Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேகப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

 

XXVIII. Supermind, Mind and the Overmind Maya
Page 275
Para 5
28. சத்திய ஜீவியம், மனம், தெய்வீக மனத்தின் மாயை
There are two successive movements of consciousness.
ஜீவியத்தின் இரு அடுத்தடுத்த இயக்கங்கள் உண்டு.
They are difficult but well within our capacity.
அவை கடினமானவை, ஆனால் நம்மால் அடையக் கூடியவை.
Through them we can have access to the superior gradations of our conscious existence.
அவற்றின் மூலம் நாம் நம் ஜீவனின் உயர் நிலைகளை எட்ட முடியும்.
There is first a movement inward.
இதில் முதலானது அகத்தை நோக்கி நகருவது.
Instead of living in our surface mind, we break the wall.
மேல்மனத்தில் வாழ்வதை விடுத்து, அதன் சுவர்களை நாம் தகர்க்க வேண்டும்.
The wall is between our external and our now subliminal self.
சுவர் நம் புறம் மற்றும் நம் அடி மனத்திற்கு இடையே உள்ளது.
This can be brought about by a gradual eff ort and discipline.
இதைப் படிப்படியான முயற்சியாலும் கட்டுப்பாட்டாலும் செய்ய முடியும்.
Or it can be brought about by a vehement transition.
வேகமான மாற்றத்தாலும் இதைச் செய்யலாம்
Sometimes a forceful involuntary rupture will do it.
சில நேரங்களில் அதிக சக்தி கொண்ட தன்னிச்சையற்ற தகர்வு இதை நிகழ்த்தும்.
The latter is by no means safe for the limited mind.
ஆனால் இது போல் நிகழ்வது குறுகிய மனத்திற்கு பாதுகாப்பான செயல் அல்ல
It is accustomed to live securely only within its normal limits.
மனம் பாதுகாப்பாக அதன் குறுகிய எல்லைக்குள் இருப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளது.
 But in either way, safe or unsafe, the thing can be done.                     
இருந்தாலும், பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற எந்நிலையிலும் இதைச் செய்ய முடியும்
What we discover within this secret part of ourselves is an inner being.
இந்த ரகசியமான பகுதிக்குள் நாம் நம் அகத்திற்குரிய ஜீவனைக் கண்டடைகிறோம்
We discover a soul, an inner mind.
அங்கு நாம் ஆத்மாவையும் உள்மனத்தையும் கண்டறிகிறோம்
We discover an inner life, an inner subtle-physical entity.
அக வாழ்வை, அகத்தின் சூட்சும உடற்பொருளை கண்டறிகிறோம்.
It is much larger in its potentialities.
அதன் திறன் மிகப் பெரியது.
It is more plastic, more powerful than our surface mind.
அது மேல்மனத்தைவிட அதிக நெகிழ்வானது மற்றும் அதிக சக்தி வாய்ந்தது.
It is more capable of a manifold knowledge than our surface mind, life or body.
அது மேல்மனம், வாழ்வு, உடலைவிட பன்மடங்கு ஞானத் திறன் உடையது.
It is more capable of a dynamism than the mind, life or body.
அது மனம், வாழ்வு, உடலைவிட அதிக சக்தி உடையது.
It is capable of a direct communication with the universal forces.
பிரபஞ்ச சக்திகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் திறன் உடையது.
It can communicate with universal movements and objects of the cosmos.
பிரபஞ்சத்தின் இயக்கங்களுடனும் பொருள்களுடனும் அது தொடர்பு கொள்ள முடியும்.
It is capable of a direct feeling and opening to them.
அது நேரடியாக உணர்ந்து அவற்றிற்குத் தன்னை
வெளிப்படுத்தும் திறன் உடையது.
It can have a direct acti on on them.
அது நேரடியாக அவற்றில் செயல்படக் கூடியது.
It can even widen itself beyond the limits of the personal mind.
தனிப்பட்ட மனத்தின் வரையறைகளைத் தாண்டி அது விரிய முடியும்.
