Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

59. அருள் முன்கூட்டியே காரியங்களை முடிக்கிறது - அருள் காலத்தைக் கடந்தது.

  • எலிசபெத் மனம் மாறியதால் டார்சி அங்கு வந்தான் எனில் அவள் 10 நிமிஷத்திற்கு முன் மனம் மாறினாள், அவன் 3 மணிக்கு முன் புறப்பட்டான். எப்படிச் சரி வரும்?
  • அருளுக்குக் காலமில்லை, அது காலத்தால் கட்டுப்பட்டதில்லை, காலத்தைக் கடந்தது.
  • அருள் செயல்பட இடையில் ஒருவருமில்லாதது, எதுவுமில்லாதது நல்லது.
  • இந்திராவை அன்னையிடம் அழைத்து வந்தது மத்திய மந்திரி சபையிலிருந்த நந்தினி.
  • ஆசிரமப் பள்ளிக்கு 1½ இலட்சம் ரூபாய் கிராண்ட் கேட்டு டெல்லி சர்க்காருக்கு விண்ணப்பம் தயாரித்தனர்.
  • விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பாமல் நேரடியாகச் சமர்ப்பிக்க அன்னை முடிவு செய்தார்.
  • பள்ளிக்கூட ரிஜிஸ்டாரை அதை எடுத்துப் போகச் சொன்னார்.
  • பிரதமரைச் சந்திப்பது எளிய காரியமில்லை.
  • நந்தினியைச் சுலபமாகச் சந்திக்கலாம்.
  • பிரதமருக்கு நேரடியாக வேண்டியவர் பலர் ஆசிரம அன்பர்கள்.
  • ரிஜிஸ்டாருக்கு டெல்லிக்குப் போனபின் தயக்கமாயிற்று, தைரியம் போய் தயக்கம் வந்தது.
  • புறப்படும் பொழுது அன்னையிடம் யார் மூலம் பிரதமரைச் சந்திப்பது எனக் கேட்கவில்லை,
  • கேட்கத் தோன்றவில்லை.
  • டெல்லியிலிருந்து யார் மூலம் பிரதமரை அணுகுவது எனத் தந்தி அனுப்பினார்.
  • நேராகப் போ, எவர் உதவியையும் நாடாதே என அன்னை பதில் தந்தி அனுப்பினார்.
  • பிரதமரை நேராகப் போய்ப் பார்ப்பது மந்திரி சபை உறுப்பினர்கட்கும் எளிதல்ல.
  • அது நாட்டில் முதன்மையான இடம்.
  • அவரை 1000 பேர் சந்திக்க முயன்றால் 3, 4 பேருக்கே அனுமதி கிடைக்கும்.
  • காமராஜ் முதன் மந்திரியாக இருந்தபொழுது நேருவைச் சந்திக்க முடியவில்லை.
  • T.T.K. முயன்று மூன்று நாள் கழித்து அனுமதி கிடைத்தது.
  • நேரடியாகப் பிரதமர் வீட்டினுள் நுழைந்தால் உடனே கைது செய்யப்படுவார்.
  • ரிஜிஸ்டார், IAS அதிகாரி. அத்தனை விவரமும் தெரிந்தவர்.
  • அன்னை உத்தரவிட்டபின் தயங்க உரிமையில்லை.
  • காலை 7½ மணிக்குத் தயங்கித் தயங்கி காம்பவுண்டைக் கடந்து உள் சென்றார்.
  • சுவர் மறைவில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்வதை இந்திரா பார்த்துக் கொண்டிருந்தார்.
  • ரிஜிஸ்டார் உள்ளே நுழைந்ததும், பிரதமரை நேருக்கு நேர் சந்தித்தார்.
  • யார் என்றார் பிரதமர்.
  • அன்னை அனுப்பினார் என்றார் ரிஜிஸ்டார்.
  • உடனிருந்த ஒஆந ஆபீசரைப் பார்த்து ரிஜிஸ்டாருக்கு வேண்டியதைக் கேட்டுக் கொடுத்தனுப்பவும் என உத்தரவு பிறப்பித்தார்.
  • ரிஜிஸ்டார் புதுவையில் புறப்படும்முன் அருள் செய்த ஏற்பாடு இது.
  • நேரடியாகப் போன பலன்.
  • எவர் மூலமாகவும் போனால், எதுவும் நடக்காது. பல நாள் ஆகும்.
  • நாம் செயல்படும் முன், நினைக்கும் முன், நாம் போகுமிடமெல்லாம் போய் செய்ய வேண்டியவற்றை முன்கூட்டி ஏற்பாடு செய்து வைப்பது அருள்.
  • அது அன்னை அருளானால் புறப்படுமுன் ஆர்டர் வந்துவிடும்.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அம்மா, என் அந்தரங்கம் நீ அறிவாய்.
நீ அறிவாய் என நான் அறிவேன்.
இருந்தும் அங்கு உன்னை இதுவரை நான்
அனுமதிக்கவில்லை.
அனுமதிக்க மனம் வரவில்லை.
"என் அகங்காரத்தை அழித்து
நீயே என் அந்தரங்கமாக வேண்டும்
எனப் பிரார்த்திக்கின்றேன்".
அகந்தையான அந்தரங்கம் அன்னையாக வேண்டும்.
 

******



book | by Dr. Radut