Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

Vol.VII Page 4

Sri Aurobindo's light near Her pen.

When Mother concentrates on anyone there is the golden light near His shoulder

அன்னை எழுதும்பொழுது பகவான் ஜோதி பேனா முனையில் உருண்டையாகத் தெரியும். சாதகர்கள் மீது அன்னை கவனம் செலுத்தினால் அவர் தோளருகில் பொன்னிறம் எழும்

  • அன்னையும், பகவானும் ஜோதிமயமானவர், சூட்சுமப்பார்வை அதைக் காணும்.
  • முனிவர்கள் பார்வைக்கு மனிதர்கள் அவர்களுடைய குணமுடைய விலங்கு போல் காண்பர்.
  • கிராமத்தில் மனிதர்களை எலி, மண்ணாங்கட்டி எனப் பெயரிட்டு அழைப்பார்கள்.
  • நம் நாட்டில் குழந்தைகட்குப் பிறந்த நட்சத்திரப்படி பெயரிடும் பழக்கம் ஏற்கனவே இருந்தது.
  • பெரும்பாலான பெயர்கள் சுவாமி பெயர்கள். எக்காரணத்தை முன்னிட்டுப் பெயரிட்டாலும் பெயருக்குப் பெரிய அர்த்தமுண்டு.
    குணவிசேஷமில்லாத பெயரைக் கொடுத்துவிட முடியாது.
  • சர்ச்சில் மனைவியைச் செல்லமாகப் பூனை என அழைப்பார். மனைவி அவரைப் பன்றி என்றழைப்பார்.
    சர்ச்சில் மனைவிக்கு எழுதும் கடிதங்களில் தன் பெயருக்குப் பதிலாக பன்றி படம் வரைவார்.
  • கணக்கில் பெயர் போனவரை கணக்குப் புலி என்பர்.
  • தன்னையே சிங்கம் என வர்ணித்துக் கொள்பவருண்டு.
  • தமிழ்நாட்டுப் பெண்கள் மாங்கல்யம் ஆதிகாலத்தில் கணவன் கொன்ற புலிப்பல்லாலானது. இன்றும் பல மாங்கல்யம் புலிப்பல் வடிவமாக இருக்கும்.
  • நீர் வறண்ட பிரதேசங்களில் இன்றும் கொல்லையைக் காடு எனக் கூறுவர்.
  • அன்னையின் பார்வை சாதகர் தோளில் பொன்நிறமாக எழுகிறது. இது மனம் பெற்ற திறமை. அன்னையின் மனத்தின் ஜோதி அடுத்தவர் மனத்தில், உடலில் பொன்னிறமாகத் தெரிகிறது.
  • அனைவர் மனத்தின் பார்வைக்கும் ஒளியுண்டு. அது நேரத்திற்குத் தகுந்தாற்போலும், இடத்திற்குத் தகுந்தாற்போலும் மாறும். சூரியன் மறையும் நேரத்தில் ஊருக்கு வெளியில் பயந்த சுபாவமுள்ளவர் கொள்ளிவாய்ப் பிசாசைக் காண்பர். அறிவும், தெளிவும், தைரியமும் உள்ளவர் கண்ணுக்குத் தெரியாது. நடுநிசியில் மூட நம்பிக்கையுள்ளவர் வெளிவரமாட்டார்கள். அவர்கள் வர நேர்ந்தால் கிராமத்தில் படையாகப் பிசாசுகள் தழலாகத் தெரியும். அதைச் சந்தணப்படை என்பார்கள். அதைக் கண்டவர் இறந்துவிடுவது வழக்கம்.
  • பெண்மையின் உயர்ந்த அம்சமுள்ளவர் மீது ஒரு வாலிபனுக்குக் காதல் எழுந்தால் அவன் மனத்தில் அவள் தெய்வமாகக் காட்சியளிப்பாள். அது அவளுடைய உண்மையான ஆன்மீக அம்சம்.
  • அன்னை உணர்ச்சிகட்கு நிறமுண்டு எனக் கூறுகிறார். அவர் கண்ணுக்குப் புலப்படும் காட்சி அது.
  • ஏழைப் பெண் சூட்சுமப் பார்வைக்கு ராணியாகவும் ராணி பிச்சைக்காரியாகவும் காண்பது அவர்களுடைய அந்தராத்மா தரும் காட்சி.
  • அன்பர்கள் நெடுநாள் வசிக்கும் வீடுகள் மீது சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு ஜோதி தெரியும். குடுகுடுப்பைக்காரனுக்கு சூட்சுமப் பார்வையுண்டு. அவன் அதைத் தன்னுடைய பாஷையில் வெளியிடுவான்.

******

 
அன்பர்கள் பேசக் கூடாது.
மௌனம் நல்லது.
பேசினால் நல்லதை மட்டும்
பேச வேண்டும்.
 

******



book | by Dr. Radut