It can widen beyond the personal life, the body.
தனிப்பட்ட வாழ்வு, உடலைத் தாண்டி அது தன் பரப்பை நீட்டிக்க முடியும்.
Then it feels itself more and more a universal being.
அப்போது அது தன்னை அதிகமாக, பிரபஞ்ச ஜீவனாக அறிய முடியும்.
It is no longer limited by the walls of our narrow mental, vital, physical existence.
அது இனியும் குறுகிய மனம், உணர்வு, உடலின் வாழ்வாலான சுவர்களால் கட்டுப்படுத்தப்படாது.
This widening can extend itself.
பரந்தது மேலும் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்
It can widen to a complete entry into the consciousness of cosmic Mind.
பிரபஞ்ச ஜீவியத்திற்குள் முழுமையாக நுழையும் அளவிற்கு அது விரிய முடியும்.
It can widen into unity with the universal Life.
பிரபஞ்ச வாழ்வோடு ஐக்கியமாகும்படி அது பரவ முடியும்.
It can widen even into a oneness with universal Matter.
பிரபஞ்ச உடலுடன் ஒருமையை அடையும் வகையிலும் அது தன்னை விசாலப்படுத்திக் கொள்ள முடியும்.
But that is sti ll an identification with a diminished cosmic truth.
ஆனால் அந்த ஒன்றுதலும் ஒரு குறைக்கப்பட்ட பிரபஞ்ச சத்தியமாகும்.
Or else it is an identification with the cosmic Ignorance.
Page 276
Para 6
அல்லது அது பிரபஞ்ச அறியாமையுடன் ஒன்றுதலாகும்.
This entry into the inner being once accomplished, the inner Self is found.
இப்படி அக ஜீவனுக்குள் நாம் நுழைந்தால், நம் ஆத்மாவைக் காணலாம்.
It is found to be capable of an opening.
அது வெளி வரும் நிலையில் தயாராக இருப்பதைக் காணலாம்.
It is capable of an ascent upwards.
அது அடுத்தடுத்த நிலைகளை நோக்கி உயரும் தகுதியுடையது.
It ascends up into things beyond our present mental level.
தற்போதைய மனத்தின் நிலையைக் கடந்த உயர்ந்த இடங்களை அடையும் ஏற்றம் பெறுகிறது.
That is the second spiritual possibility in us.
அது நம்மிலுள்ள, அடுத்த அடையக்கூடிய ஆன்மிக உயர்வாகும்
There is a first most ordinary result.
இங்கு முதலான மிகச் சாதாரண பலன் ஒன்று உண்டு.
It is the discovery of a vast static and silent Self.
அது பரந்து விரிந்த அசையாத அமைதியான பிரம்மத்தைக்
கண்டு கொள்வது.
We feel it to be our real or basic existence.
நாம் அதை நம் உண்மையான அல்லது அடிப்படையான
சத்தியம் என்று உணர்கிறோம்
It is the foundation of all else that we are.
அது நம் மற்ற அனைத்திற்கும் அடிப்படையானது.
There may be even an exti ncti on, a Nirvana.
அனைத்தும் அழிந்து மறைந்த சூன்ய நிலையும் அங்கு இருக்கலாம்.
It will be an extinction of both of our active being and the sense of self
நம் செயலாற்றும் ஜீவன் மற்றும் சுய புலனுணர்வு இரண்டு அழிந்த நிலை அது.
It will be an exti ncti on into a Reality that is indefinable and inexpressible.
விவரிக்க முடியாத, விளக்க முடியாத, சத்தியத்தினுள் இழந்த நிலை அது.
But also we can realise that this self is not only our own spiritual being.
ஆனால் இந்த ஆத்மா நம் சொந்த ஆன்மிக ஜீவன் மட்டுமல்ல என்பதை நாம் உணர முடியும்.
It is also the true self of all others.
இது மற்ற அனைத்து ஜீவன்களின் உண்மையான ஆத்மாவும் ஆகும்.
It presents itself then as the underlying truth of cosmic existence.
பிரபஞ்ச வாழ்வின் அடிப்படைச் சத்தியமாக அது தன்னை வெளிப்படுத்துகிறது.
It is possible to remain in a Nirvana of all individuality.
அனைத்துத் தனித்தன்மைகளையும் இழந்து முற்றும் துறந்த நிலையில் நிலைத்திருக்க முடியும்.
It is possible to stop at a static realisation.
அசையா நிலையின் சித்தியில் நிலை பெற முடியும்.
 
