Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

XXV. The Knot of Matter
25. ஜடத்தின் முடிச்சு
We have now arrived at a conclusion.
Page 240
நாம் ஓர் முடிவுக்கு வந்துள்ளோம்.
We can assume it may be correct.
 Para 1
இது சரியான முடிவு எனக் கொள்ளலாம்.
We base ourselves on some data.
நாம் சில விவரங்களை ஏற்றோம்.
No other conclusion is possible on this data.
இந்த அடிப்படையில் வேறு முடிவுக்கு வர முடியாது.
Spirit and Matter are two ends of creation.
ஆன்மாவும், ஜடமும் சிருஷ்டியின் இரு முனைகள்.
There is a sharp division between them.
இவற்றிடையே தீவிரமான பிரிவினையுண்டு.
It is our practical experience.
இது நம் நடைமுறை அனுபவம்.
Long habit of mind has created it.
இந்த வித்தியாசம் நெடுநாளாக மனம் ஏற்படுத்தியது.
Now we have a new conclusion.
நாம் இன்று இந்த புதிய முடிவை அறிவோம்.
It says this difference is no longer real.
இம்முடிவு இப்பிரிவினைக்கு உண்மையில்லை எனக் கூறும்.
The world is a differentiated unity.
பிரிந்து தோன்றும் ஐக்கியம் உலகம் என்பது.
It is a manifold oneness.
பல முகங்களைக் கொண்ட ஒருமையின் உண்மை உலகம்.
It looks like a constant compromise.
இரு வேறுபாடுகளை இணைக்கும் தொடர்ந்த முயற்சியல்ல உலகம்.
It is a compromise between eternal dissonances.
நிரந்தர வேறுபாடுகளை உடன்பாடாக்கும் முயற்சியல்ல உலகம்.
There are irreconcilable opposites.
உடன்பட மறுக்கும் எதிரானவையுண்டு.
There is an everlasting struggle between them.
அவற்றிடையே உள்ள போராட்டம் யுகாந்தமானது.
There is a oneness.
ஒருமையுண்டு.
It is inalienable.
அது நீக்கமற நிறைந்தது.
It creates an infinite variety.
அனந்தமான வேறுபாட்டை அது உற்பத்தி செய்கிறது.
It is the foundation of creation.
அது சிருஷ்டிக்கு அடிப்படை.
It is the beginning.
அதுவே ஆதியும் முதலுமாகும்.
There is the apparent division.
தோற்றமான பிரிவினை நிரந்தரமாக உண்டு.
A constant reconciliation is there.
பிரிவினையை இணைக்கும் முயற்சி இருந்தபடி உள்ளது.
These are all possible disparates.
எல்லாவிதமான பிரிந்து நிற்கும் பிரிவினையும் உண்டு.
There is a struggle combining them.
அவை இணைய போராட்டமான முயற்சி இருந்தபடி உள்ளது.
It is for vast ends in a secret consciousness.
இரகஸ்ய ஜீவியத்தின் எல்லையில்லா இலட்சியங்களை அவை நாடுகின்றன.
There is a Will.
இறைவனின் திருவுள்ளம் இடைவிடாமல் செயல்படுகிறது.
It is ever One.
அது எப்போதும் ஒன்றே.
Its action is complex.
சிக்கல் போன்ற சிறப்புடைய செயலது.
The Will is its master.
திருவுள்ளம் இச்செயலை நிர்ணயிக்கும்.
It appears its real character.
அதன் உண்மையான சுபாவமாக அது காட்சியளிக்கிறது.
It is in the middle.
இலட்சியம் முடிவானால் திருவுள்ளம் மையமானது.
There must be a conclusion.
முடிவு ஒன்றிருக்க வேண்டும்.
There is an emerging Will.
திருவுள்ளம் பரிணாமப் பிறப்பெடுக்கிறது.
It has a fulfillment.
திருவுள்ளத்திற்கும் ஜீவியத்திற்கும் பூரணமுண்டு.
There is a triumphant harmony.
வெற்றி நிறை சுமுகமும் உண்டு.
That must be its conclusion.
அதுவே முடிவாகும்.
Substance is the form.
பொருள் ரூபத்தாலானது.
It is the form of itself on which it works.
எங்கு செயல்படுகிறதோ அதன் ரூபம் அது.
There is the substance.
சிருஷ்டிக்குப் பொருளுண்டு.
Matter is one end of it.
ஜடம் அதன் ஒரு முனை.
Spirit is the other.
ஆன்மா அடுத்த முனை.
The two are one.
இரண்டும் ஒன்றே.
Spirit is the soul of reality.
ஆத்மா சத்தியத்தின் (ஆத்மா) ஜீவன்.
We sense that as Matter.
நாம் சத்தியத்தை ஜடமாக அறிவோம்.
