Skip to Content

13. மனத்தின் நிலைகள் பல

மனத்தின் நிலைகள் பல

கர்மயோகி

  • Life Divine நன்கு விளங்க அதற்குரிய மனநிலை வேண்டும்.
  • அது என்ன மனநிலை? நம்மால் அதை விவரிக்க முடியுமா?
  • உடல் திருவுருமாறும்பொழுது எரியும். எந்த நேரமும் ஓலமிடுவது போருக்கும். "இந்த யோகத்தை செய்ய நான் யாரையும் அழைக்க மாட்டேன். பகவான் ஸ்ரீ அரவிந்தர் இதே நிலையில் எப்பொழுதும் இருந்திருக்கிறார் என்பதை நான் அப்பொழுது அறியவில்லை என்று இப்பொழுது நினைத்தால் கண்ணீர் பெருகுகிறது. உடல் திருவுருமாறுவது உடலெல்லாம் எந்த நேரமும் பற்றிஎரிவதாக இருக்கிறது" என்று அன்னை கூறினார்.
  • குழப்பம், மனதில் தெளிவு தரும்.
    கவலை ஏற்பட்டால், சந்தோஷம் வரும்.
    கலகம் வந்தால், நியாயம் பிறக்கும்.
    உள்ள தெளிவு போனால், பெரிய தெளிவு வரும்.
    உள்ள தெளிவு போவது, மனக் குழப்பம்.
    இருக்கும் சந்தோஷத்தை அழித்துப் பெரிய சந்தோஷம் பெற முயன்றால், கவலை பற்றிக்கொள்ளும்.
    உடல் திருவுருமாற நோய்வாய்ப்பட வேண்டும்.
  • அன்னை உடலைப்பற்றிப் பேசுவது யோகத்திற்காக. உணர்வு திருவுருமாறுவது அதிர்ஷ்டம். மனம் திருவுருமாறுவது மேதை பிறப்பது.
  • மனிதன் சமூகத்தை ஒட்டி வாழ்கிறான் (social consciousness). அதைக் கடந்து வந்தால் (psychological consciousness) அவன் மனிதனாகிறான். நாம் பேசுவது எல்லாம் வெறும்பேச்சு. பேச்சு உணர்ச்சியாகி, செயலாகவேண்டும். செயலானால் பலிக்கும்.
  • ஹிப்பியாக இளைஞர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய பொழுது பெற்றவர் எப்படி வயிறெரிந்தார் என அறிவோம். அது லேசாக சமூகம் அசைவதாகும்.
  • இன்று பிள்ளைகளிருப்பதைப்போல் 100 ஆண்டுகட்குமுன் இருந்திருந்தால், பெற்றோர் மனம் எப்படிக் கலங்கியிருக்கும், எப்படிக் கொந்தளித்திருக்கும் என நாம் கற்பனை செய்யலாம். அது சமூகத் திருவுருமாற்றத்தில் லேசானதென்றால், மனம் அதைக் கடந்தது, உடல் முடிவானது. இன்று பெண்கள் இருப்பதைப்போல் 100 ஆண்டுகட்கு முன்னிருந்திருந்தால் உலகம் ஏற்றிருக்குமா? அதுவே திருவுருமாற்றம்.
  • சொத்துரிமை, வாரிசு, திருமணம் அழியவேண்டும் என்றார் அன்னை. இன்று அன்பர்கள் மனதாலும், உணர்வாலும் அதை ஏற்க முன்வரவேண்டும்.
    • இன்று மனத்தாலும் இவற்றைப் பலரால் நினைக்க முடியாது. உணர்வால் ஏற்பது, நடைமுறைக்கு வருவது என்பது அசாத்தியம். இவை நடைமுறைக்கு வந்தால்,
    • எவரும் சொத்து சேர்க்கக்கூடாது.
    • உள்ள சொத்தைப் பிள்ளைகட்குக் கொடுக்கக்கூடாது.
  • திருமணம் என்ற பழக்கம் கைவிடப்பட வேண்டும்.
  • ஒரு வீட்டில், ஆபீசில், கட்சியில் இன்று சுயநலம் எப்படிச் செயல்படுகிறது என நாம் அறிவோம். கடையில் வியாபாரம் பெருகும் பொழுது, முதலாளிக்கு அதிக வருமானம் கண்ணில் படுவதில்லை. கமிஷனுக்காக வேலை செய்பவர் அதிகக்கமிஷன் பெறுவது கண்ணை உறுத்துகிறது. "அதிக லாபம் வாராவிட்டாலும் பரவாயில்லை, சேல்ஸ்மேன் அதிகக் கமிஷன் பெறக்கூடாது" என்பது முதலாளியின் மனம். சேல்ஸ்மேன் அதிகக் கமிஷன் பெறுவது முதலாளிக்கு சந்தோஷம் தருவது மனிதத் தன்மை. அந்த முதலாளி சுயநலத்தைக் கடந்து வருபவர்.
  • சுயநலமான போக்கும், அன்னைக்குரிய மனநிலையையும் சில ஒத்திட்டுப் பார்ப்போம்.
    • சேல்ஸ்மேனுக்கு அதிகக் கமிஷன் இல்லாமல், தன் இலாபம் பெருக மனிதன் விரும்புகிறான்.
      சேல்ஸ்மேனுடைய அதிக வருமானம், முதலாளிக்குச் சந்தோஷம் தர வேண்டும்.
    • உடன்பிறந்தவர், சக ஊழியர்களுடன் போட்டியிடுகிறோம்.
      உடன்பிறந்தவரும், சக ஊழியரும் முன்னேற உழைக்க வேண்டும்.
    • நெருக்கடி வந்தால் பொய் சொல்லித் தப்பிக்க முயல்வது.
      உண்மையிலிருந்து வழுவாத நிலை.
    • பிறர் அதிர்ஷ்டம் மனிதனுக்குப் பொறுக்கவில்லை.
      பிறர் வாழ்வது நம் மனம் மலர்வது.
    • வேலைக்கு மனிதன் கசங்குகிறான்.
      வேலை தெம்பு அளிக்க வேண்டும். வேலை செய்ய ஆசைப்பட வேண்டும்.
    • பிறர்மேல் சந்தேகம் எழுகிறது.
      சந்தேகம்எழ முடியாத சந்தோஷம் எழவேண்டும்.
    • தன்னை மட்டும் மனிதன் நம்புகிறான்.
      நம்பிக்கைக்குப் பாத்திரமானவரை கட்டாயம் நம்ப வேண்டும்.
    • பிறரை மட்டமாகப் பேசுகிறான்.
      பிறரை உயர்வாக நினைக்க வேண்டும், பேச வேண்டும்.

