Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/20. எண்ணம் சிந்தனையின் செயல், முடிவு செயலின் சிந்தனை

  • நாம் நம்மை ‘நாம்’ என அறிகிறோம். அது பெரும்பாலானோர்க்கு உடல். மனம் தெளிவானவர்க்கு அது ‘நான்’, என் எண்ணம், என் திட்டம், என் கொள்கைகள் என்ற நம்பிக்கைகள்.
  • நாம் நம் உணர்ச்சியைக் கருதுவதில்லை. உணர்ச்சியே மனிதன். எண்ணம் என நினைப்பதும் உணர்ச்சியே.
  • அறிவுள்ளவன் உடலைக் கருத மாட்டான். உடலைப் பெருமையாக அறிபவன் கையை மடக்கி உடல் வலிமையைப் பிரபலமாகக் கருதுவான்.
  • உணர்ச்சி மேலிட்டவனுக்கு அறிவிருக்காது, உடல் நினைவு வராது. “எனக்குக் கோபம் வரும்” என்பான். •
  • உடலும், உயிரும், மனமும் சேர்ந்ததே மனிதன், நாம் என்பது. அத்துடன் ஆத்மாவும் சேரும் என நாம் அறிவதில்லை.
  • பயில்வான் பெருமையாக பீடுநடை போடுவான். “எனக்கு எவரும் ஈடில்லை” என அவன் மனம் கூறும்.
  • உணர்வால் உயர்ந்தவன் ராஜ நடை போடுவான், “நானே ராஜா” என அவன் நினைப்பதை நடை வெளியிடும்.
  • அறிவிற்சிறந்தவனுக்கு அடக்கமோ, கர்வமோ எழும். “யாருக்கு என்ன தெரியும்?” என நினைப்பான்.
  • செய்தால் வேலை, செய்வது எனில் உழைப்பது. உடலால் உழைப்பதே செயல்.
  • செயலுக்கு வீர்யம், தீவிரம், சுறுசுறுப்பு, பரபரப்பு, பிரபலம் தருவது தெம்பு, உணர்ச்சியின் வேகம்.
  • 12 மாதத்தில் அனைவரும் கட்டும் வீட்டை ஆறு மாதத்தில் அழகாக அப்படிப்பட்டவர் முடிப்பார்.
    எலக்க்ஷனுக்கு ஒரு பீரியட் முழுவதும் ஆதரவு தேட வேண்டும். ஒரு வேட்பாளருக்கு 6 மாதம்முன், 3 மாதம்முன் ஒரு புதுத் தொகுதியில் இடம் கொடுத்தால், ‘கட்சி இல்øல என்று சொல்லாமல் இப்படிச் செய்து விட்டார்கள்’ என்பார். எவரும் ஏற்க மாட்டார்கள். உணர்வில் தெம்பு, தெளிவுள்ளவர் ஏற்பார். மாதக்கணக்காக, வருஷக்கணக்காக மற்றவர் தேடும் ஆதரவை இந்த வேட்பாளர் சீட் கொடுத்தவுடன் வந்து முக்கியஸ்தர்களைக் கண்டு முக வசீகரத்தால் கவர்ந்து குறுகிய காலத்தில் வெற்றி பெறுவார்.
    அறிவிற்சிறந்தவன் இதுபோன்ற நிலையில் செய்வது அறிவுடைய செயல்.
    அறிவுடைய செயலுக்கு அறிவுடைய மக்களே ஓட்டுப் போட மாட்டார் என்பது அறிவு.
    யதார்த்தவாதி பள்ளிக்கூடம், ரோடு பற்றி திட்டமிடுவான்.
    மக்கள் உணர்வு நிறைந்த இடம் அவர்கட்கு முக்கியம். நம் நாட்டில் அது ஜாதி.
    தம் ஆழ்மன உணர்வு எதை அனுதினமும் நாடுகிறது என்பதை ஊர் அறியாது.
    அது மரியாதை - Prestige.
    அனைவர் மரியாதையும் உயரும் செயலை அறிவிற்சிறந்தவன் நாடுவான்.
    ஊர் இரவோடு இரவாக ஒருவர் தவறாமல் அவனை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்வர்.
  • இது எண்ணம், அவன் மனம் நெடுநாளாக சிந்தனை செய்த எண்ணம். அது பலிக்கும்.
  • எதிரி கூட்டத்தில் எவரும் செய்யாத காரியமான மாலையைப் போட்டு விட்டால் தலைவர் கண் நிறையும்.