Matter is the form body of Spirit.
ஜடம் ஆன்மாவின் ரூபமும் உடலுமாகும்.
It is the body we realise as Spirit.
எதை ஆன்மா என அறிகிறோமோ அதன் உடல் ஜடம்.
Certainly there is a vast practical difference.
Page 241
Para 2
நடைமுறையில் பெரிய வித்தியாசமுண்டு.
On that difference the world existence is founded.
அந்த வேற்றுமை உலகம் இயங்கும் அடிப்படை.
It is in ever-ascending series.
அது படிப்படியாக உயரும் கட்டங்கள்.
It is a whole of an indivisible series.
துண்டு செய்ய முடியாத முழு அடுக்குகள் அவை.
Substance is conscious existence.
பொருள் என்பது தன்னையறியும் வாழ்வு.
It presents itself to sense as object.
புலனுக்கு புறமான பொருளாக அது காண்கிறது.
There is a work of world-formation.
உலகை உருவாக்கும் வேலையுண்டு.
It is cosmic progression.
அது பிரபஞ்ச முன்னேறும் பாதை.
A sense relation is thus established.
புலனுணர்வின் தொடர்பு அதனால் எழுகிறது.
This is created on that basis.
இந்த அடிப்படையில் எழுந்தது அது.
There need not be only one basis.
ஒரு அடிப்படை மட்டும் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை.
It will be one fundamental principle of relation.
தொடர்புக்குரிய ஒரு அடிப்படை தத்துவமாகும் அது.
It is immutably created.
அது மாறாதபடி சிருஷ்டிக்கப்பட்டது.
It is created between sense and substance.
புலனுக்கும் பொருளுக்குமிடையே சிருஷ்டிக்கப்பட்டது அது.
On the contrary, there is something else.
இதற்கு மாறானதுண்டு.
There is an ascending series.
படிப்படியாக உயரும் அடுக்குகள் அவை.
It is a developing series.
அதன் தரம் உயரும் அடுக்குகள் அவை.
We are aware of another substance.
வேறொரு பொருளும் உண்டு.
Pure mind works there.
தூய மனம் அங்கு வேலை செய்கிறது.
It is its natural medium.
அதுவே மனத்திற்கு இயல்பான கருவி.
It is subtler.
அதிக சூட்சுமமானது அது.
It is more flexible and more plastic.
அது வளையும் தன்மையுடையது.
It is more so than Matter.
ஜடத்தைவிட அதிகமாக இக்குணம் பெற்றது அது.
We can speak of a substance of mind.
நாம் மனத்தின் பொருளெனப் பேசலாம்.
It is so because we are aware of a subtler medium.
இதைவிடச் சூட்சுமமான லோகமிருப்பதால் நாம் அப்படிப் பேசலாம்.
Forms arise in that medium.
அந்த லோகத்தில் ரூபங்கள் உருவாகும்.
And actions take place.
அங்கு செயல்கள் உருவாகின்றன.
There is pure dynamic life energy.
தூய்மையான தீவிரமான வாழ்வின் சக்தியுண்டு.
We can speak also of its substance.
அதன் பொருளையும் நாம் பொருட்டாகக் கருதலாம்.
It is other than the subtlest forms of material
substance.
அது ஜடப் பொருளின் சூட்சுமமான ரூபங்களினின்று வேறுபட்டது.
And it is other than the physically sensible
substance.
அது உடலுணர்வால் அறியும் பொருளினின்று வேறுபட்டது.
Spirit itself is pure substance of being.
ஆத்மா ஜீவனின் தூய பொருள்.
It presents itself as an object.
அது தன்னைப் புறப்பொருளாக்குகிறது.
It is no longer to the physical, vital or mental sense.
அது உடல், உயிர், மனத்தின் புலனால் அறியப்படுவதில்லை.
But it is to the light of a pure spiritual perceptive knowledge.
தூய ஆன்மீகம் உணரும் ஞானத்திற்கு அது புலப்படும்.
There the subject becomes its own object.
அங்கு அகம் புறமாகும்.
It means the Timeless and Spaceless is aware of itself.
அதாவது காலம் இடத்தைக் கடந்தது தன்னையறியும்.
It is a purely self-conceptive self-extension.
அது தூய்மையான சுய சிந்தனையால் சுயமாக நீண்டு வந்ததாகும்.
It is the basis of all the primal material existence.
அது அடிப்படையான ஜட வாழ்வின் அஸ்திவாரமாகும்.
There is something beyond this foundation.
இந்த அடிப்படையைக் கடந்த ஒன்றுண்டு.
It is the disappearance of all conscious
differentiation.
தானறியும் வேறுபாடுகளழியும் நிலையது.
It is between subject and object.
