Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

76. பலன் தரும் புதிய எண்ணம் மனதிலுதிப்பது.

 • சிருஷ்டியில் உயர்ந்தது எண்ணம்.
 • உலகில் உலவும் எண்ணங்களை நம் மனம் ஏற்று சிந்தனை செய்கிறது.
 • நமக்கு என சொந்தமான எண்ணம் என்பது ஒன்றுமில்லை.
 • நாம் கேட்டு, படித்து அறியாத எண்ணம் மனத்திலிருந்து எழுவதுண்டு.
 • அவை ஏற்கனவே நம் மனத்துள் வெளியிலிருந்து வந்து தங்கியவை.
 • புதிய எண்ணம் மேதைக்குத்தான் (genius) தோன்றும்.
 • மேதைக்குப் புதிய எண்ணம் தோன்றினால் அதை உலகம் ஏற்க 50 (அல்லது) 100 ஆண்டாகும். சில சமயம் பல நூறு ஆண்டுகளாகும்.
 • சீனுவாச ராமானுஜம் எழுதியவற்றில் பல பகுதிகளை இன்னும் உலகம் அறியவில்லை.
 • என்ஜீனை 200 ADயில் கண்டுபிடித்தனர். 1000 (அல்லது) 1500 ஆண்டுகளில் உலகம் அதை ஏற்கவில்லை.
 • 1600இல் லியர்னாடோ கண்டதை 1900தில் அறிஞர்கள் கண்டு கொண்டனர்.

  பலன் தரும் எண்ணம் தோன்றுவது சத்திய ஜீவியத்தில்தான் தோன்றும்.

 • 1848இல் காரல் மார்க்ஸ் சொன்னதை 1917இல் ரஷ்யா ஏற்றது.
 • 1920இல் மகாத்மா கூறியதை உலகம் 1960இல் ஏற்றது.
 • யூனஸ் பாங்க் பெண்கட்குக் கடன் தரக் கூறியதை உலகம் உடனே ஏற்றது.

  அது புதிய பலன் தரும் எண்ணம்.

 • அது பலித்ததால் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர்.
 • பலன் தரும் எண்ணம் என்றால் மனம் உடலில் பலிக்கிறது எனப் பொருள்.
 • மனம் உடலில், உடலின் செயலில் பலிப்பது (descent) சிருஷ்டியாகும்.
 • சிருஷ்டி என்பது புதிய படைப்பு, புதிய படைப்புக்குரியவன் மேதை.
 • புதிய படைப்பு எழும் மனம் பூரண யோகத்திற்குரிய ஜீவனுடையது.
 • ஜீவனுக்குப் பல்லாயிரம் முனைகள் உண்டு.

  உணர்வு முனையில் சிறந்து பழுத்தவன் கவி.
  செயலில் சிறந்து வென்றவன் அரசன்.
  எண்ணம் சிறந்து எழும் எழுத்து ஒருவனை எழுத்தாளராக்கும்.
  கலை சப்தமாக ஜீவனில் எழுவது சங்கீதம்.
  கலை மூலமாக ஜீவனில் எழுந்து கைகளால் வெளிப்படுவது ஓவியம்.
  சிற்பம் ஓவியத்தைவிட உயர்ந்தது, ஏனெனில் இதை அழித்து எழுத முடியாது.
  கலையின் திருஷ்டி செயலில் முழுமை பெறுவது சிற்பக் கலை.
  எண்ணம் அவற்றோடு ஒப்பிடும் பொழுது எளிமையானது என்றாலும்,
  மனம் உணர்ச்சியைவிட உயர்ந்தது என்பதால்,
  அவ்வகையில் உயர்ந்தது.
  எண்ணம் உயர்ந்த நிலைக்குரிய சிறிய சாதனை.
  என்றாலும் அது யோக சாதனை.
  யோக சாதனை என்பதால் பூரண வாயிலில் உள்ள சாதனை.

 • பூரண யோகம் வாழ்வின் எந்த முனையிலும் வாயிலாக வெளி வரும்.

  வாயிலின் சிறப்பு நம் தேவையைக் குறிக்கும்.
  எந்த இடத்து வாயில் என்பதைவிட எவ்வளவு ஆழ்ந்தது என்பதே முக்கியம்.

*******

77. வலி ஆனந்தமாவது.

