Skip to Content

06.அஜெண்டா

“Agenda”

We need not intervene if we are identified with the Supreme.

நாம் சத் புருஷனுடன் ஐக்கியமானால் எவர் விஷயத்திலும் தலையிடவேண்டாம்.

குடும்ப நிர்வாகம், தொழில் நிர்வாகத்தில் வேலைகளைக் கவனிக்க சூப்ரவைசர், மானேஜர், டைரக்டர் எனப் பலர் பல நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். டைரக்டர், சூப்ரவைசர் வேலையில் தலையிடமாட்டார். வேலையின் தரம் உயர்ந்தால், தலையிடுவது குறைவாக இருக்கும்.

குடும்பத்தில் வேலைக்காரர்கள் திருடுபவர்களாக இருந்தால் மிகக் கண்காணிப்பாக இருக்கவேண்டும். பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாக இருந்தால், கவனிக்காவிட்டால் படிக்கமாட்டார்கள். கெட்ட பழக்கம் வரும். பொறுப்பான நல்ல பிள்ளைகளைக் கவனிக்கவேண்டிய அவசியமில்லை. திருடாத வேலைக்காரர்கள், பொறுப்புள்ள நல்ல பிள்ளைகள் இருக்க வேண்டுமானால்,

  • தகப்பனார் பிள்ளைகட்கு அதிகச் சுதந்திரம் தரவேண்டும்.
  • எந்த அளவு பெரியவர்கட்குச் சிறுவர்கள்மீது நம்பிக்கை இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சிறுவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.
  • பெரியவர்கட்கு நம்பிக்கை அதிகமாக, அவர்கள் மனம் உயர்ந்திருக்க வேண்டும்.
  • மனம் உயர்ந்தால், அது ஆத்மாவாகும்.
  • ஆத்மா உடலிலும், உணர்விலும், மனத்திலும், ஆன்மீக மனத்தின் 4 நிலைகளிலும் சத்தியஜீவியத்திலும், சித்திலும், சத்திலும் உள்ளது.
  • ஆன்மா உயர்ந்தால், நம் ஆன்மீக நிலை உயருகிறது.
  • சத் என்பதே முடிவானாலும், சத்தில் பல நிலைகள் உள்ளன.
    1. க்ஷரப் பிரம்மம்
    2. அக்ஷரப் பிரம்மம்
    3. காலத்திற்குட்பட்ட பிரபஞ்சம்
    4. காலத்தைக் கடந்த பிரபஞ்சம்
    5. சத்தியம் என்ற புறம்
    6. ஆன்மா என்ற சத்தியத்தின் முன்நிலை
    7. சத் என்ற அகம்
    8. அகம், புறத்தைக் கடந்த சத்.

அங்கும் சத் புருஷன், சத் பிரம்மம் என்ற இருநிலைகள்.

காலத்தையும், அகம்-புறம் என்பவற்றையும், பிரபஞ்ச சிருஷ்டி என்ற நிலையையும் கடந்த "சத்" என்பது Supreme என அன்னை குறிக்கிறார். அதை நாம் அப்பாலுள்ளது, அப்பாலுக்கும் அப்பாலுள்ளது என்கிறோம். பிரம்மம் இதையும் கடந்தது. ஏனெனில் இத்தனையும் சிருஷ்டியில் உள்ளன. பிரம்மம் சிருஷ்டிக்கும் அப்பாற்பட்டது. ருவர் Supreme என்ற சத்புருஷனுடன் ஐக்கியமானால், அவர் வீட்டிலும், தொழிலிலும், ஊரிலும், எதிலும் தலையிட வேண்டாம் என அன்னை கூறுகிறார்.

