Skip to Content

05. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னை என்னும் அற்புதத் தெய்வம் என் வாழ்வில் பற்பல நன்மைகளையும் அருட்கொடைகளையும் வழங்கிவருகிறார் என்பதை ஏற்கனவே என்னுடைய முதல் கடிதத்தில் தெரிவித்திருந்தேன். அன்னையின் அருளைப் பெறும் வாய்ப்பாக எனக்குக் கிடைத்த ஆனுபவங்களைத் தொகுத்து எழுதும் விரிவாக்கமே இக்கடிதம்.

அன்னை எனும் அருட்கடல் என் வாழ்வில் முதன்முதலில் செயல்படத் தொடங்கிய நாள் ஓர் அன்னை அன்பரிடமிருந்து Mother photo வாங்கிய நாள் என்றே சொல்லவேண்டும். அதுவும் என் தாயார் மூலம் அன்னை தன் presenceஐ எனக்கு உணர்த்தினார். Photo வாங்கி வீட்டில் வைத்து வணங்கிய அன்றே summer holidayக்காக Trichy, Srirangam சென்றோம். அங்குதான் என்னுடைய parents (no sons, only two daughter) வசித்து வந்தார்கள். அங்குப் போன இரண்டு மூன்று நாட்களிலேயே அம்மாவுக்கு மார்பில் கட்டி இருப்பதை யதேச்சையாகக் கண்டுபிடித்து உடனடியாக அதற்குத் தேவையான check-up, test எல்லாம் எடுத்து அங்கிருந்து பின்னர் CMCக்குக் கூட்டி வந்தோம். Cancerஎன்று diagnose செய்யப்பட்டவுடன் shockஆகி பின்னர் சற்று தெளிந்து உடனே operation, radiation சிகிச்சை எல்லாம் மேற்கொண்டோம். நான் கட்டியைப் பார்க்க நேர்ந்தபோதே அது IIIrd stage. இருந்த போதிலும் அதற்குபின் இரண்டு மூன்று ஆபரேஷன்கள் Bombayயில் (அக்கா வீட்டில்) நடந்து அவ்வப்போது தேற்றி, 5 வருடம் இருந்து, recentஆக Julyமாதம் Bombayஇல் காலமாகி விட்டார். இதை எழுதும் போது மனம் துயரமடைகிறது. இருந்தாலும் அன்னையின் அருள்தான் அம்மாவின் நோயை எனக்குக் காட்டிக் கொடுத்து, தக்க சமயத்தில் treatment எடுக்கச் செய்து 5 வருடங்கள் அம்மாவை அப்பாவுடன் இருக்கச் செய்தது என்பதை என்னால் என்றும் மறக்க முடியாது. உலகத்துக்கே தாயான ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருமுகத்தைப் பார்த்துத்தான் என் அம்மா மறைந்த மனக்கஷ்டத்திலிருந்து மீண்டிருக்கிறேன்.

அடுத்து, எங்கள் வாழ்வில் சுபீட்சத்தை வாரி வழங்கிய அன்னையின் கருணையைப் பற்றி நான் அவசியம் சொல்லவேண்டும். சிறு வயதிலிருந்தே இறை நம்பிக்கை மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், இறை அருளை நாங்கள் வணங்கிய தெய்வங்கள் மூலமாக உணர்ந்திருந்த போதிலும், திடீர் அதிர்ஷ்டம் luck, lottery இவை எதிலும் எங்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அது போன்ற luck எல்லாம் எனக்குக் கிடையாது என்று சொல்லிக் கொண்டிருந்தவள் நான். 1997ஆம் வருடம் ஜனவரி மாதம் 10ஆந் தேதி ராணிப்பேட்டை Mother-Centre சென்றிருந்தேன். அன்று என் கணவர் பிறந்தநாள். அங்கு ஓர் அன்பர் கையால் அருமையான சிறிய அன்னை ல்ட்ர்ற்ர் கிடைக்கப் பெற்றேன். படம் கிடைத்த இரண்டு மாதங்களிலேயே என் கணவர் பெயருக்கு post-office small savings scheme வாயிலாக தள். Rs.Two lakhs பெறுமானமுள்ள Maruti Van ஒன்று பரிசாக (1st prize) கிடைத்தது. அனைவருக்கும் ஆச்சரியம். எங்களுக்கோ மிகுந்த சந்தோஷம். நான் இதுவரை luck பற்றி நினைத்திருந்ததை பொய்யாக்கி Mother எங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கினார். ஆனால் இது அன்னையால் நடந்தது என்று புரிந்து கொள்ள எனக்குச் சில மாதங்களாயின. அவ்வாறு அன்னையின் மகிமையால்தான் நடக்கிறது என்று புரிந்து கொள்ள வைப்பதற்கு அன்னை மறுபடி மறுபடி பல சம்பவங்களையும், வாய்ப்புகளையும் வழங்கினார். புத்தகங்களில் நீங்கள் எழுதியுள்ளது போல் ஒரு court case விஷயமும் அன்னையின் செயல்பாட்டை எனக்கு உணர்த்தியது. என் தந்தைக்கு 1985ஆம் வருடம் தஞ்சாவூரில் நடந்த accidentக்கு பல வருடங்களாக compensation கிடைக்காமல் case pendingஇல் இருந்தது. நாங்கள் எல்லோரும் அதை மறந்துவிட்டோம். திடீரென்று court caseஐ எடுத்துக்கொண்டது. அன்னையின் கருணைப் பார்வை அதன்மேல் பதிய, ரூ. 2 லட்சம் தரச் சொல்லி courtஇல் தீர்ப்பளித்து அதை இழுத்தடிக்காமல் கொடுத்தும் விட்டார்கள். இதுவும் நான் அன்னையை வணங்க ஆரம்பித்தபின்தான் நடந்தது.

