Skip to Content

08. The Life Divine – Outline

The Life Divine – Outline

தமிழ்

கர்மயோகி

1904-ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் வேண்டும் என பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிரகடனம் செய்தார். 1906-இல் அரசியலில் இறங்கினார். 1908-இல் ஜெயிலுக்குப் போனார். நாராயண தரிசனம் பெற்றார். சுதந்திரம் அவர் ஜீவனை நிரப்பியது. இறைவன் அசரீரியாக அவரிடம் இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது. உனக்கு வேறு வேலையுண்டு. புதுவைக்குப் போ என்றார். 1910-இல் பகவான் புதுவைக்கு வந்தார். சுதந்திரத்திற்காக பகவான் யோகத்தை நாடினார். தான் அவதார புருஷன் என்பது அவர் அறியாதது. ரிஷிகள் செய்த யோகம் 20, 30, 40 வருடங்கள். அவை அவருக்குச் சில ஆண்டுகளில் பலித்தன. அவருக்குரியது ஞானயோகமில்லை. சுவாமி விவேகானந்தர் கனவில் தோன்றி சத்திய ஜீவியத்தைக் காட்டினார். கீதையைக் கையில் கொடுத்தார். 15 நாட்கள் தொடர்ந்து வந்தார். பகவான் சத்திய ஜீவியத்தை ஏற்றுக்கொண்டவுடன் சுவாமி நின்று விட்டார்.

நாராயண தரிசனம் சத்திய ஜீவிய தரிசன
உலகில் தீமையில்லை எனக் காட்டிய தரிசனம் அது.

கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு அளித்த விஸ்வரூப தரிசனத்தில் நல்லதும், கெட்டதும் உண்டு. சத்திய ஜீவிய தரிசனத்தில் கெட்டது இல்லை. பகவான் சத்திய ஜீவியத்தை அறிந்து கொண்டார். அங்குச் சென்றால் அது உலகுக்கு வரும் எனவும் கண்டார். அப்படி நிரந்தரமாக அங்குப் போகும் வழியறிய 10 ஆண்டுகளாயின. 10-ஆம் ஆண்டு அவர் கண்டது:-

மனம் மனிதனுடைய கருவி. மனம் முடிவாகக் கண்டது அக்ஷர பிரம்மம். அதையே ரிஷிகள் பிரம்மம் என உணர்ந்தனர். அது மேல்மனத்திற்குரிய சித்தி. அகந்தை அழியாமல் பெறும் சித்தி. அதைச் சாட்சி புருஷன் என்கிறோம். இந்நிலையில் உலகில் தீமை அழியாது. இது ஞான யோகம். நிஷ்டையால் பெறுவது.

அக்ஷரப் பிரம்மத்தைக் கடந்த நிலையில் சத்தும், அசத்தும் இணைந்து பிரம்மம் எழுகிறது. இது பூரண பிரம்மம். இது சத்திய ஜீவியத்தால் அடையப் பெறுவது. அடிமனம் தரும் சித்தியிது. இதையடைய நிஷ்டை போதாது. சரணாகதி தேவை. இதற்குரிய மார்க்கம் மேல்மனத்திலிருந்து உள்மனம் வழி அடிமனம் சென்று உயர வேண்டும். அதன் முதல்நிலை மனத்தில் சைத்திய புருஷனைக் காண்பது. அது கீழும் மேலுமாக வளர்ந்து சத்திய ஜீவனாகிறது.

சிருஷ்டி எப்படி ஏற்பட்டது என்பது ரிஷிகள் அறியாதது. கடவுள் உலகைப் படைத்தார் என்றனர். குயவன் களிமண்ணி- லிருந்து பாண்டம் செய்வது போல் கடவுள் மனிதனைப் படைத்தார் எனப் பாமர மனம் நினைக்கிறது. கடவுள் என்பது ஏகன் (Oணஞு), உலகம் அநேகன் (Mச்ணதூ). ஒன்று எப்படிப் பலவாயிற்று எனக் கேட்கும் உரிமை நமக்கில்லை என்றார்கள். அதுவே சரியென்றார் பகவான்.

சிருஷ்டி ஏற்பட்ட வழி அகம் புறமானது என்பது பகவான் விளக்கம். அதன் முறைகள் சுயசிந்தனை, சுயக்கட்டுப்பாடு, சுயமாகக் கிரகிப்பது என்றார். பிரம்மம், அகம், சச்சிதானந்தம் புறம் என்ற முதல் நிலை இரண்டாம் நிலையில் சச்சிதானந்தம் அகம், சத்திய ஜீவியம் புறம் என்றும், மேலும் காலத்தைக் கடந்த சத்திய ஜீவியம் அகம், காலத்திற்குட்பட்ட சத்திய ஜீவியம் புறம் எனவுமாகி அவற்றிடையே மனம் உற்பத்தியாகி சிருஷ்டி முடிகிறது. வாழ்வும், ஜடமும் மனம் உற்பத்தி செய்தவை.

மீண்டும் ஒரு முறை கூறினால்:

பிரம்மம் சிருஷ்டிக்க முடிவு செய்து தன்னை அகமாகவும், புறமாகவும் பிரித்தது. அப்படியேற்பட்ட புறத்தை நாம் சச்சிதானந்தம் என அறிவோம். மீண்டும் அதே முறையைக் - அகம், புறம் - கையாண்டு சச்சிதானந்தம் அகம், புறம் எனப் பிரிந்தது.

அப்படியேற்பட்ட புறம் சத்திய ஜீவியம்.