அகம் புறம் என்ற வேறுபாடழியும்.
It is an absolute identity.
அது பூரண ஐக்கியம்.
There we can no longer speak of substance.
அந்நிலையில் பொருள் என்பதில்லை.
It is a purely conceptive difference.
Page 241
அந்த வேறுபாடு முழுமையாக சிந்தனைக்குரியது.
It is spiritually conceptive.
 Para 3
அது ஆன்ம சிந்தனை.
Not mentally conceptive.
மனம் செய்யும் சிந்தனையல்ல.
It ends in a practical distinction.
அது நடைமுறை வேறுபாடாக முடியும்.
It creates the series.
அடுக்குத் தொடரை ஆரம்பிப்பது அதுவாகும்.
It descends through Mind to Matter from Spirit.
அது ஆன்மாவிலிருந்து மனம் வழி ஜடம் வருகிறது.
It ascends again.
மீண்டும் அது உயர்ந்து எழுகிறது.
It ascends from Matter to Spirit through Mind.
மனம் வழி அது மீண்டும் ஆத்மாவையடைகிறது.
But the real oneness is never abrogated.
உண்மையான ஒருமை ஒருகாலும் அழிவதில்லை.
We can get back to the original and integral view of things.
மூலமான இணைந்த பார்வையை நாம் மீண்டும் பெறலாம்.
We see it is never even truly diminished or
impaired.
அப்பொழுது அது உண்மையிலேயே குறையவில்லை,
சிதையவுமில்லை எனத் தெரியும்.
Not even in the grossest densities of Matter.
ஜடத்தின் ஜடமான கனத்திலும் அது குறையவில்லையெனத் தெரியும்.
Brahman is the cause.
பிரம்மமே மூல காரணம்.
It supports.
அது ஆதரவு தருகிறது.
It is the indwelling principle of the universe.
அதுவே உள்ளுறை தத்துவம். அது பிரபஞ்சத்துள் உறைகிறது.
It is not only that.
அது மட்டுமல்ல.
Brahman is also the material of the universe.
பிரபஞ்சத்தின் ஜடப்பொருளும் பிரம்மமே.
Matter also is Brahman.
ஜடமும் பிரம்மம்.
It is nothing other than Brahman.
ஜடம் பிரம்மம் தவிர வேறெதுவுமில்லை.
Matter is not different from Brahman.
ஜடம் பிரம்மத்தினின்று வேறுபட்ட ஒன்றில்லை.
Matter can be cut off from Brahman.
ஜடம் பிரம்மத்திலிருந்து பிரிவதாக நாம் கொள்ளலாம்.
Then it can't be so.
அப்பொழுது இது உண்மையில்லை.
But it is as we have seen.
அப்பொழுது ஜடம் நாம் ஏற்கனவே அறிந்தது போலாகும்.
It is the final form of divine Existence.
தெய்வீகப் பெருவாழ்வின் முடிவான தோற்றம் ஜடம்.
With all the God ever present in it and behind it.
எல்லா வகையிலும் கடவுள் அதனுள் இருப்பது தெரியும். அதன் பின்னிருப்பதும் தெரியும்.
Matter is apparently brute.
ஜடம் பார்வைக்கு கரடு முரடாய்த் தோன்றுகிறது.
It is everywhere.
அது எங்கும் உண்டு.
There is a mighty dynamic force of life.
வாழ்வில் பெரிய தீவிர சக்தியுண்டு.
It is always instinct with it.
ஜடம் எப்பொழுதும் அதை உள்ளபடி உணர்கிறது.
This is dynamic but apparently unconscious Life.
இது தீவிரமான கண்மூடிய வாழ்வு.
It secrets within it.
அதனுள் ஏதோ ஒன்று ஊறுகிறது.
An ever working unapparent Mind.
எப்பொழுதும் செயல்படும் தோற்றமற்ற மனம் அது.
It has secret dealings.
அதற்கு இரகஸ்ய வேலைகளுண்டு.
It is the overt energy.
அது வெளிப்படையாகத் தெரியும் சக்தி.
It is the ignorant Mind.
அது அறியாமை மனம்.
It is the unillumined and groping Mind.
பிரகாசமற்ற உழலும் மனம் அது.
It is in the living body.
அது உயிருள்ள உடலில் உள்ளது.
It is supported by the real self.
அதன் உண்மையான ஆத்மாவால் அது ஆதரிக்கப்படுகிறது.
It is soveringnly guided by it.
அவ்வாத்மா அதற்கு ராஜபாட்டையைக் காட்டுகிறது.
The Supermind is there.
அங்கு சத்திய ஜீவியம் உண்டு.
It is there in the unmentalised Matter.
மனம் உருவாகாத ஜடத்தில் சத்திய ஜீவியம் உண்டு.