  • “உன் முகத்தில் விழிக்க மாட்டேன்” என்ற தாயார், மகன் டாக்ஸியில் கோயிலுக்குப் போனதைக் கேள்வியுற்று “ஏன் என்னைக் கூப்பிடவில்லை” என வீடு வந்து குறைப்படுவார்.
  • திருமண ஏற்பாட்டில் குடும்பப் பெரியவர் சித்தப்பா கோபப்பட்டு எழுந்து போகிறார்.
    ‘அண்ணன் மகன் அதிகப்பிரசங்கி’ என திருமணத்திற்கு வரக்கூடாது என்ற முடிவோடு போகிறார். பையன் பத்திரிக்கை அடிப்பதையும் மறந்து விட்டார்.
    அவரைத் தேடிப் பத்திரிக்கை எடுத்துப் போனால் “மரியாதைக்காக எனக்கு யாரும் வேண்டியவரில்லை.
    எனக்கு மட்டும் ஒரு பத்திரிக்கை கொடு” என்றார்.
    பத்திரிக்கை அவர் பெயரில் அடிக்கப்பட்டிருந்தது. முகம் மலர்ந்தது.
    100 பத்திரிக்கை எடுத்துக் கொண்டார். இது உலகம். அறிவு இதை அறியும்.
  • சோழன் அரசன். சிதம்பரம் தீட்சிதர்கள் மூவாயிரவர் பிரபலமாக ஆண்ட காலம்.
    இவர்களைப் பற்றிய செய்திகள் ஏராளம். பக்தி பவித்திரமாயிருந்த நேரம்.
    3000 குடும்பங்களையும் கோயில் ஆதரிக்கும் நிலையிலிருந்த நாட்கள்.
    பக்தியின் செயல் பவித்திரமான செயல் என்பது தத்துவமில்லை, நடைமுறை.
    முறை தீட்சிதர் அர்த்த ஜாம பூஜை முடிந்து ஒரு வில்வதளத்தை நடராஜர் சிலைமுன் வைத்து விட்டு, விமானம் காவலுக்காக கோபுரத்தில் படுத்துக் கொள்வார்.
    மறுநாள் காலையில் வில்வதளம் பொன் இலையாக இருக்கும்.
    இது சாஸ்த்திரப்படி நடக்கும் சம்பிரதாயம் அவர்கள் ஆட்சி ராஜ கம்பீரமானது. சோழ அரசனும் அவர்களை மீற முடியாது.
    திருவாசக ஓலைச் சுவடிகள் அவர்களிடமிருப்பதைச் சோழன் கேட்டு அனுப்பினான்.
    எழுதியவரே வந்து கேட்டால் கிடைக்கும் என பதில் வந்தது. அரசனும் பணியும் நேரம்.
    நால்வர் சிலைகளை அரசன் பரிவாரத்துடன் எடுத்து வந்தான். செயல் திறனை இழந்த நேரம் அறிவு சிந்தனையால் எண்ணமாகி செயல்பட்டது. தீட்சிதர் அவை சிலை எனக் கூற முடியாது. அந்தப் பதிலுக்கு எதிர் பதிலுண்டு “நடராஜர் சிலையல்லவா?” எனக் கேட்கலாம்.
    தீட்சிதர் பணிந்தனர்.
    குதர்க்கம் வெல்ல முடியாது.
    ஒரு சமயம் சங்கராச்சாரியார் கோவிலுக்கு வந்ததாக ஒரு செய்தி.
    அவரையும் பூஜையின் பொழுது வெளியே நின்று வணங்க உத்தரவிட்டனர்.
    கோபத்தால் சங்கராச்சாரியார் சாபமிட்டதாகக் கதை.
    அன்றிலிருந்து வில்வதளம் வில்வதளமாகவே இருந்தது. பொன்னாக மாறவில்லை.

***********

ஜீவிய மணி

Mother, Mother என்று பேப்பரில் ராமஜெயம் போல் எழுதுவது உடலுக்குரிய முறை. வாயால் Mother என்பது உணர்வுக்குரிய முறை. மனத்தால் Mother என்பது மனத்திற்குரியது. மௌனமாகித் தானே Mother என்ற சொல் உள்ளே எழுவது ஆன்மாவுக்குரிய முறை. அதிர்ஷ்டத்தை நாடும் மனம் தானே அதை மறந்து அன்னையை நாடுவது சத்திய ஜீவியத்திற்குரிய முறை.

சமர்ப்பணம் சத்திய ஜீவிய முறையாகும்.

**********



book | by Dr. Radut