Skip to Content

10. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

குழந்தை சத்யாவுக்குக் கடந்த இருபத்திநான்கு மணி நேரமாக வைரல் இன்பெக்ஷன் காரணமாக 104 டிகிரி அளவு ஜுரம். அவனது உடம்பில் பிளஸ்ஸிங் பாக்கெட் வைத்தும், பின்னணியில் ஸ்ரீ அன்னையின் ஆர்கன் இசையினை ஒலிக்கச் செய்தபடியும் ஒரு நாள் முழுவதும் அவனோடு இருந்தேன். நேரம் ஓடிக்கொண்டே இருந்ததே தவிர ஜுரம் குறையவில்லை. அவனை எழுப்பி இரண்டு வேளை மருந்து கொடுத்தேன். ஜுரம் கடுமையாக இருந்தது. அவன் ஒரு பருக்கை உணவு கூட சாப்பிடவில்லை; உதடுகள் காய்ந்து வெடிப்புடன் சிவந்து விட்டது. அதிகாலை மூன்று மணிக்கு என்னை கொதிக்கும் ஜுரம் நடுக்கலுடன் அவன் எழுப்பியபோது எனக்கு கவலை ஆனது. மூன்று போர்வைகளால் போர்த்தப்பட்டு இருந்தாலும் அவனது நடுக்கம் குறையவில்லை. அவனை எமர்ஜென்சி அறைக்கு எடுத்துச்செல்ல நான் விரும்பவில்லை. நானும் எனது கணவரும் அவனை எங்களுக்கு நடுவில் படுக்க வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினோம்.

இறுதியாக, அன்னை அவரது அறையில் இருப்பதாய் கற்பனை செய்யத் தொடங்கினேன். தொடர்ந்து உருவகப்படுத்திக் கொண்டே இருந்தேன். அன்னையின் அறைக் காட்சி ஒரு சிறிய சினிமாப் படம் போன்று என் தலைக்குள் ஓடத் தொடங்கியது, எனது முயற்சி இல்லாமலேயே.

அன்னையின் அறையின் மத்தியில் ஒரு சிறிய படுக்கையில் அவனைக் கிடத்தி வைப்பது போன்று கற்பனை செய்தேன். அப்போது அன்னை, “அவனை அங்கேயே விட்டுவிடு” என்று சொன்னார்கள். அவனது சிறிய உடல் அந்தப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டேன். அவன்மீது ஒரு போர்வையும் போர்த்தப்பட்டிருக்கவில்லை. அன்னை, அறையில் அவரது வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அன்னை அவன் படுக்கையைச் சுற்றி நடந்து அவரது அலமாரியிலிருந்து பொருட்களை எடுத்தார். சத்யாவை சிறிதும் லட்சியம் செய்யாது, அவரது டெஸ்க்கில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். ஆனால், அவர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தாக நான் என்னுள் ஒரு அழுத்தமான அமைதியை உணர்ந்தேன். இதை இந்த இருபத்தினான்கு மணி நேரத்தில் முதன் முறையாக உணர்ந்தேன்.

திடீரென எங்களுக்கு நடுவில் படுத்திருந்த சத்யா போர்வைகளை உதறிக்கொண்டு, படுக்கையை விட்டு துள்ளி எழுந்து அறையில் நடக்கத் தொடங்கினான். சாப்பிட ஏதாவது வேண்டும் எனக் கேட்டான். அவனது புத்தகங்களை படிக்கவும் அவனது விளையாட்டுச் சாமான்களை வைத்துகொண்டு விளையாடவும் ஆரம்பித்தான். ஒருநாள் முழுவதும் நடுக்கல் ஜுரத்துடன் இருந்தவன், ஒன்றுமே நடவாதது போலக் காணப்பட்டான். உடனடியாக குணமடைந்தான். அவனது அருகில் படுத்துக்கொண்டு அன்னையைக் கற்பனை செய்த அடுத்த கணம் படுக்கையை விட்டு எழுந்து விட்டான். இருபது நிமிடங்களுக்குமுன், அவன் கழிப்பறைக்குக்கூடச் செல்லத் திராணி அற்றவனாய் கொதிக்கும் உடம்புடன் கால் நடுக்கத்துடன் போர்வைகளுக்குள் ஒடுங்கி, நடக்க இயலாமல் இருந்தவனை நான் தூக்கிக் கொண்டு சென்று உதவினேன். இருபது நிமிடங்களுக்குப்பின் படுக்கையை விட்டுத் தாவி இறங்கினான்!

இந்தச் செய்தியை தங்களுக்கு இமெயில் செய்யும்போது, சாதாரண நாள் போல விளையாடிக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் உள்ளான். இது ஒன்றும் சாதாரணமானது அல்ல என்பது எனக்கு விளங்குகிறது. நடந்தவை அனைத்தும் அசாதாரணமானது; அனைத்தும் அற்புதமானது!

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

அணுவில் வெளிப்படும் அனந்தம் முழுமையானது.

***********



book | by Dr. Radut