Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

113. மிகச் சிறியது மிகப் பெரிய பலன் தருவது

  • ஒரு கல்லை பழத்தை நோக்கி எறிந்தால் ஜெயித்தால் ஒரு பழம் விழும்.
  • கல்லெறிவது ஒரு திறமை. அது உடல் திறமை. உடலின் சூட்சுமத் திறமை.
  • ஒரு கல்லால் ஒரு பழத்தையடித்தால் மரத்திலுள்ள எல்லாப் பழமும் விழுவது நாமறியாதது.
    ஏகலைவன் பெற்ற திறமை அனந்தமாகப் பூர்த்தியாவது.
    ஏகலைவன் அடி மனத்தில் துரோணரை எட்டி வில் வித்தை கற்றான்.
    அடிமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. துரோணருக்கு வில் வித்தை தவிர வேத ஞானம் உண்டு. ஏகலைவன் அதை நாடவில்லை. அதே அடி மனத்தில் பிரபஞ்ச ஆச்சாரியார் அனைவரும் உண்டு. ஏகலைவன் அடி மனத்தை எட்டியதால், உலகிலுள்ள அவ்வளவு ஆச்சாரியார்களுடைய ஞானத்தையும் வேண்டுமானால் பெற்றிருக்கலாம்.
  • டிக்க்ஷனரியை ஸ்பெல்லிங் பார்க்க மட்டும் உபயோகிப்பவருண்டு.
  • அதில் சொல்லின் பொருளும், அதிலிருந்து எழுந்த மற்ற சொற்களும், அவற்றின் பயனும் உண்டு. மேலும் சொல்லின் வேர் உண்டு. அச்சொல் வேறு மொழியிலிருந்து வந்திருந்தால் அந்த மொழியும் அங்கு எழுதப்பட்டிருக்கும்.
    O.E.D. ஆக்ஸ்போர்ட் இங்கிலீஷ் டிக்க்ஷனரியானால் அச்சொல் எந்த ஆண்டு எந்த ஆசிரியரால் எப்படி பயன்படுத்தப்பட்டது எனவும் கூறும்.
    அச்சொல்லின் எழுத்துகள் கடந்த நூற்றாண்டில் எப்படி மாறின எனவும் எழுதியிருக்கும்•
  • விளையும் பயிர் முளையிலேயே தெரிவது இந்த அம்சத்தால்தான்.
    நீக்ரோ சிறுவனை ஒருவர் பரிதாபப்பட்டு லபாரட்டரியில் வேலையில் சேர்த்தார். அவனுக்குப் பறவைகள் நிறம் அறிய ஆவல். அந்த ஆவல் ஞானமாகி, திறமையாகி நோபல் பரிசு பெற்றான்.
  • அன்பர் ஒருவர் வாழ்வில் நடந்த சிறு காரியம் மிகப் பெரிய பலனைக் கொடுத்தால் அவருக்குப் பூரண யோகம் பலிக்கும் என்று பொருள்.
  • பெரும் ஜமீன்தார். இரண்டாம் உலகப் போர் முன் அன்னையைத் தரிசித்து அதன் அற்புதத்தை அறிந்து தன் ஏழு குழந்தைகளுடன் அன்னையை ஏற்று தன் பொருளை அர்ப்பணம் செய்தார். இவர் குடும்பத்தார் செய்யும் எந்தச் சிறு காரியமும் பெரும் பலனைத் தரும். பூரண யோகத்தை ஏற்றால் அனைவருக்கும் பலிக்கும். அதை வெளிப்படுத்துவது இந்த அம்சம். மனிதன் உள்ள நிலையில் (plane) செயல் பலிக்கும். ஆத்மா (soul) ஆன்மிக (spiritual) நிலையிலிருந்தால் அவர் இன்று செயல்படுவது எந்த நிலையானாலும் பலன் உயர்ந்த நிலையில் எழும். இதே காரணமாக பெரிய இடத்துப் பிள்ளைகள் செய்யும் காரியங்களுக்குப் பெரும் பலன் கிடைப்பதால் அவர்களால் கட்டுப்பாடான வாழ்க்கையை ஏற்க முடிவதில்லை.

**********

ஜீவிய மணி

தெரிவது இருப்பதாகத் தெரிவது ஆத்ம விழிப்பு.
ஆத்ம விழிப்பு ஆத்மா சித்திப்பது.
சித்தியை நாடுபவன் மனிதன்.
சித்தி தேவைப்படாத சித்தி மூலம், முடிவு, Self-perfection.

***********



book | by Dr. Radut