenergy.
It carries the force of the form as the sensation.
It modifies mind.
It brings back force of Mind as will.
It modifies Matter.
This is nerve-energy.
We call this Life.
மனத்தின் செயலுமில்லை.
இது புறத்தில் காண்பது ரூபம், பொருள்.
ஜீவன் சக்தி பெறுவதாகும்.
பொருள் உருவாகும் காரணம் இதுவே. இதன் ஆதரவு அதற்குள்.
ஆதரவுக்கும், ஆதியாக இருப்பதற்கும் இடைப்பட்டநிலை.
விழிப்பான மனம் உணர்வதற்கு இது ஆதரவு.
ஜீவன் சக்தி பெறுவது இவ்விடைப்பட்ட வாழ்வுமூலம்.
உணர்வுள்ள செயலில் வாழ்வு தன்னை விடுவிக்கிறது.
செயலுக்குச் செய்வதையே மறுப்புக்கும் செய்கிறது.
சிருஷ்டித்திறனுள்ள சக்தியை வாழ்வு வெளிப்படுத்துகிறது.
வாழ்வு ஆழ்மனத்திலும், ஜட இருளிலும் செயல்படும்.
தன் பொருளுள் வாழ்வு தன்னைக் கிரகித்துக்கொள்கிறது.
புறமான ஜீவியத்தின் செயலை அது ஆதரிக்கிறது.
செயலில் அதை விடுவிக்கிறது.
அதற்கு மனம்எனப் பெயர்.
செயலுக்கு அதைத் தீவிரமான கருவியாக்குகிறது.
ரூபத்தில் செயல்படுகிறது.
வாழ்விலும், ஜடத்திலும் செயல்படுகிறது.
இது இடைப்பட்டது.
அவை செயல்படுவதை ஆதரித்துத் தொடர்புகொள்கிறது.
அவை மனமும் ஜடமுமாகும்.
வாழ்வு இவ்வுறவுக்கு வழி செய்கிறது.
உணர்வின் சக்தியின் அதிர்வு தொடர்ந்து ஓடுவதின்மூலம் இதைச் செய்கிறது.
ரூபத்தின் சக்தியை உணர்வாகச் செய்கிறது.
இது மனத்தை மாற்றுகிறது.
மனத்தின் சக்தியை உறுதியாகக் கொண்டுவருகிறது.
இது ஜடத்தை மாற்றிஅமைக்கிறது.
இது நரம்பில் எழும் சக்தி.
நாம் இதை வாழ்வென்கிறோம்.
It is the Prana or Life-force of the Indian system.
But nerve-energy is only the form it takes in the animal being.
The same Pranic energy is present in all forms.
It is there in the atom.
Everywhere it is the same in essence.
Everywhere it is the same operation of Conscious-Force.
It is Force supporting and modifying the forms.
They are its own forms.
It has a substantial existence.
It is Force with sense and mind secretly active.
It is first involved in the form.
There it is preparing to emerge.
Finally it emerges from its involution.
This is the whole significance of omnipresent Life.
It has manifested and inhabits material universe.
 
 
 
 
 
 
 
 
 
 
 
End.
 
*****
இந்திய தத்துவம் கூறும் பிராணன் இதுவே.
விலங்கின் ஜீவனில் இது நரம்பு சக்தியாகிறது.
இதே பிராணன் எங்கும் உள்ளது.
இது அணுவினுள் உள்ளது.
எல்லா இடங்களிலும் அடிப்படையில் இதையே காணலாம்.
எங்கும் செயல்படுவது சித்-சக்தியே.
ரூபத்தை ஆதரித்து செயலில் மாற்றும் சக்தியது.
அவை இதன் ரூபங்களே.
இதற்கு வலுவான வாழ்வுண்டு.
புலனறிவுள்ள சக்தியிது. இரகஸ்யமாகச் செயல்படுகிறது.
இது முதலில் ரூபத்துள்ளிருக்கிறது.
வெளிவர அங்கு இது ஆயத்தமாகிறது.
மறைவிலிருந்து எழுந்து முடிவாக வெளிவருகிறது.
எங்கும் நிறை வாழ்வின் முழுமுக்கியத்துவம் இதுவே.
ஜடமான பிரபஞ்சத்தில் வெளிப்பட்டு இருக்கிறது.
 
 
முற்றும்.
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அறிவைவிட உணர்வு இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும். உடல் இலட்சியத்தை ஏற்றால் பூர்த்தி பூரணமாகும். ஞானம், பக்தி, கர்மத்திற்கு யோகத்தில் வித்தியாசம் உண்டு. அன்னையின் யோகத்தில் அவை ஜீவியம்; ஆனந்தம்; சத்தியம்.
 
ஞானம், பக்தி, கர்மம்,
ஜீவியம், ஆனந்தம், சத்தியமாகும்.
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சுற்றியுள்ளவரை - நமக்கு எப்படி முக்கியம் என்றறியாமல் - முக்கியமாகக் கருதுவது ஜடவாழ்வு.
 
*****
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பற்று நிறைந்த உணர்வில்லாவிட்டால், மனம் சொத்தையும் பொருளையும் நாடும்.
பற்றான உணர்வு சொத்துக்குச் சமம்.
 
*****

*****



book | by Dr. Radut