Skip to Content

07. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

P.39 I regard my personal salvation real

எனக்கு மோட்சம் கிடைப்பதை நான் சத்தியமாகக் காண்கிறேன்

  • மோட்சம் நெடுங்கால யோக இலட்சியம்.
  • உடல், உயிர், மனத்திலிருந்து ஆன்மாவைப் பிரித்து பிரம்மத்தை அடைவது மோட்சம்.
  • பகவான் மோட்சத்தை ஆத்மாவின் இறுதிச் சுயநலம் என வர்ணிக்கிறார்.
  • மனிதன் மேல் மனத்தில் அகந்தையாக, காலத்துள் கண்டமாக, மனத்துள் புதைந்திருக்கிறான்.
  • ஆத்மா விடுதலை பெறுவது, பெற்று மோட்சமடைவது, மேல் மன சித்தி.
  • மேல் மனம் பகுதி; முழுமை அடி மனத்துள் உள்ளது, இடையே உள் மனம் உண்டு.
  • உள் மனம் ஆன்மீகமானதல்ல, சூட்சுமமானது.
  • உள் மனத்தில் புருஷன் உறைகிறான்.
  • உள் மனம் நிர்வாணத்தை நாடுபவர்கட்கு வழி செய்யும்.
  • அத்துடன் சைத்திய புருஷனை நாடுபவர்க்கு வழிகாட்டும்.
  • சைத்திய புருஷன் அடி மனத்திலிருக்கிறான்.
  • உலகம் மாயை, ஆத்மா மாயை, மோட்சம் மாயை, பிரம்மமே சாஸ்வதம் என்பது மாயாவாதம்.
  • உலகம் மாயை எனில் அதை விட்டு நாம் பிரம்மத்தை நாடுகிறோம்.
  • ஆனால் நம் ஆத்மா மாயையென்றால் எப்படிப் புரிந்து கொள்வது.
  • மாயையான உலகை விட்டு, மாயையான ஆத்மா, மாயையான மோட்சத்தை அடைவதால் பலன் பெறுபவர் யார் என்பது பகவான் கேள்வி.
  • நான் மோட்சம் பெற்றால் மற்ற ஆத்மாக்கள் என்ன ஆவது?
  • அது சுயநலமில்லையா?
  • மேலும் யாருக்கு என் மோட்சம் பலன் தரும்?
  • நானடையும் பிரம்மம் பலனடையாது. அதற்கு எதுவும் தேவையில்லை.
  • உலகம் பயனடையாது. ஏனெனில் அது மாயை.
  • மாயாவாதம் தர்க்கத்தால் எழுந்தது.
  • தர்க்கம் பகுதி.
  • பகுதியை நம்பி முழுமையை நாடுவது பலன் தாராது என்பது தத்துவம்.
  • தர்க்கத்தால் எழுந்த மாயாவாதத்தைத் தர்க்கம் கண்டு கேசெய்யுமென பகவான் சுட்டிக்காட்டுகிறார்.
  • உலகிலில்லாத ஒன்றை மனம் நாடினால் வெற்றி கிடைத்ததாக நினைத்தாலும் அது வெற்றியாகாது என்ற அடிப்படை தத்துவத்தைப் பகவான் கூறுகிறார்.
  • இதுவரை செய்த யோகமெல்லாம் அகந்தை வெற்றி பெற்ற வழிகள்.
  • அகந்தையை அழிக்காமல் மோட்சம் பெறலாம்.
  • அகந்தையை அழிக்காமல் பூரண யோகத்தை ஆரம்பிக்க முடியாது.
  • பூரண யோகம் பூரணமான பூரணம்.

*******



book | by Dr. Radut