100 ஏக்கர் இந்த ஜில்லாவில் அதிகப்பட்ட நிலம். அவ்வளவு நிலம் உள்ளவர் இந்தப் பகுதிகளில் இவர் ஒருவரே. தஞ்சாவூர் ஜில்லாவில் (உச்சவரம்புக்கு முன்) 100 ஏக்கர் உள்ளவரை 13 வேலி நிலமுடைய சிறு மிராசுதார் என்பார்கள். அங்கு 1000 ஏக்கர், 5000 ஏக்கர் நிலமுள்ளவர் அந்த நாளில் இருந்தனர். இப்பகுதியில் இந்தச் சிறு மிராசுதாரரைப் பெருநிலக்கிழாராக நடத்துவர். அவர் ஊரில் இருப்பதேயில்லை. வேலை தானே நடக்கும். மாதம் சில நாள் ஊரிலிருப்பார். நிலத்திற்கும் சமயத்தில் வருவார். அவர் ஊரில் இருந்தால் கழனியில் வேலை விரைவாக நடக்கும். நிலத்தில் தகராறு, கூலிப்பிரச்சினை, வேலை சரியில்லை என்பவை அவர் அறியாதது. அவரிடம் வேலை செய்ய ஆட்கள் பிரியப்படுவர். அவர் நிலத்தில்

  • ஊர் தகராறு
  • ஜாதிப் பிரச்சினை
  • அடிதடி சண்டை
  • திருடு

என்பவை அவர் நாளில் கேட்டறியாதவை. நாட்டில் லஞ்சம் தலை எடுக்காத காலம். மிராசுதாரர் சுதந்திரப் போராட்டத்தின் தலைவர். தலைவர், முதல்வர் நேர்மையானவரானால், ஆட்களைக் கண்காணிக்கும் வேலையில்லை. நிர்வாகம், குத்தகை, வேலை, நடவு, அறுவடை, காவல், களம், நெல் விலை, விற்பனை எதிலும் அவர் தலையிட்டதில்லை ஏனெனில் தலையிட வேண்டியதில்லை.

  • மனம் உயர்ந்து இலட்சியத்துடன் ஈடுபட்டிருப்பதால் தலையிடும் அவசியமில்லை.

குடும்பம் அது போலிருக்கலாம், கட்சி அதுபோல் அமையலாம், ஸ்தாபன நிர்வாகம் அதற்கு எடுத்துக்காட்டாக அமையலாம். மேலே சொல்லிய விஷயம் அன்னை கூறியது.

Supreme என அன்னை கூறும் சத் புருஷன் சிருஷ்டியில் தலையிடுவதில்லை. அவனோடு ஐக்கியமான மனிதனும் உலகில் எந்த விஷயத்தாலும் மனத்தால் பாதிக்கப்பட வேண்டாம். அப்படி ஐக்கியமான மனிதன் ஆண்டவன் நிலையில் உள்ளவன். நம் ஸ்தாபனத்தில், அல்லது குடும்பத்தில் உள்ள நிலை நமக்குத் தெரியும். நம் மனம் எந்த இலட்சியத்துடன் ஐக்கியமாயிற்று என்றறிந்து, ஒரு படி மனத்தை உயர்த்திப் பார்க்கலாம்.

  • பார்க்காவிட்டால் எவரும் வேலை செய்யமாட்டார்கள் என்பது மனித மனநிலை.
  • பார்க்காவிட்டால் உள்ளவர் பொறுப்பாக வேலை செய்வார்கள் என்பது அன்னை கூறும் தத்துவம்.
  • அதை மனதால் ஏற்ற தோட்ட வேலை மானேஜர், தினமும் வேலைக்கு 9 மணிக்கு வந்தவர்கள் அதன்பிறகு 8 மணிக்கு வர ஆரம்பித்ததைக் கண்டார்.
  • மனிதன் தானே வேலை செய்வான் என்பதை நம்ப நம் கடமைகளை நாமே முழுவதும் நிறைவேற்ற வேண்டும். பிறர் மீது அத்துடன் நல்லெண்ணமும் அபரிமிதமாக இருக்க வேண்டும்.

****

ஜீவிய மணி

உறுத்தல் மறந்துபோனால்,

நாம் மனத்தைக் கடந்துவிட்டோம். 

Comments

06.அஜெண்டா Para  14    -  

06.அஜெண்டா
 
Para  14    -   Line  2   -    "சத்'                                    -     "சத்"
Para   15   -   Line  3   -    வேநிலமுடைய          -     வேலி நிலமுடைய
 



book | by Dr. Radut