Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

பெரு வாழ்வின் தெய்வங்கள் ஆளும் நாடுகள்

Canto Six

Page 173:

As one who between dim receding walls

மறையும் மங்கிய சுவரிடையே வாழும் மனிதன் போல

  • குடைந்த குகையின் வாயில் தெரியும் தெறிக்கும் ஒளி
  • ஜோதியை நம்பி, சுதந்திரமாக நடந்து
  • பரந்த வெளியின் சுதந்திர மூச்சு நெருங்கி வந்து
  • மங்கிய குழப்பத்தினின்று தப்பித்து வந்தான்
  • எதுவும் சாதிக்க முடியாத இந்த உலகினுள் வந்தான்
  • அர்த்தமற்ற லோகத்தின் அடிபட்ட ஜனனம்
  • அசத்தை விட்டகலும் புருஷன் பயந்து ஓடி
  • வாழமுயன்று, நெடுநாள் வாழும் திறனின்றி
  • எண்ணம் செறிந்த புருவமெனும் வானம் மின்னலாகத் தெறித்தது
  • வதைந்து, ஐயம் நிறைந்த பார்வை சிறகடித்து வந்து
  • கனவேகக் காற்று எழுப்பும் குரல் தேடும் சவால்
  • சூன்யத்துள் வழிதேடிக் கதறும்
  • குருட்டு ஆத்மாக்கள் இழந்த ஜீவனைத் தேடுவது போல
  • வழியறியாத உலகின் வீதிவழியே அலைந்து
  • காலமும் இடமும் கண்டெடுக்க முயலும் எழாத கேள்வி
  • மறுத்தபின் பிறந்த சந்தேகமான நம்பிக்கை
  • ரூபமும், சக்தியும், வாழும் உத்தரவு பெற்று
  • சிருஷ்டியிலில்லாதது பிறந்து எழுந்து
  • இதயம் தேர்ந்தெடுத்து, மனம் உழன்று உய்ந்து
  • பார்வையிலில்லாத அருள், ஆச்சரியமான ஆதரவு எழுந்து
  • நிலையற்றதில் நிலையான ஆனந்தமெழுந்து
  • யாத்திரை நிலையற்ற விநோதமான நிலையையடைந்து
  • அறியாத ஆத்மாவுடன் விளையாடும் ஜீவியம்
  • பிறப்பு பெருவாழ்வின் சிறு நிகழ்ச்சியாகி
  • அணுகி வரும் மந்திரம் சக்தியைக் காப்பாற்ற இயலாமல்
  • ஆர்வமான செயல் வழியறியாமல் தடுமாறி
  • விபரீதக் கணக்கெழுதும் இயல்பான நிகழ்ச்சி
  • உருவாக்கிய ரூபங்களை கட்டுப்படுத்த முடியாமல்
  • பல்வகைப் பெருக்கம் பலனைக் காப்பாற்றத் தவறி
  • பூஜ்யத்தைவிடச் சிறியது ஒன்றை மீறி உயர்ந்து

*********

ஜீவிய மணி

பிரார்த்தனை பலிக்கும்.
மனத்தின் உயர்வுக்கு ஏற்ப அன்னையின் உயர்வு செயல்படும்.
பலன் நம் நிலைக்காகவும், முறை நம் தூய்மைக்காகவும் அமையும்.
உச்சக்கட்டப் பலனும், உச்சக்கட்ட உயர்வும் சேரலாம்.
எனினும், நடைமுறையில் காண்பது இல்லை.
இருக்கக் கூடாது என்பது சட்டம் இல்லை.

***********



book | by Dr. Radut