மேற்சொன்னபடி மனம் மாறுவது விரும்பத்தக்கது. இது போன்ற பட்டியலை முழுமைப்படுத்தி, அதன்படி நடப்பது சிறப்பு.

  • உடலின் ஜீவியமும், அதன் பொருளும் திருவுருமாறினால் யோகம் பூர்த்தியடையும். நாம் இங்கில்லை.
  • நமக்கு நாமுள்ள இடம் முக்கியம்.
  • சமூகமும், தர்மமும், நியாயமும், குறிப்பாக நாமும் - அகந்தையும் - நமக்கு முக்கியம்.
  • வேறு வகையாகச் சொன்னால், நமக்குப் பொது விதியைவிட சொந்த விஷயம் முக்கியம். The personal is more important than the impersonal. ஓர் ஆபீசில் (micronutrient expert) குறிப்பிட்ட வல்லுனரைத் தேடி அலுத்தபிறகு, 1970இல் அவர் கிடைத்தார். அவர் சர்க்காரில் அன்று 650 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார். கம்பனி அவருக்கு எந்தச் சம்பளமும் கொடுக்கத் தயாராக இருந்தது. அவர் ரூ.2000 கேட்டார். அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அக்கம்பனி விதிப்படி புதிய ஊழியருக்கு அவர் தற்சமயம் பெறும் ஊதியத்தைப்போல் இரு மடங்குக்கு மேல் தரக்கூடாதுஎன்பது சட்டம். எனவே அவர் ரூ.1300/- சம்பளத்தை ஏற்று வேலையில் சேர்ந்தார். சந்தர்ப்பம் மாறி 15ஆம் நாள் அவர் பழைய வேலைக்குப் போக வேண்டியதாயிற்று. கம்பனிச் சட்டத்தை அவர் மனம் ஏற்காமல், தம் அபிப்பிராயம் பூர்த்தியாக வேண்டும் என மனதால் வலியுறுத்தியதால், நிலைமை மாறியது.
  • இம்மாறுதல்கள் புரியும்படி சில உதாரணங்களைக் கருதுவோம்.
  • டிரஸ் மாறுகிறது. அனைவரும் மாறுகின்றனர். சிலர் மாறுவதில்லை. சட்டமோ, சமூகமோ இதைச் செய்யும்படி நம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. நமக்கே மாறவேண்டும் என்ற எண்ணம் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. திறனற்றவர் சமூகத்தில் மாறாவிட்டால் அவர் மனம் சங்கடப்படும்.
  • வேலை தேவையில்லாதவர் வேலைக்குப் போகாவிட்டாலும், திருமணம் தேவைப்படாதவர் திருமணம் செய்து கொள்ளா விட்டாலும், சமூகம் அவர்களைக் கண்டிக்கும், கட்டாயப்படுத்தும். அக்கட்டாயத்திற்கு இணங்குபவருக்கு முரண்பாடு, உடன்பாடு என்றால் புரியாது. முரண்பாடு முரண்பாடாகவேயிருக்கும். உடன்பாடு என மனத்தாலும் நினைக்க முடியாது. சமூகம் அறிவதை அவனும் அறிவான். சொந்த புத்தியிருந்தாலும் வேலை செய்யாது. அனந்தனின் தர்க்கம் அவனுக்குப் புரியாது. வைக்கோல் போரும் தங்க மோதிரமும் ஒன்றாக அவனுக்குத் தெரியாது. பணக்காரன் அவனுக்குப் புத்திசாலியாகவும், நல்லவனாகவும் தெரிவான்.
