Skip to Content

13.தபால்

தபால்

ஆபீசுக்குத் தபால் வழக்கத்திற்கு அதிகமாக வந்துள்ளது. வழக்கமாகத் தபால் கட்டு, அதிகாரியின் பார்வைக்குப் போய் வர மணி இரண்டாகும். அதிகமான தபால் வந்ததால் சீக்கிரம் கட்டு கீழே வந்தால் வேலை செய்ய சௌகரியம் என்பது தபால் கிளார்க்கின் நினைப்பு. கேட்கும் நிலையில் அவரில்லை.

கட்டு மேலே போயிற்று. ஏதோ காரணத்திற்காக அதிகாரி தம் அறையிலிருந்து வெளியே வந்தவர் கட்டை வாங்கிப் பார்த்துவிட்டு கீழே அனுப்பிவிட்டார். அந்த நேரம் மணி ஒன்று. ஆபீசில் இது எதிர்பாராத அனுபவம். அனைவரும் சந்தோஷமாகப் பேசினர். "என்ன விஷயம்? எப்படி நடந்தது?'' என்று பலரும் நினைப்பதை ஒருவர் பேசினார்.

தபால் கிளார்க்கை அனைவரும் கண் வைத்துப் பார்த்தனர். அவர் முகம் ஒளிபொருந்தி மலர்ந்திருந்தது. "யாரையும் கேட்பதற்குப் பதிலாக, அன்னையைக் கேட்டால் நடக்கும்'' என அடிக்கடி என் காதில் விழுவதுண்டு. அதிலெல்லாம் எனக்கு அதிக நம்பிக்கையில்லை. சொல்லிப் பார்ப்போம் என மதரிடம் கூறினேன் என்றார்.

மனிதர்களைக் கேட்பதற்குப் பதிலாக

மதரைக் கேட்பது மேல்.

அது நடக்கும்.


 



book | by Dr. Radut