இப்போது நினைத்தால் அன்னையின் மகிமையும் சிறப்பையும் உணர எனக்குத்தான் awareness குறைவாக இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. மற்றுமோர் ஆச்சரியமான திருப்பமும் எங்கள் வாழ்வில் ஏற்பட்டது. என் தாயாரைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். Cancer வந்து இறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அவருடைய பிறந்த வீட்டிலிருந்து சற்றும் எதிர்பாராத விதமாக Rs.3 லட்சம் தாய் வழிச் சொத்தாக வந்து சேர்ந்தது. இந்தப் பணம் வந்தது அன்னை கொடுத்த ஐஸ்வர்யம் என்று நான் எடுத்துக் கொண்டாலும் அதைவிட இன்னுமொரு விஷயம் இதில் அன்னையின் கருணையை எனக்கு எடுத்துச் சொன்னது மிகவும் சாத்வீகமான நல்ல nature உடைய என் தாயார், தன் கணவருக்காக பிறந்த வீட்டாரோடு 20, 25 வருடங்களாகத் தொடர்பு இல்லாமல் இருந்தார். அப்பாவுக்கும் அவர்களுக்கும் ஏதோ misunderstanding. இருந்தாலும் பெற்ற பாசத்தையும் சகோதரபாசத்தையும் மனதில் பூட்டி வைத்த என் அம்மா எல்லோரையும் பார்க்கம் சந்தர்ப்பத்தை அன்னை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்களாகவே வலிய மனமுவந்து வந்து என் தாயாரைப் பார்க்கவேண்டும் என்று கெஞ்சிக் கொண்டதன் பேரில் அப்பாவும் எங்களுக்காக (பெண்களுக்காக) சம்மதித்து அவர்களைப் பார்க்க அனுமதித்தார். அம்மாவுக்கு இருந்த அந்த மனக்குறையும் நீங்கியது. பிறந்த வீட்டுச் சொத்தாகப் பணமும் கையில் வாங்கி எங்களிடம் கொடுத்துவிட்டுத்தான் அம்மா இறந்தார். பணத்திற்குப் பின் இதிலெல்லாம் அன்னையின் அருள்தான் எனக்குப் பிரத்யட்சமாகத் தெரிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அன்னையை அறிந்த 4, 5 வருட காலத்தில் இதுபோல் நடந்தவுடன் இவை எல்லாவற்றிற்கும் அன்னைதான் காரணம் என்று நன்றாகப் புரிந்துகொண்டேன். அன்னைக்கு இவற்றிற்கெல்லாம் நன்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். அதற்கு முடிவோ, எல்லையோ இல்லை.

எனக்கு ஒரு பெண், ஒரு பிள்ளை. பெண்ணின் பெயர் Vidya Sagari. பையனின் பெயர் Dilip Srinivas.. பெண்ணிற்கு Mother's graceஆல் போனவருடம் computer science course college Ist rank வாங்கி ஆந்த வருடம் மட்டும் Ist rankக்கு Rs.12,000 scholarshipகொடுத்தார்கள். அதற்குபின் Ist rankersக்கு கொடுக்கவில்லை. அதற்கு முன்பும் அவ்வளவு பெரிய தொகை கொடுக்கவில்லை. இது அன்னையின் அருளாலன்றி வேறில்லை. பையன் இந்த வருடம் March 1st XIIth Board Exam (C.B.S.E.) எழுதுகிறான். அவனுடைய resultஐயும் அன்னையிடமே விட்டுவிட்டேன். என் இரு குழந்தைகளின் future, அவர்களுடைய prosperity, சந்தோஷம், ஆரோக்யம் இவைகளுக்கு அன்னையின் அருளையும் தங்களுடைய ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்.

பொதுவாகவே அன்னையை அறிந்த பிறகு எங்கள் குடும்ப ஆரோக்யம், சுமுகம், சந்தோஷம் இவை முன்பைவிட அதிகரித்துள்ளன. அன்னை தரும் அரவணைப்பில் வாழும் நான் தாங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளதுபோல் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளதாக உணர்கிறேன். தவறுகள், சில சுபாவக் குறைபாடுகள், பலஹீனங்கள் இவைகளைத் திருத்திக் கொள்ள முயன்று செய்து வருகிறேன். I am also trying to follow thesacred practice of surrendering my will and accepting God's will done to me through Mother.

வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் இறைவனின் திருவுள்ளத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எனக்கு அருள அன்னையை வேண்டுகிறேன். மறுபடியும் தங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறாகப் பற்பல அரிய நன்மைகளையும் அருட்கொடை- களையும் வழங்கும் அன்னையை வாழ்வில் அறியவும், அவருடைய மகிமையை உணரவும் தங்களுடைய புத்தகங்கள் எனக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சக்தியை விரயம் செய்வது எல்லா நிலைகளுக்கும் உண்டு. உடலில் உணர்வு என்பதுபோல் மனத்திற்கு எண்ணமுண்டு. எதிர்பார்க்கும் எண்ணமும், அவசரமும் அதற்குச் சமமானவை. உடல் உணர்வைக் கட்டுப்படுத்த, எண்ணத்தில் பொறுமையின்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 
அவசரம் அதிக விரயம்.book | by Dr. Radut