மேலும் சத்திய ஜீவியம் அகம், புறம் எனப் பிரிகிறது.

அவற்றிடையே மனம் உற்பத்தியாகிறது.

மனத்துடன் சிருஷ்டி முடிகிறது.

வாழ்வும், உடலும் மனத்தால் உற்பத்தி செய்யப்பட்டவை.

உடல் பரிணாம வளர்ச்சியால் வாழ்வாகி, வாழ்வு மனமாகிறது.

பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்ட மனம் மனிதன்.

இந்தப் பரிணாம வளர்ச்சி உடலிலிருந்து மனமாக 5 இலட்சம் வருடமாயிற்று என்றது விஞ்ஞானம். மனத்தையுடைய மனிதன் மேலும் பரிணாம வளர்ச்சியால் சத்திய ஜீவனாக 30,000 வருஷமாகும், யோகத்தால் 30 ஆண்டுகளில் சாதிக்கலாம் என்கிறார் பகவான்.

கூடஞு ஃடிஞூஞு ஈடிதிடிணஞு இரண்டு புத்தகங்களாகவும், இரண்டாம் புத்தகம் இரு பகுதிகளாகவும் மொத்தம் 56 அத்தியாயங்கள் கொண்டது. முதற்புத்தகம் சிருஷ்டி, 28 அத்தியாயங்கள். இரண்டாம் புத்தகம் பரிணாமம், 28 அத்தியாயங்கள்.

சிருஷ்டி என்பதை பரம்பொருள் பிரபஞ்சமாயிற்று எனவும், பரிணாமம் என்பதை முதற்கட்டத்தில் ஞானம் அஞ்ஞானத்தி- லிருந்து பரிணாமத்தால் வெளிவருவதாகவும், இரண்டாம் கட்டத்தில் ஆத்மா பரிணாமத்தால் ஞானத்திலிருந்து வெளிவருவதாகவும் எழுதுகிறார்.

முதற்புத்தகம்

பரம்பொருள் பிரபஞ்சமாயிற்று.

இரண்டாம் புத்தகம்

பரிணாமத்தால் ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழுகிறது.

இரண்டாம் புத்தகம் - முதற்பகுதி

அனந்த ஜீவியமும் அஞ்ஞானமும்

இரண்டாம் புத்தகம் - இரண்டாம் பகுதி

ஞானமும் ஆன்மிகப் பரிணாமமும்

முதற் புத்தகம்:

பரம்பொருள் பிரபஞ்சமாகிறது என்பதை சச்சிதானந்தம் பிரபஞ்சமாகிறது எனக் கொள்கிறார். சச்சிதானந்தத்தைப் பரம்பொருளாகக் கொள்கிறார். சத்து, சித்து, ஆனந்தம் என்ற பரம்பொருள் தெய்வீக ஆத்மா, மனம், வாழ்வு, சைத்திய புருஷன், உடல் என்ற பிரபஞ்சமாக சத்திய ஜீவியத்தால் சிருஷ்டிக்கப்பட்டதை மாயையின் செயலாக விவரித்து பரிணாமம், சிருஷ்டி, திருவுருமாற்றம் என்ற 3 அத்தியாயங்களை பின்னரும் 8 அத்தியாயங்களை முன்னுரையாகவும் சேர்க்கிறார். அவை பின்வருமாறு:-

அத்தியாயம்
பொருள்
1
மனித ஆர்வம்
2, 3
ஜடம், பிரம்மம்
4
எங்கும் நிறை பரம்பொருள்
5
மனிதனுடைய இலட்சியம்
6
ஆன்மிக மனிதன்
7
அகந்தை
8
வேதாந்த ஞானம்
9
சத் புருஷன்
10
சித் சக்தி
11, 12
ஆனந்தம்
13
தெய்வீக மாயை
14
சத்திய ஜீவியம்
15, 16
சத்திய ஜீவியம் (காலம், இடம்)
சத்திய ஜீவிய 3 நிலைகள்
17
தெய்வீக ஆன்மா
18
மனம்
19, 20, 21, 22
வாழ்வு, மரணம், அன்பு, தீர்வு
23
சைத்திய புருஷன்
24
ஜடம்
25
ஜடத்தின் முடிச்சு
26
பரிணாமம்
27
சிருஷ்டி
28
திருவுருமாற்றம்

சச்சிதானந்தம் (அத்தியாயம் 9, 10, 11, 12) சத்திய ஜீவியத்தால் (14) தெய்வீக ஆன்மா, மனம் (18), வாழ்வு (19, 20, 21, 22), சைத்திய புருஷன் (23), ஜடம் (23, 24) என்ற பிரபஞ்சமாக சிருஷ்டிக்க உதவியது தெய்வீக மாயை (13). 26-ஆம் அத்தியாயம் பரிணாமத்தையும், 27 சிருஷ்டியையும், 28 திருவுருமாற்றத்தையும் கூறுகின்றன. முதல் அத்தியாயம் மனித எழுச்சி ஜடம், பிரம்மம் என்ற இரு பிரிவுகளைக் (2,3) கண்டு, பரம்பொருளில் (4) முடிகிறது. ரிஷிகள் அகந்தையை (7) ஆத்மா எனக் கருதி 4 சூத்திரங்களைக் கண்டது வேதாந்த ஞானம் (8). இந்த எட்டும் முன்னுரை.

(தொடரும்)

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஏழு தத்துவங்கள் சிருஷ்டியிலும் பரிணாமத்திலும் செயல்பட இயற்கை அரங்கமாகிறது.

 

***********



book | by Dr. Radut