Skip to Content

04. சாவித்ரி

“சாவித்ரி”

A love that bore the cross of pain with joy

வேதனை என்ற சிலுவையை மகிழ்வுடன் ஏற்ற அன்பு

மாந்தரின் பாவத்தைத் தாம் ஏற்று, சிலுவையில் தம்மைத் தியாகம் செய்தார் ஏசுபிரான் என்ற வரி சாவித்ரியில் உள்ளது.

இங்கிலாந்தில் ஸ்ரீ அரவிந்தர் பயின்ற இடங்களில் அவருடைய மார்க்குகளைப் பார்க்க புராணி என்ற சாதகர் போகும் வழியில் கென்யா என்ற ஆப்பிரிக்க நாட்டிற்குப் போயிருந்தார். அயல்நாட்டுப் பிரயாணத்தை மேற்கொண்டவர்க்கு பிரச்சினைகள் தெரியும். அரசாங்கத்துடன் அதிகத் தொடர்புள்ளவர்கட்கும் documents நாம் கொண்டு போகும் தஸ்தாவேஜுகளின் முக்கியத்தைப் பற்றித் தெரியும். புராணிக்கு பாஸ்போர்ட், விசா சரியாக இருந்தாலும், கென்யா ஆபீஸ் அவற்றை ஏற்க மறுத்தது. அவர் காந்தியவாதி, ஆபீசுக்கு எதிரே வெய்யிலில் உட்கார்ந்து சத்தியாக்கிரஹம் செய்தார். அந்த ஆபீஸ் பியூன் அவரிடம் வந்து தன் வீட்டிற்கு வரச் சொன்னான். புராணி, நான் உன் வீட்டிற்கு வந்தால், உனக்குத் தொந்திரவு வரும் என்றார். அவன் "My house is my house அது என் வீடு, எவருக்கும் கேட்க உரிமையில்லை'' என்று கூறி அவரை அழைத்தான். ஆபீஸ் மனம் மாறியது. புராணி கவர்னருக்கு எழுதினார். நடந்ததைக் கூறினார். பியூனுடைய பெரிய மனதை வியந்தார். அவனே உண்மையான கிருஸ்துவன் என்றார்.

"சாவித்திரி''யைப் பிரித்து இப்பகுதியைப் படித்து மேற்கூறிய வரிக்கு வந்தார். கவர்னர் நெகிழ்ந்து போனார். எழுந்து வந்து புராணியிடம் தனக்கு அப்புத்தகம் வேண்டும் என்றார். குடும்பங்களில் இதுபோல் அன்புடன் தியாகம் செய்யும் நேரம் உண்டு. அதைச் செய்பவரும் உண்டு. தியாகம் செய்தவர், தியாகம் செய்ததால் கீழே போய், பலனைப் பெற்றவர் மேலே வருவார்.

  • தியாகம் செய்யும் மனம் உள்ளவர் அநேகர்.
  • தியாகத்தைச் செய்தபின் அவருள்ளம் பூரிக்கும்.
  • பலனைப் பெற்றவர் தம்மைவிட உயர்வதைக் கண்டும் பூரிக்கும் உள்ளம் உண்டு.
  • பலனைப் பெற்றவர், தியாகம் செய்தவர் கீழே போனதால் கேலி செய்யாமலிருக்கமாட்டார்.
  • கேலியை ஏற்க மனமுடையவரில்லை.
  • கேலி கொடுமையானது. அதை மனித இதயம் ஏற்காது.
  • அக்கொடுமையை சந்தோஷமாக ஏற்றது ஏசுவின் இதயம்.
  • அந்த சந்தோஷம் எழுவது அன்னையை ஏற்பதற்கு அடையாளம்.

*****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வெளித் தொடர்பைப் பத்திலொன்றாக, நூறில் ஒன்றாகக் குறைக்க முன்வந்து, மனத்தால் மாறவில்லை எனில், மீதியிருக்கும் உறவுகள், அர்த்தமற்றவையோ அர்த்தம் உள்ளவையோ, பழைய தீவிரத்தை இருப்பதில் ஏற்படுத்த வல்லது. மொத்தத்தில் நிலைமை மாறாது.
 
புறம் அழியும்வரை புத்தி வராது.



book | by Dr. Radut