We can regard the cosmic movement as a superficial play.
பிரபஞ்சத்தின் இயக்கத்தை ஒரு மேலெழுந்தவாரியான லீலையாக நாம் கருதலாம்.
Or we can regard it as an illusion imposed on the silent Self.
அல்லது அமைதியான ஆன்மாவின்மீது திணிக்கப்பட்ட ஒரு மாயையாகக் கருதலாம்.
It may be some supreme immobile, immutable status beyond the universe.
அது பிரபஞ்சத்தைக் கடந்த மிகச் சிறந்த, இயக்கமற்ற, மாற்றமற்ற ஒரு நிலையாக இருக்கலாம்.
But another less negative line of supernormal experience offers itself.
ஆனால் பிறிதொரு, எதிர்மறை நிலை குறைவான, அசாதாரணமான அனுபவம் நமக்குத் தன்னை உணர்த்துகிறது.
For there takes place a large dynamic descent.
அங்கு வீரியமான சக்தியின் கீழிறங்குதல் நடைபெறுகிறது.
It is a descent of light, knowledge, power, bliss or other supernormal energies.
அது ஒளி, ஞானம், ஆற்றல், ஆனந்தம் அல்லது மற்ற அசாதாரண சக்திகளின் கீழிறங்குதல் ஆகும்
They descend into our self of silence.
அவை நம் அமைதியான ஆத்மாவினுள் இறங்குகின்றன.
We can ascend too into higher regions of the Spirit.
ஆன்மாவின் மேல்நிலைகளுக்கு நம்மால் உயரவும் முடியும்
There its immobile status is the foundation of those luminous energies.
அங்கு அதன் அசைவற்ற நிலை அவ்வொளி பொருந்திய சக்திகளின் அடிப்படையாகிறது.
In either case we have risen beyond the mind of Ignorance.
எப்படியானாலும் மனத்தின் அறியாமையைக் கடந்து உயர்ந்த சென்றோம்.
We have risen into a spiritual state.
ஒரு உயர்ந்த ஆன்மிக நிலையை அடைந்தோம்.
But in the dynamic movement, there is a greater acti on of Consciousness-Force.
ஆனால், சக்தி வாய்ந்த சலனத்தில் சித் சக்தியின் கூடுதலான செயல்பாடு உள்ளது.
It may present itself simply as a pure spiritual dynamis.
அது எளிமையான ஒரு தூய ஆன்மிக சக்தியாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.
That dynamis would not be otherwise determinate in its character.
இல்லையெனில், அந்தச் சக்தி நிர்ணயத்தை அதன் இயல்பாகப் பெற்றிருக்க முடியாது.
Or it may reveal a spiritual mind-range.
அல்லது அது ஒரு ஆன்மிக மனத்திற்கான பரப்பை
வெளியிடுவதாக இருக்கலாம்
There mind would no longer be ignorant of the Reality.
அங்கு மனம் சத்தியத்தை அறியாத நிலையில் இருக்காது.
It is not yet a supermind level.
இருப்பினும் அது சத்திய ஜீவிய நிலையாகாது.
But it is derived from the supramental Truth-Consciousness.
ஆனால் அது சத்திய ஜீவியத்திலிருந்து வெளி வந்ததாகும்.
It is still luminous with something of its knowledge.
Contd...
 
*********
இருந்தாலும் அதன் அறிவில் ஏதோ ஒரு பிரகாசம் உள்ளது.
தொடரும்
 
********
ஜீவிய மணி
 
பேசுவதைவிட மௌனம் உயர்ந்தது.
மௌனத்தைவிட மௌனம் கலையாமல் பேசுவது உயர்ந்தது.
 
**********
ஜீவிய மணி
 
பேச்சு மூலம் யோகப் பலன் பெற பேசும் ஆசை அழிந்து தேவையான அளவுக்குப் பேசுவது முறை (controlled speech) என்கிறார் அன்னை.
 
********
 



book | by Dr. Radut