So all Matter is a mode of Brahman.
ஜடம் முழுவதும் பிரம்மமாகும்படி அது உள்ளது.
It is so with Life, Mind, Supermind.
அதுவே வாழ்வுக்கும், மனத்திற்கும், சத்திய ஜீவியத்திற்கும் உண்மை.
Brahman is Eternal, it is Spirit, it is Sachchidananda.
நிரந்தரமான பிரம்மம் ஆத்மாவாகவும் சச்சிதானந்தமாகவுமாகும்.
Brahman dwells in them all and is all these things.
பிரம்மம் அவற்றுள் உறையும். அவை அனைத்தும் பிரம்மம்.
Though no one of them is His absolute being.
இவற்றுள் எதுவும் பிரம்மத்தின் பிரம்ம ஜீவியமாகாது.
But still there is this difference.
Page 242
இன்னும் இந்த வித்தியாசம் உண்டு.
The difference is conceptive.
Para 4
வித்தியாசம் சிந்தனைக்குரியது.
Also there is practical distinction.
மேலும் நடைமுறையில் பிரிந்தது தனித்து விளங்கும்.
Matter is not cut off from Spirit.
ஜடம் ஆன்மாவிலிருந்து பிரியவில்லை.
Yet it appears to cut off.
இருந்தாலும் பிரிந்ததாகத் தோன்றுகிறது.
It is a practical definiteness.
நடைமுறையில் பிரிந்து தோன்றுவது தெளிவான பிரிவு.
It is so different.
ஜடம் வித்தியாசமானது.
So contrary in law.
சட்டத்தில் முரணானது.
Ours is material life.
நம் வாழ்வு ஜடமானது.
It has an appearance.
அதற்கு ஒரு தோற்றமுண்டு.
It is a negation of all spiritual existence.
ஆன்மீக வாழ்வை முரண்பாடாக்கும் தோற்றம் அது.
It is a rejection.
அது மறுப்பு.
It might appear to be a short cut.
அது குறுக்கு வழியாகத் தோன்றும்.
It is a way out of difficulty.
சிரமத்தைக் கடக்கும் வழியாகத் தோன்றும்.
Undoubtedly it is.
அது குறுக்கு வழி என்பது உண்மை.
It is a short cut or any cut is no solution.
குறுக்கு வழி, வழி எதுவானாலும் அது தீர்வாகாது.
In Matter undoubtedly lies the crux.
ஜடத்தில் முக்கியத்துவம் உள்ளது.
That raises the obstacle.
தடை அதிலிருந்து எழுகிறது.
Matter of Life is gross.
ஜட வாழ்வு ஜீவனற்ற வாழ்வு.
It is limited and stricken.
அது அளவுள்ளது, அளவால் பாதிக்கப்பட்டது.
Death and pain do it.
மரணமும், வலியும் அளவையும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.
Because of Matter Mind is more than half blind.
ஜடத்தால் மனம் பாதிக்குமேல் குருடாகி விட்டது.
Its wings are clipped.
மனம் சிறகொடிந்து விட்டது.
Its feet are tied to a narrow perch.
அதன் கால்கள் குறுகிய இடத்தில் சிக்கிக் கொண்டன.
It is held back from vastness.
விரிந்த பரப்பு அதற்கில்லை.
There is freedom above.
மேலே சுதந்திரம் உண்டு.
It is conscious of that freedom.
மனம் அந்த சுதந்திரத்தை அறியும்.
They are denied to the Mind.
மனம் அவற்றைப் பெறுவதில்லை.
There is the exclusive spiritual seeker.
தவசி ஆன்மாவை மட்டும் நாடுகிறார்.
He is justified from his point of view.
அவனுடைய பார்வையில் அவன் சரி.
He is disgusted with mud of Matter.
ஜடத்தின் சக்தி வெறுப்பளிக்கிறது.
He is revolted by the animal grossness of Life.
விலங்கின் ஜீவனற்ற வாழ்வு வெறுப்பைத் தருகிறது.
He is impatient of the self-imprisoned narrowed life.
தானே சிறைப்பட்ட கொடுமையினின்று வெளிவர அவசரப்படுகிறான்.
It is the downward vision of Mind.
அது மனத்தின் கீழ்நோக்கு.
He is determined to break from it all.
அவற்றை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டான்.
He wants to return by inactive silence to the spirit's immobile liberty.
செயலற்ற மௌனத்தால் ஆன்மாவின் அசைவற்ற சுதந்திரத்தை
அவன் நாடுகிறான்.
But this is not the sole point of view.
இது மட்டும் ஒரே கொள்கையில்லை.
It has been sublimely held.
இக்கருத்தை உலகம் உன்னதமாகக் கொண்டது.
It has been glorified by shining golden examples.