  • சமூகத்தை முடிவுஎனக் கருதுபவனுக்கு Life Divine புரியாது. தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டவருக்கும் புரியாது. எந்த பங்கமுமில்லாத தெளிவான அறிவுக்கு Life Divine புரியும்.
  • இந்தியராகிய நாம் கர்மத்தை நம்புகிறோம். கிறிஸ்துவர்கள் நரகத்தையும் மோட்சத்தையும் நம்புகின்றனர். மத நம்பிக்கையைக் கடந்து மனிதனுக்கு மனசாட்சி, நியாய மனப்பான்மையுண்டு. அவனுக்குக் கொடுமையாகாது. ஸ்ரீ அரவிந்தர், "இதயம் இடையறாத இன்பத்தைப் பெறவல்லது" என்று கூறுவது இப்படிப்பட்டவருக்குப் புரியாது. தர்ம, நியாய மனப்பான்மை இக்கருத்தை அறிய சிரமப்படும்.
  • தானே படித்தவனுடைய அறிவை, பட்டத்தைப் போற்றுபவன் அறிவான். ஊரும், உலகமும், கல்லூரியும், பட்டமும் அவனுக்கு முக்கியம். படிப்பு, பட்டத்தைக் கடந்ததுஎன அவனால் அறிய முடியாது.
  • பூனை சரியில்லாத தன் குட்டியைக் கொல்வதையும், மீனைப் பிடித்துச் சாப்பிடுவதையும் இப்படிப்பட்டவர்களால் பொறுக்க முடியாது. ஆத்மாவின் அனுபவம் முடிந்ததால் அது உடலை விட்டுப் போக வேண்டும் என்பதை அவரால் ஏற்க முடியாது, உடல் பதைபதைக்கும், உள்ளம் உருகிக் கரையும், கவலை கட்டு மீறும்.
  • Life Divineஇல் எந்தக் கருத்துப் புரியவில்லை, எந்த மனநிலை புரிவதற்குத் தடையாக இருக்கிறதுஎன்று காணவேண்டும். Life Divine கருத்துகள் நம்முள் எந்த மனநிலையையும் புண்படுத்தும். அதைக் காண்பது ஆராய்ச்சி.
  • அறிவுக்குப் புரியாதது ஜீவியத்திற்குப் புரியும்என்கிறார் பகவான். மனம் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் இது புரியாது, சப் என்றிருக்கும். காரணம் உணர்ச்சிக்கு ஜீவியம் புரியாது; தடை.
  • திருடனுடைய அடி திருவடி, விபசாரியின் கற்பு உயர்ந்தது என்கிறார் பகவான். இதைக் கேட்டால் கர்ணகடூரமாக இருக்கும், எரிச்சல் வரும். இது புரிய வேண்டியதில்லைஎன மனம் கூறும். எது எப்படியானாலும், கருத்து புரியாது.
  • செயல் வீரனிடம், "அனந்தம் எடுத்தால் குறையாது" என்றால், அவன், "இதையெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை" என்பான். அவன் மனம் ஸ்தூலமானது; ஜடமானது.
  • இவற்றை ஏற்று, ஆராய்ச்சி செய்தால், மனம் மாறுவது - தலைகீழாக மாறுவது - தெரியும். Life Divine புரியக்கூடிய மனநிலை உற்பத்தியாகும்.

