Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னையின் மலர்ப் பாதங்களுக்கு அநேக நமஸ்காரங்கள்.

இக்கடிதம் எழுதுவதின் மூலம் ஸ்ரீ அன்னையின் பக்தர்களுக்கும், ஈடுபாடு கொண்டவர்களுக்கும் மேலும் ஸ்ரீ அன்னை மீது பக்தி வளரத் தூண்டுகோலாய் இருக்கும்.

என் சகோதரி சில ஆண்டுகளாக சர்க்கரை வியாதியால் கஷ்டப்பட்டு வருகிறாள். அவளுடைய கணவரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இடமுட்டிக்கால்வரை அறுவை சிகிச்சை பெற்று பின் சில காலம் இருந்து இறந்துவிட்டார்.

என் சகோதரியும் சர்க்கரை நோயினால் அவதிபட்டு அவர் கணவர் போலவே இடக்கால்வரை புரை ஓடி நாற்றம் எடுத்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சென்ற வாரம் (1.2.03) சேர்த்தோம்.

டாக்டர்கள் கால், இதயம், கிட்னி, போன்றவைகளை X-ray, scan, ECKO test எல்லாம் செய்தனர். காலை இடமுட்டிக்கால் வரை எடுத்துவிடவேண்டும். இல்லையெனில் கிட்னி பாதிக்கும் என கூறினார்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் இதயத்துடிப்புக் குறைவாக உள்ளது, weak, மயக்க மருந்து கொடுக்கும்போதோ அல்லது அறுவை சிகிச்சை செய்யும்போதோகூட மரணம் சம்பவிக்கலாம் என்று பயமுறுத்தினார்கள்.

என் சகோதரியும், நாங்களும் ஸ்ரீ அன்னையின் பக்தர்கள். மாதம் ஒரு முறையேனும் பாண்டி ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமத்துக்குப் போய் வருபவர்கள். ஸ்ரீ அன்னை மீது நம்பிக்கை உடையவர்கள்.

ஆகவே எங்களிடம் இருந்த சிறிய அன்னையின் போட்டோவை என் சகோதரி கையில் வைத்து மூடி அறுவை சிகிச்சை செய்யும்போது எங்களை நினைக்காமல் ஸ்ரீ அன்னையை தியானம் (ஜபி) செய் என்று சொல்லி ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு நாங்கள் எல்லோரும் அழுதோம், இதுதான் அவளின் கடைசிப் பயணம் என்று.

ஆனால் ஸ்ரீ அன்னையின் அருளால் 2 மணி நேரம் கழித்து ஆப்பரேஷன் முடிந்து என் சகோதரியை வண்டியில் வெளியே கொண்டு வந்தார்கள். பயந்தபடியே ஓடிவந்து பார்த்தபோது, என்ன ஆச்சரியம்! என் சகோதரி கண் திறந்து நான் உங்களுக்குத் தங்கையாகவும், அக்காவாகவும் வந்துவிட்டேன் எனக் கூறியபோது எங்களுக்குப் புல்லரித்தது. மயக்கமில்லாமல் நன்றாகப் பேசினாள்.

எப்படி என டாக்டரை கேட்டபோது மயக்க மருந்து கொடுத்தால் தாங்காது என இடக்கால் மறக்க கால் ஊசி போட்டோம் என்றார்.

எங்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஸ்ரீ அன்னையின் திருவடிக்கு நன்றி சொன்னோம்.

பின்குறிப்பு: என் சகோதரியின் கையைப் பிரித்து பார்க்கநாங்கள்   அவள் கையில் கொடுத்து மூடிய ஸ்ரீ அன்னையின் போட்டோ இருந்தது.

என்னே அன்னையின் ஆசிகள், அருள். ஸ்ரீ அன்னையை நம்பினோர் கெடுவதில்லை.


 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

"நாம் வேறு; நம் வாழ்வு (existence) வேறு'' என அறிவது தன்னையறிவதாகும்.

வாழ்வைப் பிரித்தறிவது ஞானம்.


 


 



book | by Dr. Radut