ஜோதிமயமான பொன் போன்ற பெரியோர் போற்றியது இது.
Therefore it is respected.
இக்காரணங்களால் இது உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
Therefore it cannot be ultimate wisdom.
அதனால் இது முடிவான விவேகமில்லை.
It need not be integral because of it.
அதனால் முழுமை பெற்ற இணைந்த ஒருமையாகாது.
Rather let us liberate ourselves.
மாறாக நாம் விடுதலையை நாடுவோம்.
It is a liberation from passion and revolt.
அது தீவிர பாசத்தின் புரட்சியின்று பெறும் விடுதலை.
Let us see what the divine order means.
தெய்வீக சட்டமெது எனக் காண்போம்.
That is the universe.
அதுவே பிரபஞ்சம்.
This is a great knot.
இது பெரிய முடிச்சு.
It is a tangle of Matter.
ஜடத்தின் பெரும் சிக்கலிது.
It denies the Spirit.
ஆத்மாவை மறுக்கும் ஆர்வமான அவலம்.
Let us seek to separate its strands.
அதன் இழைகளைப் பிரிப்போம்.
Let us find them out.
அவற்றைத் தேடி எடுப்போம்.
It can be loosened by a solution.
ஒரு தீர்வு முடிச்சைத் தளர்த்தும்.
Not cut it by violence.
வன்முறையில் வெட்ட வேண்டாம்.
We must state the difficulty.
நாம் சிக்கலை வெளியிடுவோம்.
Opposition first entirely.
எதிர்ப்பை முதலில் கூறுவோம், முழுவதும் கூறுவோம்.
Trenchantly with exaggeration.
வேகமாக மிகைப்படுத்துவோம்.
If need be,
Rather with diminution.
தேவைப்பட்டால்,
குறைத்தும் கூறலாம்.
And then look for the issue.
பின் தீர்வு காண்போம்.
There is a first opposition.
Page 243
முதலில் எழும் எதிர்ப்புண்டு.
It is fundamental.
Para 5
அது அடிப்படையானது.
It is the culmination of the principle of Ignorance.
அஞ்ஞானம் முதிர்ந்து முடிவடையும் மூலம் ஜடம்.
Here consciousness has lost itself.
இங்கு ஜீவியம் தன்னைத் தன்னில் இழந்தது.
In a form of its works.
வேலையின் உருவத்தில் தன்னை ஜீவியம் இழந்தது.
As a man might forget in extreme absorption.
மனிதன் ஈடுபட்டு தன்னை மறப்பது போன்றது அது.
Not only who he is, but he is at all.
தான் யாரென்பதையும், தானுண்டு என்பதையும் மறக்கிறான்.
Momentarily he becomes the work.
க்ஷணத்தில் வேலையாக மாறுகிறான்.
Becomes the work and force that does it.
வேலையாகவும் அதைச் செய்யும் சக்தியாகவும் மனிதன் மாறி தன்னை இழக்கிறான்.
The Spirit is self-luminous.
ஆத்மா சுயம்பிரகாசமானது.
It is infinitely aware of itself.
ஆத்மா தன்னை அனந்தமாக அறியும்.
It knows itself behind all its workings and force.
செய்யும் வேலை சக்திக்குப் பின் ஆத்மா தன்னை அறியும்.
And their master.
அதன் தலைவரையும் அறியும்.
It seems to have disappeared.
மறைந்ததாகத் தோன்றும்.
And not to be at all.
தானிருப்பதையே அறியாது.
Somewhere He is perhaps.
எங்கோ ஒருவேளை அவனிருக்கலாம்.
But here He seems to have left a brute force.
இங்கே ஆத்மாவெனும் இறைவன் கண்மூடியான சக்தியை வைத்திருக்கிறான்.
It is an inconscient material force.
அது ஜட இருளின் ஜட சக்தி.
It creates and destroys eternally.
அது சாஸ்வதமாக சிருஷ்டித்து அழிக்கிறது.
It does so without knowing itself.
அது தன்னையறியாமல் செயல்படுகிறது.
It does not know what it created or why it creates at all.
எதை சிருஷ்டிக்கிறோம், ஏன் சிருஷ்டிக்கிறோம் என அது அறியாது.
Or why it creates or destroys what it has created.
தான் சிருஷ்டித்ததை ஏன் அழிக்கிறோம் என அறியாது.
It does not know as it has no mind.
அதற்கு மனமில்லை என்பதால் தெரியாது.
It does not care as it has no heart.
இதயமில்லை என்பதால் அது பொருட்படுத்தவில்லை.
It may not be the real truth of even material
universe.
ஜடப் பிரபஞ்சத்தின் உண்மையான சத்தியம் அது இல்லாமலிருக்கலாம்.
All these are false phenomenon.