 • வலி ஆனந்தமாவது.
 • வலி உடலுக்கில்லை, மனத்திற்கு என்பது நெடுநாளைய அனுபவம்.
 • போர் முனையில் இந்த அனுபவம் உண்டு. க்ஷத்திரியன் பெறும் அனுபவம் அது.
 • கர்ணனுடைய தொடையில் வண்டு போட்ட துவாரத்தை அவன் பொறுத்துக் கொண்டான்.
 • மனம் வலியைப் பொறுக்க முடிவு செய்தால், பொறுமைக்கு அளவில்லை.
 • இது விரதம். உடல் செய்யும் தவம். உலகம் ஏற்கனவே அறிந்த உண்மை.
 • வலி ஆனந்தமாக மாறுவது திருவுருமாற்றம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவது.
 • ஆன்மா உயர்ந்தது, மேலிருந்து மனிதனை அழைக்கிறது என்பது மோட்சம், சொர்க்கம், அந்த தவம் வலியை அளவு கடந்து பொறுக்கவல்லது.
 • ஆன்மா உயர்ந்தது மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆன்மா, ஜடத்திலிருந்து எழுவது என்ற கொள்கைக்குத் தீமையில்லை, வலியில்லை - வலி தோற்றம், ஆனந்தம் முழுமையின் சத்தியம்.
 • சிவந்த எறும்புகள் ஜெயிலில் கடித்த பொழுதும், தேள் கொட்டிய பொழுதும் பகவான் வலியை ஆனந்தமாக மாற்றினார். தொடை எலும்பு முறிந்த பொழுது அந்த அனுபவம் உயர்ந்தது என்றார்.
 • சுளுக்கு, தலைவலி, காயம் சிறு வலி தந்தால் பிரார்த்தனையால் வலி குறைந்து மறைவதை நாம் அறிவோம்.
 • வலி மறைந்தபின் பிரார்த்தனை தொடர்ந்தால், வலி ஆனந்தமாக மாறுவது தெரியும்.
 • மனித நிலையில் பிரார்த்தனை வலியைப் போக்கும்.
 • அன்பர் மனித நிலையைக் கடந்தால், தெய்வ நிலைக்கு வலி ஆனந்தமாகும்.
 • தத்துவரீதியாக பிரச்சினை வாய்ப்பாக மாறுவதும், வஆன ந்தமாக மாறுவதும் ஒன்றே.
 • நஷ்டம் அன்பருக்கு இலாபம், திருவுருமாறினால் பெரும் இலாபம் என்பது கொள்கை.
 • தீமை என்பது திருவுருமாறினால் பெரிய நன்மையாகும் என்பது II/14 இரண்டாம் புத்தகம் (The Life Divine) 14ஆம் அத்தியாயத்தின் மையக் கருத்து.
 • தவறு, பொய், குறை ஆகியவை எப்படித் திருவுருமாறுகின்றன, ஏன் பரிணாமத்திற்கு அவசியம் என்பதை விளக்கும் அத்தியாயம் இது.
 • தவறில்லாவிட்டால் மெய் மெய்யாக வழியில்லை என்பதை எடுத்துக் கூறுவது இந்த அத்தியாயம்.
 • இதன் முடிவில் பரிணாமம் பூர்த்தியாக ஜீவன், ஜீவியமாக வேண்டும். அதற்குமுன் இயற்கை தெய்வீக இயற்கையாக வேண்டும். இவை ஆன்மா சைத்திய புருஷனாவதால் ஆரம்பமாகிறது என்று இந்த அத்தியாயம் முடிகிறது.
 • உலகப் போர் வேதனையின் சிகரம். அதனால் உலகம் கற்பனைக்கெட்டாத அளவு முன்னேறியதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
 • உலக சரித்திரத்தில் உள்ள பெருநிகழ்ச்சிகள் (dark ages) இருண்ட நூற்றாண்டுகள் எப்படி விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்பதும் உதாரணமாகும்.
 • இன்று I.A.S.இல் கால் பாகம் S.C. என்பதை 1947இல் பேசவும் முடியாது.
 • தாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவனாக இருப்பதால் சலுகையும் உரிமையும் அதிர்ஷ்டமாக அவனைத் தேடி வருவது இன்றைய அனுபவம்.
 • டைபாய்டு, டி.பி. போன்ற நோய்கள் வந்தால் ஏற்கனவே பிழைக்க முடியாது, பிழைத்தால் உடல் அதிக நலம் பெறும் என்பது அனுபவம்.
 • இன்று USA உலகத் தலைமையைப் பெற்றிருப்பதே அதற்குப் பெரிய உதாரணம். வறண்ட பாலைவனம், குண்டர்கள் வாழுமிடம் அமெரிக்கா என்பது சென்ற நூற்றாண்டின் அபிப்பிராயம்.
 • ஒதுக்கப்பட்டவன் உயர்ந்து தலைவனானது அமெரிக்க அனுபவம்.
 • மாமியார் கொடுமை மாறி மருமகள் கொடுமையாயிற்று.
 • முதலாளி கொடுமை மாறி தொழிலாளி கொடுமையாயிற்று.
 • கடைக்காரரின் இராஜ்யம் மாறி வாடிக்கைக்காரரின் இராஜ்யமாயிற்று.
 • பள்ளிக்கூடங்கள் சிறைவாசம் மாறி விளையாட்டு உலகமாக மாறி வருகிறது.
 • பெற்றோர் அதிகாரம் போய் நாளாயிற்று. சிறுவர் வாழ்வைக் கொண்டாடும் நேரம் வந்துள்ளது.
 • ஆனால் கொடுமை அழியவில்லை, அதிகாரம் அழியவில்லை, பயம் போகவில்லை.
 • 1956இல் சத்திய ஜீவியம் வந்தபின் உலகம் அறியாமல் உலகம் பெறும் மாற்றம் இவை.
 • திருவுருமாற்றத்தின் சிகரம் வலி ஆனந்தமாவது.
 • ஒருவருக்கு இந்த அனுபவம் உண்டானால், அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.

அதனால் இது பூரண யோக வாயிலாகும்.

தொடரும்.....

*******

ஜீவிய மணி
 
தாம் மாறாமல் நிலைமை மாற வேண்டும் என்பது
உண்மையில்லை என்பதாகும்.
இதை வலியுறுத்தினால் அது தீயசக்தியாகும்.
 

*******book | by Dr. Radut