Skip to Content

09. சாவித்ரி

சாவித்ரி

P.126 A flaming thunder, a creator flash

பொறி தெறிக்கும் இடியோசை, சிருஷ்டியின் மின்னல்

  • வெற்றி பெற்ற ஜோதி அழிய முடியாத சக்தியை வாகனமாக்கியது;
  • பூதம் தெய்வத்தை ஏந்தித் தாவியது.
  • மனமெனும் கிரீடம் பெற்ற வாழ்வு ராஜ கம்பீரம் பெறுகிறது.
  • வலிமை பெருமை தரும் மகிழ்வு நிறை உலகம்
  • கனவுலக கலகலப்பான எண்ணமிகு செயல்,
  • ஆசைக்குக் காத்திருக்கும் அதிதீவிரம்
  • ஆண்டவன் அணுகி வருவதைக் கேட்டுணர்ந்தது.
  • சிறு குழந்தையின் களங்கமற்ற மகிழ்வு நிறை லோகம்;
  • எதையும் கருதாத இதயமும் மனமும் பெற்ற இளமை
  • மனித உடலை ஆண்டவனின் அற்புதக் கருவியாக்கியது;
  • ஆசைக்கும் அது அற்புத ஜொலிப்பு தருகிறது
  • தெய்வீக விலங்கிற்கு வழங்கிய சுதந்தரம்
  • அன்பும் அழகும் ஆனந்தமும் ஓடியாடும் தெய்வீகம்.
  • பளபளக்கும் பாதை பரமண்டலத்தை நோக்கிப் புரியும் புன்னகை
  • வாழ்வு உந்திய வேகம் தங்கு தடையின்றி ஓடியது:
  • களைப்பு அது அறியாதது; கனிவின் கண்ணீர் மகிழ்ந்து பெருகும்.
  • விளையாட்டே வேலை, வேலை மட்டுமே ஆட்டம்,
  • தெய்வ வலிமையின் ஆட்டம் சொர்க்கத்தின் கடமைகள்:
  • தூய்மையான மது தெய்வீக சோமபானம்,
  • மனிதரறியும் மந்தமறியாத பானம்
  • காலத்தின் வாழ்வு அனந்தத்தின் ஆனந்த பூரிப்பு
  • வயோதிகம் வர மறுத்தது, கவலையின் சுவடை முகமறியாது.
  • வானுலக நிரந்தர வயப்பட்ட வழக்கு
  • நித்தியமான வலிமையின் ஓட்டப்பந்தய ஓலமெனும் சிரிப்பு,
  • நிர்வாண தெய்வீகக் குழந்தைகள் விளையாட்டரங்கில் ஓடின
  • அற்புத வேகம் தாக்கிய காற்றின் ஓட்டம்;
  • புயலும் கதிரவனும் புகழ்பெற்ற நண்பர்கள்,
  • வெண்ணிற நுரையின் வேகம் நிறை ஆட்டம்,
  • மிதிபட்டிறந்த தூரத்துத் தோற்றம்
  • சக்தி தாக்கும் அரங்கின் மல்யுத்தம்.
  • ஆதவன் ஆக்ரமிக்கும் ஒளிமலையின் அலைவேகம்
  • உடல் பெற்ற உணர்வு தூண்டும் உயர்லோக சுவர்க்கம்
  • இறைவன் இறைத்து மகிழும் பெரும் பரிசின் பெருவெள்ளம்.
  • ஆனந்தம் மந்திரமாகத் தாக்கும் இதயத்தின் கட்டு,
  • கவர்ச்சியின் மாட்சி பெற்ற பெருமையின் பேறு

*******



book | by Dr. Radut