Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • பணம்
    • பணம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அதாவது மனத்தால் ஏற்படுத்தப்பட்டது.
    • பண்டமாற்றுக்காக ஏற்பட்டது பணம். பணம் அதன் கருவி.
    • கருவியை முக்கியமாகக் கருதினால் அது கர்த்தாவை ஆளும்.
    • கை மாறும் பண்டங்களும், மாற்றும் மனிதர்களும் பணத்துடன் தொடர்பு கொள்வதால் அவர்கள் இசைந்தால் அப்பண்டங்களையும், அம்மனிதர்களையும் பணம் ஆளும்.
    • பண்டமாற்றுக்காக ஏற்பட்ட பணம் நாளடைவில் குடும்பம், விவசாயம், வியாபாரம், கல்வி, போக்குவரத்து, சர்க்கார், வெளிநாட்டு வியாபாரம் என எல்லா துறைகட்கும் பரவியது. இன்று பணம் புழங்காத இடமில்லை. பணத்தால் சாதிக்காத காரியமில்லை. அத்தனையிடங்களையும் பணம் எதேச்சாதிகாரமாக ஆள்கிறது. மனம் - பணத்தை உற்பத்தி செய்த மனம் - தன்னையறிந்தால் பணம் அதற்குக் கட்டுப்படும்.
    • உலகம் உள்ளேயிருப்பதால், பணம் அதன் பகுதியென்பதால் பணம் மனத்திற்குக் கட்டுப்படுவது ஆச்சரியமில்லை.
    • பணம் என்பது செயல்படும் ஸ்தாபனம் organisation.
      Organisationக்கு உற்பத்தி ஸ்தானம் மனம். பணத்தின் organisation மனத்திலிருந்து வந்தது. மனம் தன் organisationஐ அறிந்தால் பணம் அந்த அளவுக்கு மனத்திற்குக் கட்டுப்படும். Organisation என்பதைத் திறமை என்கிறோம்.
    • இந்த ஸ்தாபனம் ஒத்துழைப்பால் செயல்படுகிறது.
      Organisation works by cooperation and coordination. இரண்டும் சுமுகத்தால் செயல்படுகின்றன. Both work by harmony. மனம் சுமுகமானால் அதன் organisation வளரும். சுமுகம் என்பது பிறர் தனக்கு எப்படி அத்தியாவசியமானவர் என்பதை அறிவது. அதையறிய தான் பிறருக்கு அத்தியாவசியமானவராக மாற வேண்டும். அது சுமுகம்.
      அதன் நிலைகள் மூன்று. (1) மனம், (2) உயிர், (3) உடல்.
      மனம் - அடுத்தவர் எண்ணத்திற்கும் நம் எண்ணத்திற்கும் சுமுகம் harmony வேண்டும். பிணக்கொழிய வேண்டும். (Non-reaction is necessary.Better still you have to appreciate all ideas of others). எரிச்சல்படக் கூடாது. அதைவிட மற்றவருடைய எல்லா கருத்துகளையும் பாராட்ட வேண்டும்.
      உயிர் - அடுத்தவர் உணர்ச்சி நமக்கு இதமாக இருக்க வேண்டும்.
      உடல் - அடுத்தவர் செயல் எதுவானாலும் அது நமக்கு இலாபமானது எனப் புரிய வேண்டும்.
      மேற்கூறிய சுமுகம் மனத்தின் organisationக்கு அளவுகோல்.
      இந்த organization சந்தோஷம் தருவது. அதன் தீவிரத்தை intensityயை உயர்த்தும்.
    • இந்த அளவு மனம் வருமுன் பணம் சிறிது பெருகுவது தெரியும்.
    • பணம் வேகமாகப் புரண்டால் turn over பணம் பெருகும்.
      பணம் அதிக இடங்களில் செயல்பட்டால் - மார்க்கட் விரிவடைந்தால் - பணம் பெருகும்.
  • வாழ்வின் இலட்சியம்

    (இருவர் உணர்வில் ஒன்றி கரைந்து ஐக்கியமாக விழைந்தால், இக்கட்டுரை அவர்கட்குப் பயன்படும். அந்த ஐக்கியம் இந்த இலட்சியத்தைப் - 100 ரூ. - பூர்த்தி செய்யும். அவர் குரு-சிஷ்யன், பார்ட்னர், கணவன்-மனைவி, உடன்பிறந்தோர், நண்பர்களாக இருக்கலாம்).

