Skip to Content

09. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(ஏப்ரல் இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

CHAPTER 2 – THE MATERIALIST DENIAL

  1. Tradition reaches the barriers of sense knowledge and of the reasoning from sense Knowledge.
    Sri Aurobindo shows that Matter is a conceptual form of substance. He also shows that it is an arbitrary distinction in thought that divides form of substance from form of energy.

    மரபு புலனறிவையும், அதன் தருக்கங்களையும் தடைகளாகக் கொண்டிருக்கிறது.
    ஜடம் என்பது பொருளின் கருத்தாக்க ரூபம் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். எண்ணத்திலிருக்கும் காரணமற்ற வேற்றுமைப்படுத்தும் தன்மை, சக்தியின் ரூபத்தை எண்ணத்தின் ரூபத்திலிருந்து பிரிக்கிறது என்றும் கூறுகிறார்.

  2. Tradition sees Matter, Life and Mind as they are.
    Sri Aurobindo sees them as various formulations of Energy.

    ஜடம், வாழ்வு, மனம் ஆகியன எப்படி இருக்கின்றனவோ, அப்படியே மரபு காண்கிறது.
    ஸ்ரீ அரவிந்தர் அவற்றை சக்தியின் வெவ்வேறு உருவாக்கங்களாகக் காண்கிறார்.

  3. Tradition does not carry its inquiry beyond.
    Sri Aurobindo shows the work for the Will behind the Energy is involution and evolution.

    மரபு தன் ஆராய்ச்சியை ஓர் எல்லைக்குமேல் தொடர்வதில்லை.
    சக்தியின் பின்னிருக்கும் செயலுக்கான விருப்புறுதியே படைப்பும், பரிணாமமும் என்பதை ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  4. Tradition, seeking moksha, attempts no unity.
    Sri Aurobindo shows how the unity in the universe can be achieved.

    மரபு மோட்சத்தை நாடுகிறது. ஐக்கியத்தை நாடவில்லை.
    ஸ்ரீ அரவிந்தர் பிரபஞ்சத்தில் ஐக்கியத்தை எவ்வாறு அடையலாம் என்று காட்டுகிறார்.

  5. Tradition leaves the last knot of our bondage, ego, as it is.
    Sri Aurobindo seeks the realization of His divine nature in our human existence.

    நம் தளையின் கடைசி முடிச்சான அகந்தையை மரபு அப்படியே விட்டு விடுகிறது.
    நம் மனித இருப்பில் ஆண்டவனின் இறைசுபாவத்தை கண்டடைதலை ஸ்ரீ அரவிந்தர் நாடுகிறார்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் இரட்டைகளையறியும்.
ஆன்மா ஆனந்தத்தை ஆழத்தில் நிரந்தரமாக உணரும்.
 

********



book | by Dr. Radut