இவையனைத்தும் பொய்யான தோற்றம்.
There may be a Mind behind or a Will.
இதன் பின் மனமிருக்கலாம், அல்லது உறுதியிருக்கலாம்.
Or something greater than Mind.
மனத்தைவிட பெரியது இருக்கலாம்.
Or a mental Will.
அல்லது மன உறுதியிருக்கலாம்.
Yet it is a dark semblance.
இருந்தாலும் இந்த இருண்ட தோற்றம் இது.
It presents itself as a truth to the consciousness.
இதை ஜீவியத்திற்கு சத்தியமாகக் காட்டுகிறது.
Consciousness emerges in it out of its right.
அதனிலிருந்து ஜீவியம் எழுகிறது.
If it is no truth, but a lie.
அது சத்தியமின்றி பொய்யானால்
Then it is a most effective lie.
அப்படியானால் அது பெரும் பொய்.
It determines the condition of our phenomenal existence.
நம் தோற்றமான வாழ்வை அது நிர்ணயிக்கிறது.
It besieges all our aspirations and effort.
நம் ஆர்வம் முயற்சியை அது ஆட்கொள்கிறது.
For this is a monstrous thing.
Page 243
இது பயங்கரமானது.
It is a terrible and pitiless miracle of
the material universe.
Para 6
ஜடப் பிரபஞ்சத்தின் பயங்கரமான பச்சாதாபமற்ற அற்புதம் இது.
Out of this no-Mind, a mind emerges.
மனமில்லாத இதிலிருந்து மனம் எழுகிறது.
Or at least minds emerge.
குறைந்தபட்சம் பல மனங்கள் எழுகின்றன.
They find themselves feebly struggling for light.
அவை ஒளியை நோக்கி உழல்கின்றன.
They are helpless individually.
தனித்த நிலையில் அவை செய்வதறியாது.
Only less helpless in self-defence.
தன்னை பாதுகாக்க திறனற்றதல்ல.
They associate their individual feebleness.
தனிப்பட்ட பலஹீனத்தைச் சேர்க்கின்றன.
It is in the midst of giant ignorance.
வலிமையான அஞ்ஞானத்திடை அவை செயல்படுகின்றன.
It is the law of the universe.
அதுவே பிரபஞ்ச சட்டம்.
This is a heartless inconscience.
இது இதயமற்ற பேரிருள்.
Its jurisdiction is rigorous.
இதன் எல்லை மீற முடியாதது.
Out of that hearts have born.
இதனின்று ஆயிரமாயிரம் இதயங்கள் உதித்துள்ளன.
They aspire.
அவை ஆர்வத்தால் வாழ்கின்றன.
They are tortured and bleed.
சித்ரவதைக்குட்பட்டு இரத்தம் சிந்துகின்றன.
It is under the weight of inconscient cruelty.
ஜடம் பெற்ற பேரிருளின் கொடுமை பெரியது.
It is an iron existence.
இரும்பென இருக்கும் வாழ்வு.
It is a cruelty that lays its law upon them.
கொடுமை தன் அமைப்பால் சட்டமாகி ஆட்சி செலுத்துகிறது.
It becomes sentient in their sentience.
கொடுமையுள் உயிர் பெற்று உணர்ச்சி பெறுகிறது.
It is brutal, ferocious, horrible.
அதன் விளைவாக பயங்கரமான, அவதிக்குரிய கொடுமை எழுகிறது.
There are appearances.
இவை தோற்றம்.
What is the mystery behind it?
இவற்றின் பின்னணியில் உள்ள புதிரென்ன?
Consciousness has itself.
ஜீவியம் தன்னை இழந்தது.
It is regaining itself.
இழந்தது தன்னைப் பெறுகிறது.
We can see this.
இதை நாமறிவோம்.
It is emerging out of its giant self-forgetfulness.
தன்னை மறந்த லயத்தினின்று ஜீவியம் எழுகிறது.
It does so slowly and painfully as Life.
அது மெதுவாக வலியுடன் வாழ்வாக எழுகிறது.
It would be sentient.
அது உணர்வு பெறும்.
It gains half-sentient, dimly sentient, wholly sentient.
அரைகுறையாகப் பெற்ற உணர்வு, மங்கலானது, முடிவாக முழு உணர்ச்சி பெறும்.
Finally it becomes more than sentient.
உணர்ச்சியைக் கடந்தும் செல்லும்.
It becomes divinely self-conscious.
தெய்வீக ஜீவியம் பெறுகிறது.
Thus it becomes free immanent infinite.
சுதந்திரமாக, அழியாத அனந்தமாகிறது.
It works towards this under a law.
ஓர் சட்டப்படி இவ்விதம் அது செயல்படுகிறது.
That is the law of the opposite things.
