Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

ஐக்கியமே இறைவன். சிருஷ்டி பிரிவினைக்குரியது

Volume 12, page 73

  • இறைவன் உலகைப் படைத்தார் எனில் இறைவன் வேறு, உலகம் வேறு என்று இரண்டாகப் பிரிகிறது.
  • இது பிரிவினைக்குரிய தத்துவம்.
  • எல்லாப் பிரிவினைகளும் இதிலிருந்து எழுகின்றன.
  • கால் வலிக்கிறது எனில் கால் வேறு நாம் வேறு என நாம் அறிகிறோம் என்றாகும். நாமும் காலும் ஒன்று என நினைக்க முடியாது. நினைத்தால் வலி போய் விடும்.
  • எனக்கு வயிற்று வலி என அன்னையிடம் கூறியவர் அத்துடன் நான் உண்மையானவன் என்றார். உனக்கு உண்மையுண்டு. உன் வயிற்றிற்கு உண்மையில்லை என்றார் அன்னை. அன்னையின் ஒளி வலிக்கும் வயிற்றில் சில நிமிஷம் தெரியுமானால், வலி மறையும். ஒளி இழந்த ஒற்றுமையை மீண்டும் தரும்.
  • மனம் பிரிக்கும் கருவி.
  • மனம் பலிக்காததில்லை. பிரம்மத்தை இரண்டாகப் பிரித்து க்ஷரப் பிரம்மம், அக்ஷரப் பிரம்மமாக்கியது.
  • சச்சிதானந்தத்தை மனம் சத், சித், ஆனந்தம் எனப் பிரித்தது.
  • புருஷனை இரண்டாகப் பிரித்து புருஷப்-பிரகிருதியாக்கியது.
  • ஈஸ்வரனையும் பிரித்து ஈஸ்வர சக்தியாக்கியது.
  • மனம் தன்னைப் புலன்களினின்று பிரித்தது.
  • புலன்களை ஐந்தாகப் பிரித்தது.
  • எண்ணத்தை எண்ணம் - உறுதியாகப் பிரித்தது.
  • செயலை நல்லது கெட்டது எனப் பிரித்தது.
  • ஒளியை ஒளி - இருள் எனப் பிரித்தது.
  • சத்திய ஜீவியம் சுமுகமாக பரஸ்பர உணர்வால் பிரிந்த நிலையில் உள்ளவற்றை ஒன்று சேர்க்கும்.
  • சத்திய ஜீவியத்தில் எண்ணமும், உறுதியும் ஒன்றே.
  • ஜீவனும், ஜீவியமும் மனத்தில் பிரிந்துள்ளன. சத்திய ஜீவியத்தில் இரண்டும் ஒன்றே.
  • இறைவன் - இயற்கை என்பது சிருஷ்டி.
  • இயற்கை இறைவனானால் ஈஸ்வரன் சுப்ரீமாக மாறுகிறான்.
  • பிரபஞ்சம் பிரம்மம் என்று பிரிந்து மனத்திற்குத் தோன்றுவது சத்திய ஜீவியத்தில் ஒன்றாகும்.
  • இறைவனே உலகமானார் எனில் ஆரம்பத்திலேயே பிரிவினை அழியும்.
  • ஆழ்மனம், பரமாத்மா பிரிந்த நிலை.
  • அவை இணைய பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்தை அடைய வேண்டும்.
  • அன்பு, சந்தோஷம், அழகு என்ற மூன்றும் சேர்ந்து ஆனந்தமாகிறது.

***********

ஜீவிய மணி

அன்பர்கள் தம்மைத் தொடர்ந்து வரும் வாய்ப்புகளை விட்டு அவசரமாக விலகுவதை நாம் பலமுறை கண்டுள்ளோம். ‘அன்னை கொடுப்பதையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியவில்லை’ என்பதைக் கேள்விப்படுகிறோம். Man proposes, God disposes - ‘மனித விருப்பத்தைத் தெய்வம் ரத்து செய்கிறது’ என்ற வாழ்க்கைக்கு உரிய சொல் அன்னையிடம் தலைகீழே மாறி - Mother Proposes, man disposes - ‘அன்னை ஆரம்பிக்கின்றார், அன்பர் மறுக்கிறார்’ என்றாகிறது.

அன்னை மறப்பதேயில்லை.
மனிதனுக்கு நினைவே வருவதில்லை.

*********



book | by Dr. Radut