Skip to Content

2. காலத்தில் மலரும் பிரம்மம்

காலத்தில் மலரும் பிரம்மம்

காலம் ஆத்மாவின் அகம். காலத்தைக் கடந்த நிலை ஆத்மாவைக் கடந்து சத்திய ஜீவிய வாயிலை எட்டும் நிலை. காதல் வேகம் காலத்தைக் கடக்கும். வீரன் வீரமாகி போர்க்களத்தை நிரப்ப கண்டமான உடலை விட்டு அனந்தமான ஆத்மாவாகிறான். ஒரு ஜீவன் உயிர்ப் பெற்றெழுந்து உலகத்தை ஆளும் நேரம் மனிதன் தெய்வ நிலையைக் கடந்து செயல்படும் நேரம். இன்றே ஆயுள் முடியும் என்றால் ஆழத்தில் புதைந்துள்ள ஆண்டவன் அனைத்திலும் செயல்பட எழுகிறான். Apple கம்பனி ஸ்தாபகருக்கு கான்சர் வந்து இன்றே என் கடைசி நாளென அவர் பல ஆண்டுகள் செயல்பட்டு நிகழ்த்திய அற்புதங்களில் I-pod, I-pad இடம் பெறும். பக்தி ஞானத்தால் ஆர்வமானால் ஒரு நாள் விரிந்து ஓர் யுகமாக சாதிக்கும். மனமாற்றம் மகத்தானது. மகிமை மிகுந்தது. எவரும் செய்யாததை செய்து முடிப்பது. தவத்தை யோகமாக்கி, மோட்சத்தை விட்டு, திருவுருமாற்றத்தை நாடச் செய்வது. மனம் கருதும் பிரச்சினைகள் மாயமானவை. ஆத்மா அளிக்கும் வாய்ப்புகளை அறிய முடிவதில்லை. ஆர்வமாகப் பெற முயல்வதில்லை. தன்னையறியாத நேரம் நெஞ்சு நெகிழ்ந்து செய்யும் சிறு காரியம் உலகில் ஆத்ம மணம் வீசச் செய்து, அன்பரை அற்புத ஊற்றாக்குவதுண்டு. அது அன்னைக்குரிய தியானம். திகைப்பைக் கடந்த திவ்ய நேரம். பிரம்மம் உள்ளிருந்து எழுந்து வந்து உலகைக் கண்டு பூரித்து மகிழும் நேரம்.

 

********



book | by Dr. Radut