அது எதிரான சட்டம்.
It is under the conditions of Matter.
ஜட உலகில் அது உண்டு.
It is so under the grasp of ignorance.
அஞ்ஞானத்தின் பிடியுள் அப்படி நடக்கும்.
This is brute and divided Matter.
ஜடம் பிரிவினையால் ஜீவனற்ற கொடுமையாயிற்று.
Its instruments are set by this Matter.
ஜடம் அதன் கருவிகளை உருவாக்குகிறது.
This is the movement the struggle has to follow.
வாழ்வு எழும் போராட்டத்தின் ஆற்றொழுக்கு இது.
It is imposed at every step.
ஒவ்வொரு கட்டத்திலும் இதை மீற முடியாமல் உட்பட வேண்டியுள்ளது.
It is of ignorance and limitation.
வரையறை, அஞ்ஞானம் வகுத்தது அது.
There is a second fundamental opposition of Matter.
Page 244
Para 7
ஜடம் எழுப்பும் இரண்டாம் எதிர்ப்பு அடிப்படையானது.
It is opposition to the Spirit.
ஆன்மாவுக்குரிய எதிர்ப்பு இது.
It is the culmination of bondage to mechanical law.
ஜடமாக இயங்கும் சட்டத்திற்கு உட்பட்ட நிலையிது.
It opposes all that seek liberation.
விடுதலை நாடுவதை எதிர்க்கும் சட்டம் இது.
It is the colossal inertia.
அது தமஸ் எனும் மலை.
Not that Matter itself is inert.
ஜடமே ஜீவனற்றதாகாது.
It is in infinite motion.
அதன் வேகம் அனந்தம்.
It is an inconceivable force.
கருத்தைக் கடந்த சக்தியது.
It is a limitless action.
அதன் செயல் அளவையறியாது.
Its movements are grandiose.
அதன் செயல் அற்புதம் எனக் கொண்டாடும் தோற்றமுடையது.
It needs constant admiration.
இடைவிடாத ஆச்சரியமான பெருமைக்குரியது ஜடம்.
The Spirit is free.
ஆத்மா சுதந்திரமானது.
The Spirit is master of itself and its works.
தன் வேலைகட்கும் தனக்கும் ஆத்மா தலைவன்.
It is not bound by them.
ஆத்மா அவற்றிற்கு உட்பட்டதில்லை.
It is the creator of law and not its subject.
சட்டத்தை ஆத்மா சிருஷ்டிக்கிறது. அதற்கு அடங்கியதில்லை.
This giant Matter is rigidly chained by a fixed mechanical Law.
இந்தப் பிரம்மாண்டமான ஜடம் இயந்திரமான, நிலையான சட்டத்தால் கட்டுண்டது.
The Law is imposed on it.
அச்சட்டம் ஜடத்தை ஆட்சி செய்கிறது.
It does not understand.
ஜடம் அச்சட்டத்தை அறியாது.
Nor has it ever conceived of that law.
இந்தச் சட்டத்தை ஜடம் கருதியதில்லை.
But it works out inconsciently.
ஆனால் அது இருள் நிறைந்த செயலில் ஈடுபட்டது.
As a machine works.
ஒரு இயந்திரம்போல் வேலை செய்கிறது.
Knows not who created it.
யார் அதைச் சிருஷ்டித்தார் என அறியாது.
By what process and to what end.
எப்படிச் சிருஷ்டிக்கப்பட்டது, ஏன் என அறியாது.
Life awakes.
வாழ்க்கை விழித்துக் கொள்கிறது.
It seeks to impose itself on the physical form.
ஜட உருவத்தைக் கட்டுப்படுத்த வாழ்வு முயல்கிறது.
It is the material force.
வாழ்வு ஜட சக்தி.
It tries to use all things at its own will and for its own need.
தன் முடிவைச் செயல்படுத்த, தன் தேவையைப் பூர்த்தி செய்ய அது முனைகிறது.
Mind awakes.
மனம் விழித்துக் கொள்கிறது.
It seeks to know the who, the why, the how of itself.
எப்படி, ஏன், யார் சிருஷ்டித்தது என அறிய முயல்கிறது.
And above all to use its knowledge for the
imposition.
அதற்கும்மேல் தன் அறிவால் அதைக் கட்டுப்படுத்த முயல்கிறது.
On its freer law and self-guiding action upon things.
சுதந்திரமான செயல், சொந்தமாக செயல்படுவது.
Material Nature seems to yield.
ஜடமான இயற்கை அடங்குகிறது.
Even to approve of and to add and aid.
அதை ஏற்று, மேலும் சேர்த்து உதவுகிறது.
It is after a struggle.
ஒரு போராட்டத்தின்பின் அது அப்படி நடக்கிறது.
