Skip to Content

2. முகவுரை, முன்னுரை, முடிவுரை, முழு உரை, மூல உரை

முகவுரை, முன்னுரை, முடிவுரை, முழு உரை, மூல உரை

காதல் வாழ்வின் மூல உரையான முழுவுரை.

  1. முக்கிய கருத்துகளை மூலத்தில் சுட்டிக்காட்டுவது முகவுரை.
  2. முக்கிய கருத்துகளை வாசகர்கட்கு முழுமையாக நினைவுபடுத்துவது முடிவுரை.
  3. முன்னுரையும் முடிவுரையும் இணைந்து பெறும் முழுமையைக் கூறுவது முடிவுரை.
  4. மூலவுரை கருத்து மூலத்தை அடைந்து எழுப்பும் குரல்.
  5. மூலம் முழுமையை முக்கியமாக்குவது குரல் சொல்லாக ஒலிப்பது.
  6. மூலத்தின் குரல் எழுந்து முழுவதும் ஏற்றமாக ஒலிப்பது அம்சமுள்ள எழுத்து.
  7. மூலம் ஆதிமூலமாவது ஜீவன் மந்திரமாவது.
  8. களவொழுக்கம் கற்புக்கனல் நிறைந்த ஒழுக்கம்.
  9. உன்னையறியாதவனை நினைந்து மனம் உருகுவது காதல்.
  10. மறந்தவளை மறந்தறியாதது மனம் அறியும் காதல்.
  11. மணந்தவனை மனம் ஏற்று அவனில் கரைவது மணாளன் பெற்ற பெரும்பேறு.
  12. மனம் திருமணத்தால் நெஞ்சாக மாறி அதனுள் அவள் தெய்வமாக வீற்றிருப்பது திருமணம் நறுமணமாவது.
  13. மனமறிந்த வாழ்வு மணக்கத் தவறியதில்லை.
  14. கசந்த வாழ்வு காலத்தைக் கடந்த உயர்வு பெறும் நிலையைக் காட்டுகிறது.
  15. வாழ்வு தோல்வியையறியாதது என வற்புறுத்துவது காதலில் தோல்வி.
  16. கொடுமையான கணவன் கடுமை நிறைந்த காதலன்.
  17. சிடுமூஞ்சி என்ற மனைவி வாழ்வைக் கடந்த மனவளம் பெற்றவள்.

**********



book | by Dr. Radut