Skip to Content

09. லைப் டிவைன் -கருத்து

"லைப் டிவைன் -கருத்து"

P. 71. அகந்தையினின்று விலகி, ஆர்வம் நிறைந்த பார்வையோடு உலகை நோக்கினால் ஹிருதய சமுத்திரம் தெரியும்

நிலைமை அப்படியேயிருந்து நம் மனம் மாறுவதால் மட்டும் பிரம்மாண்டமான மாறுதல்கள் வாழ்வில் ஏற்படுவதை நாம் அறிவோம். கடைப் பையனாக வேலை செய்து வந்தவன் கோடீஸ்வரன் மகன், சிறுவயதில் தொலைந்துவிட்டான், இன்று வரை அவன் பெற்றோர்களுக்கு அவன் இங்கிருப்பது தெரியாது, இன்று தெரிந்துவிட்டது எனில் அவன் வாழ்வில் ஏற்படும் மாறுதல் பெரியது. அதேபோல் எதிரான செய்தியும் உண்டு. வாழ்வில் உயர்ந்து, பதவி வகிக்கும் பொழுது அவருடைய பிறப்பு விசேஷம், அவரும் அறியாதது, வெளியில் வந்தால், அத்தனையும் போய்விடும்.

  • உலகம் அற்புதமான சலனமுள்ள சக்தியான சமுத்திரம்.
  • வேதத்தில் இதை ஹிருதய சமுத்திரம் என்றனர்.
  • மனிதன் இதை அறிய முடியும்.
  • கவிகளும், முனிவர்களும் மட்டுமே இதைக் காண்கின்றனர்.
  • நாம் உலகை அகந்தை என்பதன் மூலம் காண்பதால் துன்பமும், துயரமும் தெரிகிறது.
  • உலகம் அற்புதக் காட்சி.
  • அகந்தையை அழித்து, ஞானக்கண் திறந்து பார்த்தால் இச்சலனம் தெரியும்.
  • Wordsworth என்ற ஆங்கிலக் கவி இது போன்ற சில வரிகளை எழுதியுள்ளார்.
  • கவிகளும், கலைஞர்களும் இதைத் தவறாது ஏதோ ஓரளவில் காண்கின்றனர்.
  • இந்தப் பார்வைக்கு உலகம் ஜடமாகத் தெரியாது. சலனமான அலைகளாகத் தெரியும்.

The Life Divineஇல் 9ஆம் அத்தியாயம் சத்-புருஷன். மேற்சொன்னது அத்தியாயத்தின் முதல் வரி. அன்னை படத்துள் உயிருடனிருப்பதை, அவர் கண்கள் நகருவதை, படத்தைவிட்டு ஸ்ரீ அரவிந்தர் வெளிவருவதை அன்பர்கள் கண்டுள்ளனர். அவர்கள் யோகத்தை மேற்கொண்டால் ஹிருதய சமுத்திரம் தெரியும். சிருஷ்டிக்கு முன் இருந்தது இச்சமுத்திரம். அதன் முதன் அசைவை வித்து, seed, பீஜம் என்கின்றனர். அதிலிருந்து எழுந்ததே உலகம், பிரபஞ்சம். நாம் அதுபோன்று கருவிலிருந்து உற்பத்தியானோம். அப்படி உற்பத்தியானது உடல். அதேபோல் மனத்திற்கும், உணர்வுக்கும் கருவுண்டு. உணர்வின் கருவை அடைந்தால், வாழ்வு அதிர்ஷ்டமயமாகும். மனத்தின் கருவை எட்டினால் மனத்தில் மேதை பிறப்பான்.

  • ஆசையையும், அகந்தையையும் விலக்கினால் உணர்வின் கருவான பிராணமயப் புருஷனை அடையலாம் (The Life Divine - page 169).
  • மனத்தில் கோபம் போன்ற உணர்வு எழும்பொழுது அதினின்று பிரிந்து விலகினால், முதலில் அகந்தையும், முடிவில் மனத்தின் கருவையும் காணலாம் (The Life Divine - page 514-515).

ஹிருதய சமுத்திரம் இன்று உற்பத்தியாகவில்லை. உலகம் சமுத்திரமாகவே என்றுமிருக்கிறது. அகந்தையின் பார்வைக்கு அது நாம் காணும் உலகம் - மார்க்கெட், மனிதர்கள், etc. - ஆத்மாவின் பார்வைக்கு அது சமுத்திரம்.

*****



book | by Dr. Radut