It does so reluctantly and only upon a certain point.
தயங்கி செயல்பட்டு ஓரளவு செல்கிறது.
Beyond that point.
It presents an obstinate inertia.
அந்தக் கட்டத்தைக் கடந்து
பிடிவாதமான தமஸாக மாறுகிறது.
It becomes an obstruction, negation.
அது தடையாகி மறுப்பாகிறது.
Even persuades Life and Mind.
மனத்தையும் வாழ்வையும் ஏற்கச் செய்கிறது.
That they cannot go farther.
மேற்கொண்டு செயல்பட அனுமதிக்காது என முடிவு செய்கிறது.
Cannot pursue its partial victory to the end.
இந்த அரைகுறை வெற்றியைக் கடைசிவரை பின்பற்ற முடியாது எனக் கூறும்.
Life tries to enlarge and prolong itself and succeeds.
வாழ்வு விரிந்து தன்னை நீடிக்க முயன்று வெல்கிறது.
It seeks utter wideness and immortality.
மனம் முடிவுவரை விரிந்து, அமரத்துவம் தேடுகிறது.
It meets the iron obstruction of Matter.
ஜடத்தின் இரும்புப்பிடி போன்ற தடையைச் சந்திக்கிறது.
And finds itself bound to narrowness and death.
குறுகிய நிலையில் கட்டுப்பட்டு மரணத்தைக் காண்கிறது.
Mind seeks to aid Life.
மனம் வாழ்வுக்கு உதவ முயல்கிறது.
And fulfil its own impulse to embrace all
knowledge.
தன் சொந்த உணர்ச்சியான முழு ஞானம் பெற முயல்கிறது.
To become all light.
முழு ஜோதியாக மாற முயல்கிறது.
To possess truth and be truth.
சத்தியத்தைச் சொந்தமாகப் பெற்று சத்தியமாக நினைக்கிறது.
To enforce love and joy and be love and joy.
அன்பையும் சந்தோஷத்தையும் பெற்று அவையாக மாற விரும்புகிறது.
But always there is a deviation and error and
grossness of material life.
வழி தவறி, தவறு செய்து, ஜடத்தின் குணத்தைச் சந்திக்கிறது.
The material sense denies and obstructs.
ஜட உணர்வு மறுத்துத் தடை செய்கிறது.
The physical instruments do so.
ஜடமான கருவிகளும் அதையே செய்கின்றன.
Error pursues its knowledge.
ஞானத்தைக் குறை தொடரும்.
Darkness is inseparably the companion of light.
இருள் இணைபிரியாத தோழனாக ஒளிக்குள் உள்ளது.
It is its background.
இருள் ஒளிக்குப் பின்னணி.
Truth is successfully sought.
சத்தியத்தை வெல்ல வெற்றிகரமாக முயல்கின்றனர்.
And yet, when grasped, it ceases to be truth.
வெற்றி பெற்றால் சத்தியம் சத்தியமாக இருப்பதில்லை.
And the quest has to continue.
தொடர்ந்து தேட வேண்டும்.
Love is there, but it cannot satisfy itself.
அன்புண்டு, அதற்கு திருப்தியில்லை.
Joy is there, but it cannot justify itself.
சந்தோஷம் உண்டு, அது அதற்குப் போதாது.
Each of them drags as if its chain.
அவை ஒவ்வொன்றும் இழுபறியாக இருக்கின்றன. அவையே விலங்காக விளங்குகின்றன.
Casts as if its shadow of its opposites.
தனக்கு எதிரானதை நிழலாக வீசுகிறது.
Anger and hatred and indifference satiates and grief and pain.
கோபம், வெறுப்பு, பராமுகம், திருப்தி, திகட்டுவது, கவலை, வலிஅப்படி எழுகின்றன.
The brute Force is the power of the ignorance.
முரட்டு சக்தி அஞ்ஞானத்தின் பவர்.
The inertia prevents the conquest of the ignorance.
தமஸ் அஞ்ஞானத்தை வெல்வதைத் தடை செய்கிறது.
Mind and Life makes demands on Matter.
மனமும் வாழ்வும் ஜடத்திடம் கட்டாயப்படுத்திக் கேட்கிறார்கள்.
Matter responds with the inertia of ignorance.
ஜடம் அஞ்ஞானத்தின் தமஸை பதிலாக அளிக்கிறது.
Contd…..
தொடரும்......
 
***********
 
ஜீவிய மணி
 
ஜீவிய மணி
 
 
போற்றப்பட வேண்டியது
 
காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலிருப்பது
மரியாதையாகாது.
 
 
கேட்டாலும் கேட்காவிட்டாலும்
நாம் செய்வது சரியாக இருக்க வேண்டும்.
 
***********
 



book | by Dr. Radut