சில முக்கியக் கருத்துகள்

  1. அறியாமையின் ருசி முடிந்தது.
    சிறந்தவராலும், இதை உணர முடியாது. உடலால் அறியும் அளவு இன்று மனிதன் விழிப்பானவனாக இருக்கவில்லை.
  2. ஆன்மா உலகை ஆளும்என்ற கருத்து அறிவுக்கு அப்பாற்பட்டது. ஆன்மா என்பதை நாம் கண்டதில்லை. அது எண்ணம். சத் மாறி ஜடமான ஆன்மா உலகையாளும். மனிதன் என்பது மனம், உணர்வாகவுமிருப்பான். அவனுக்கு இக்கருத்து காததூரம்.
  3. புறம், அகமானால், காரியம் உடனே முடியும். காலத்தில் வாழும் மனிதன் கடந்ததைக் கடந்த நிலைக்குப் போவது இது. மனிதன் காலத்துள், காலத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வாழ்கிறான்.
  4. காலத்தைவிட்டு வெளியேறியவனுக்கே காலத்தின் 3ஆம் நிலை புரியும். நாம் அகந்தையுள், மனத்துள், காலத்துள் வாழ்கிறோம்.
  5. ததாஸ்து என மாயை உலகை சிருஷ்டித்ததுஎன்பது அற்புதமாக இருக்குமே தவிர அறிவுக்கு விளங்காது. சூட்சுமம் தெரிந்தால் புரியும்.
  6. ஆசை இயலாமை. ஆசையை பலமாக நினைக்கும் மனிதன் எப்படி ஆசை இயலாமைஎன ஏற்பான்.
  7. தெய்வீக உடல் என்ற சொல்லைப் பயன்படுத்திய பகவான் தெய்வம் பயன்படுத்தும் உடல் என நமக்காக மாற்றிச் சொல்கிறார். பொய்யான காயம் தெய்வீகமாகும்என நம்புவது கடினம்.
  8. கடவுள்கள் தங்கள் ஜோதியில் தங்களை மறந்துவிட்டனர். விலங்குக்குத் தேவையென்பதில்லைஎன்கிறார் பகவான். மனிதன் தன் ஆசையில் மூழ்கித் தன்னையும், உலகையும் மறந்திருக்கும் பொழுது அவனுக்கு இக்கருத்து எப்படி ஏற்புடையதாக இருக்கும்?
  9. அடிமனம் மேல்மனத்தை வற்புறுத்தி நோய், நஷ்டம், விபத்து ஆகியவற்றை நாடுகிறது. சூரியன் உலகைச் சுற்றி வருவது தெரிகிறது. உலகம் சூரியனைச் சுற்றி வருவது தெரியவில்லை. அந்நிலையில் எது புரியும், எப்படிப் புரியும்? எனக்கு நஷ்டம் வந்துவிட்டதுஎன்று நான் கவலைப்படும் பொழுது, நானே நஷ்டத்தை நாடுகிறேன்என்பது உணர்வுக்கு ஏற்காதுஎன்பதுடன், அறிவுக்கும் பொருத்தமில்லைஎன்பான் மனிதன்.
  10. சத் என்பதின் வீச்சு Real-Idea ஜீவனுள்ள எண்ணம். அதில் அறிவும், உறுதியும் இணைந்துள்ளன. நினைத்தது நடக்கும்என்ற கருத்து நமக்கு நடைமுறையில் இல்லை. இந்த அனுபவமில்லாமல், இதை எப்படி ஏற்க முடியும்?

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சாரத்தைச் சேர்ப்பது சைத்தியபுருஷன். எனவே பூரணம் அவனில் ஆரம்பிக்கின்றது. எல்லாப் பகுதிகளின் சைத்திய புருஷன் வெளிவந்தால் பூரணம் முதிர்கிறது, முதிர்ந்து சேருகின்றது. சத்தியஜீவியம் முதிர்ச்சியடைந்தால் (psychic substance) ஜடத்தின் திடத்தன்மையை அடைந்து சத்தியஜீவனாகிறது.
 
சைத்தியபுருஷன் சாரத்தால் வளர்வது.



book | by Dr. Radut