Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

இரவில் சில மணி நேரத்தில் ஏராளமான காரியம் முடியும்

  • மணிக்கொரு முறை சமர்ப்பணத்தை ஏற்கும் அன்பர்கள் உண்டு.
  • தீராத பிரச்சினை தீரும் என நம்பிக்கை ஏற்பட்டவர் இம்முறை பலிப்பதைக் கண்டு, அரை மணிக்கொரு முறை, கால் மணிக்கொரு முறை, ஐந்து நிமிஷத்திற்கொரு முறை சமர்ப்பணம் செய்து வாழ்வில் பெரிய அற்புதத்தை நிகழ்த்தினார்.
  • பெரும்பாலும் வியாதி குணமாக, பிரச்சினை தீர அன்பர்கள் இதை மேற்கொள்வதுண்டு.
  • சமர்ப்பணத்தை ஏற்று, எந்தப் பிரச்சினையுமில்லாதபொழுது பக்திக்காக சமர்ப்பணத்தை ஏற்பவரும் உண்டு.
  • சில மணி நேரத்தில் அன்னை சக்தி பிரவாகமாக அவருள் எழுவதுண்டு.
  • அது தலைமுதல் கால்வரை ஓடுவது தெரியும்.
  • தானே ஓடும், ஓடி நின்று விடும்.
  • அது ஒரு மாதம்வரை புத்துணர்வு தரும்.
  • இதை அடிக்கடி மேற்கொள்வது யோகம்.
  • யோகம் பலிக்கும் ஆரம்ப நிலை.
  • இடைவிடாது அன்னை நெஞ்சில் தெரிவார்.
  • எந்தப் புத்தகத்தில் எதைத் தேட முயன்றாலும் திறந்தவுடன் அந்தப் பக்கம் வரும்.
  • இந்நிலையை அன்னை விழிப்பு (opening) என்று கூறுவார்.
  • விழிப்பு, ஏற்புத்திறன் (receptivity) யோகத்திற்கு முக்கியம்.
  • இதுபோன்ற நிலை தீவிரமான அன்பருக்குச் சில நாட்கள் தொடர்ந்து வருவதுண்டு.
  • அந்நாட்களில் இரவில் வேலை செய்ய நேர்ந்தால் ஏழு அல்லது எட்டு வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக எளிமையாக முடிவதைக் காணலாம்.
  • வழக்கமாக இவ்வேலைகளில் ஒன்று முடிய சில மாதமாகும்.
  • நமக்குப் பாக்கியான வேலை நடக்கும்.
  • அன்னை செய்வது உடலால் செய்யும் யோகம்.
  • அவர் யோகத்தை அவர் சார்பாக உடலின் செல்களே செய்கின்றன.
  • அவை இறைவனை நோக்கி ஆர்வமாகக் குரல் எழுப்புகின்றன.
  • எதைச் செய்யச் சொன்னாலும் தயங்காமல் செய்கின்றன.
  • அன்னையின் யோகம் உடலால் பிரபஞ்சத்தில் பிரம்மத்தால் நடக்கிறது.
  • உலகில் 1000 ஆண்டில் நடப்பது அன்னைக்கு இரவில் சில மணி நேரத்தில் நடக்கிறது.
  • பகலில் அன்னை வேலை செய்யும் பொழுதும், பின்னணியில் இவ்வேலை தொடர்கிறது.
  • அன்பர்களைக் காண்பது பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ளும் அனுபவம் தனக்கு என்கிறார் அன்னை.

******

ஜீவிய மணி
 
மனத்தின் முன்னேற்றம் உணர்வின் தெளிவைப் பொருத்தது.
 

*******



book | by Dr. Radut