Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/64) துரோகியைக் கையும் களவுமாகப் பிடித்தும் அவனைத் தொழிலதிபராக்க முனைவது உடல் உணர்வை சொரணையற்ற முறையில் விட முயல்வதாகும்.

  • எதிரிக்கு எல்லாம் தரும் சொரணை வெட்கம் கெட்டதல்ல, வெட்கத்தை விட்டு வெற்றியை நாடுவது.
  • ஒருவருக்குக் கஷ்டம் வந்த நேரம் உண்மையான நண்பர்களை அறிய முடியும்.
  • ஒருவனை முழுவதும் அறிய வேண்டின் அவனுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும்.
  • கிருஸ்டபர் சிலை என்பவன் குடிகாரன்.
  • அதிகமாகக் குடித்துப் போதையில் தன்னை மறந்து வழியில் கிடந்தான்.
  • அந்த வழியாக வந்த பிரபு தன் பரிவாரத்தை அவனை எடுத்து வரும்படி கூறினார்.
  • அவனை உயர்ந்த படுக்கையில் படுக்க வைத்து, பிரபுவின் உடைகளை அணிவிக்குமாறு கூறினார்.
  • தானே மயக்கம் தெளிந்தது.
  • உடனிருந்தவர்கள் அவனைப் பிரபுவாக நடத்தி நடித்தனர்.
  • அவர் பிறவிலேயே பிரபு எனவும், போதையில் தன்னை மறந்தார் எனவும் கூறினர்.
  • கிருஸ்டபருக்கு கொஞ்ச நேரம் புரியவில்லை.
  • நாடகம் தொடர்ந்ததால், அவர்கள் கூறியது பொய் எனத் தெரிந்தும் அதை ஏற்று அவன் பிரபுவாக நடித்தான்.
  • சௌகரியம் எந்த அளவு நம்ப முடியாதது என்றாலும், நடக்கும் எனில் மனிதன் நடத்திக் கொண்டு, அடுத்த அடுத்த கட்டங்களை இயல்பாக எதிர்பார்ப்பான். இது மனித சுபாவம்.
  • பண்பு காரணமாகப் பிறர் கூறும் பொய்யை மறுத்து அவரை அம்பலப்படுத்தாவிட்டால், அதுவே உண்மையென மனிதன் சாதிப்பான்.
  • பிச்சைக்கார புத்தியுள்ளவனைக் குருவாக ஏற்றதாக நடித்தால், அவன் தன் ஆசிர்வாதத்தைத் தரச் செய்யும் கிராக்கி உலகப் புதுமையாகும்.
  • ஏழையை, அடுத்த வேளை சாப்பாட்டிற்கும் இல்லாத ஏழையை, ஏழையாக நடத்துவது பண்பற்றது என்பதால் சமமாக நடத்தினால் நடத்துபவரை ஏழையென தைரியமாகக் கூறி அவரையே குறைத்துப் பேச முனைவான்.
  • தாழ்ந்த மனிதனுக்கு வலிய உதவினால் ஆதாய மனப்பான்மையென நினைப்பான். என்ன ஆதாயம் எனக் கேட்டு விடுவான்.
  • பெரிய பதவியில் உள்ள சிறிய மனிதனைக் காணப் போனால் என்ன காரியம் ஆக வேண்டும் எனக் கேட்பான்.
  • 50 ஆண்டு பட்டினியிருந்தவனுக்கு வசதி செய்து, வீட்டில் விருந்து செய்தால், விருந்து செய்பவர் தாழ்ந்தவர் எனக் கருதி அவரை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்.
  • மனிதன் திருவுருமாற்றம் தேடுவதில்லை.
  • திருவுருமாற்றம் தேடுபவரே இது போன்ற வேலைகளைச் செய்வார்.
  • கெட்ட நடத்தையால் கருத்தரித்த மனைவியும் மனம் புண்படக் கூடாது என்று அதைக் கண்டுகொள்ளாத கணவனைத் தன் நடத்தையால் அவன் ஆதாயம் பெற முயல்வதாக நினைப்பாள், கூறுவாள், அவனையே கேட்பாள்.
  • சமூகத்தில் அவரவரை அவரவர் நிலைக்கேற்ப நடத்தாவிட்டால், நடத்தாத பண்பு கயமை, ஆதாயம் தேடுவதாக நினைப்பார்கள்.
  • திருவுருமாற்றம் தேடுபவனுக்கு அது போல் தாழ்ந்த சொற்கள் மேலும் அவனுக்கு உயர்ந்த திருவுருமாற்றத்திற்குரிய அம்சமிருப்பதாகக் கூறும்.
  • மனிதனையறிய இருளையறிய வேண்டும்.
  • இருளிலிருந்து வெளிவரும் மனிதன் எவருக்கும் எந்த துரோகமும் செய்வான்.
  • தாழ்ந்தது உயர முயலும் பொழுது துரோகத்தை இயல்பாக நாடும்.