    • நான் உங்களை என் தலைவனாக ஏற்றுப் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்து மகிழலாம். ஓரளவு எனக்கு அதற்குரிய ஆதரவு தேவை.
      நம் வாழ்வில் நாம் பெருமைப்படக் கூடியவையுண்டு.
      அவற்றுள் ஆரம்பித்து மேலே செல்லலாம்.
      உங்கள் ஒவ்வொரு சொல்லையும் நான் முழுமையாக ஏற்றுப் பணிய விரும்புகிறேன்.
      அது போன்ற சொற்களை மட்டும் நீங்கள் சொல்வது எனக்கு ஊக்கமளிக்கும்.
      அப்படி நாம் வாழ்வைச் செப்பனிட்டால் வாழ்வு நல்லது கெட்டது எனப் பிரியும்.
      நல்லதை ஏற்று நாம் கெட்டதை விலக்கலாம்.
      இதுவரை இல்லாத உறவு உணர்வில் நம்மிடையே உற்பத்தியாகும்.
      அந்த வாழ்வை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்யலாம்.
      அது நம்மிடையே நடந்தால் அது அன்னை அதிசயமாகும்.
      பாரதியின் சொற்கள் அற்புதமானவை, அவற்றுள் சில நினைவுக்கு வருகின்றன.
      உணர்வால் நாம் புது உறவு கொண்டால் என்னுள் காவியம் எழும்.
      அவை மனித வாழ்வில் சிறந்த உணர்ந்த உன்னதமான நேரமாகும்.
      "உங்கள் பாதச்சுவடுகளை நான் வணங்குகிறேன்'' என்று மனிதன் கூறியது வீணான சொல்லல்ல.
      சாதகர்கள் அன்னையைக் கல்கத்தாவுக்கு அழைத்தனர்.
      பகவான் ஸ்ரீ அரவிந்தர் காலடி பட்ட இடமெல்லாம் தமக்குத் தருவதானால் கல்கத்தா வருகிறேன் என்றார்.
      எனக்கு நீங்கள் புனிதமானவர்.
      நான் உங்கள் பாதங்களைப் பூஜித்தேன்.
      "தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெலாம் ஓருருவாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா'' என்பது பாரதி.
      "அவள் தாளிணை கைக் கொண்டு மகிழ்ந்திருப்பான்'' எனவும் கூறுகிறார்.
      அன்னையை உங்களில் கண்டெடுப்பதே என் இலட்சியம்.
      பாரதியின் சொற்கள் அன்னை ஸ்பர்சம் பட்டால் பவித்ரமாகும்.
      அது நம் வாழ்வில் பலிக்கும்.
      மனித சுபாவத்திற்கும் தெய்வ இனிமைக்கும் இடையேயொரு எல்லையுண்டு.
      எல்லையைத் தாண்டும் வரை இவ்வுணர்வை பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்.
      அது நடக்க எல்லாக் கட்டுப்பாடுகளையும் 100க்கு 100 பின்பற்ற வேண்டும்.
      எல்லையைக் கடந்தால் எல்லையற்ற இன்பமுண்டு.
      அது புனித பொக்கிஷம்.
      நம் வாழ்வில் இது நிச்சயமாய் பூர்த்தியாகும் என நான் அறிவேன்.
      பெருமுயற்சி செய்து அதற்கு நாம் நம்மை இப்பொழுது தயார் செய்து கொள்ள வேண்டும்.
      அப்பொழுது உங்கள் விருப்பம் எனக்கு உத்தரவாகும்.
      கட்டுப்பாடு முதலில், அடுத்தாற்போல் நல்லெண்ணம், உஷாரான விவேகம் அதன் பின் வரும்.
      எல்லையைக் கடந்தபின் எழுவது மனம் நிறை மகிழ்வு பொருந்திய சொர்க்கம்.
      உங்கள் அன்பாலும் நல்லெண்ணத்தாலும் என்னைக் கவியாக மாற்ற வேண்டும்.



book | by Dr. Radut