******

II/65) உதாரணத்தால் புரிவது புத்தியில்லை, நடைமுறை அறிவு.

  • புத்திக்கு உதாரணம் தேவையில்லை.
  • மனம் என்பது நம் கருவி.
  • அது நம் கட்டுப்பாட்டிலிராது.
  • அதற்கென சில குணங்கள் உண்டு.
  • அதன் குணங்கள்படி செயல்படும், நம் கருவியானாலும் நம் சொல்படி செயல்படாது.
  • பகுதியான மனம் முழுமையான மனிதனைவிடச் சக்தி வாய்ந்தது.
  • ஒரு கனடா பெண்ணுக்குக் கான்சர் வந்தது.
  • டாக்டர் கட்டியின் அளவைப் பார்த்து ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றார்.
  • ஆப்பரேஷன் முடிந்த பிறகு மற்ற இடங்களில் பரவாமலிருந்தால் பிறகு சொல்லலாம் என்றார்.
  • அப்பெண்ணுக்கு ஆப்பரேஷன் அபிப்பிராயமில்லை.
  • அன்னையிடம் பிரசாதம் பெறும்படி மகன் கூறினார்.
  • பிரசாதம் வந்தது.
  • கட்டி கரைந்தது, வலி மறைந்தது.
  • டாக்டருக்கு ஆச்சரியம், இனி பயமில்லை என்றார்.
  • பெண்ணுக்குரிய பிரச்சனை வேறு.
  • மகனும் தாயும் பேசினர்.
  • மகன் அன்னை கான்சரைக் குணப்படுத்திவிட்டதாக நம்பினார்.
  • தாய்க்கு எப்படி குணமாயிற்று என்று தெரிந்து கொள்ள அவசியம் உண்டு.
  • டாக்டரைக் கேட்டார். டாக்டர் குணமாயிற்று எனத் தெரியும், எப்படி எனத் தெரியாது என்றார்.
  • அன்னை சக்தி குணப்படுத்தியது என டாக்டர் கூறினால் நம்புவேன், இல்லாவிட்டால் எனக்கு நம்பிக்கை ஏற்படாது என்றார்.
  • வலியும், கட்டியும் போய்விட்டனவே என்றார் மகன்.
  • தாய் நடந்ததை நம்பவில்லை, டாக்டரை நம்பினார். டாக்டர் தெரியாது என்றார்.
  • கட்டி வளர்ந்தது, கான்சர் வந்தது, தாயார் இறந்து போனார்.
  • இது மனம் செயல்படும் வகை.
  • உதாரணம் அவர் அனுபவம்.
  • பழைய அனுபவத்தை நம்புகிறார்.
  • உதாரணம் அதைக் காட்டுவதால், உதாரணத்தை நம்புகிறார்.
  • உதாரணத்தை நம்புபவருக்கு பழைய அனுபவம் தெரியும்.
  • அவருக்கு நேரடியாகப் புரிந்து கொள்ளும் புத்தியில்லை, உதாரணம் மூலம் புரிகிறது.
  • புத்தி செயல்படுவது ஆச்சரியமாக இருக்கும்.
  • மருந்து எனக் கூறி வெறும் பவுடரைக் கொடுத்தால் 100இல் 70 பேருக்குக் குணமாகிறது.
  • சாப்பிட்டது மருந்தில்லை எனத் தெரிந்தால், மீண்டும் வியாதி வருகிறது.
  • மனம் உடலைவிடப் பெரியது. Mind over Matter என இதைக் கூறுவார்கள்.
  • பகவான் வரும்வரை கர்மம் ஆட்சி செலுத்தியது.
  • அவர் பிறந்த பின் கர்மத்திற்குச் சக்தியில்லை.
  • நம்பாதவர்களைக் கர்மம் பாதிக்காது.
  • மேலும் கர்மம் திருவுருமாறி பிரச்சனை வாய்ப்பாகும்.
  • மனமும், புத்தியும் நம் கருவிகளானாலும் அவை நம் கட்டுப்பாட்டில் இரா.
  • அவை ஆத்மாவின் கட்டுப்பாட்டிலிருக்கும்.

தொடரும்....

******

ஜீவிய மணி
 
ஆன்மாவுக்கு மனம் தேவையில்லை.
வந்த வழி தெரிந்தால், போகும் வழி புரியும்.
அகந்தையை இழந்தால் அனைத்தும் பெறலாம்.
திருந்த வேண்டியவன் திருத்த முடியாது.
 

******



book | by Dr. Radut