Skip to Content

07. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXI. The Ascent of Life
21. உயரும் வாழ்க்கை
This is a significant development.
Page No.204
Para No.8
இது ஒரு முக்கியமான மாறுதல்.
It is of the increasing predominance of Mind.
மனத்தின் முக்கியத்துவம் உயரும் வகையிது.
It has its own law.
அதற்கேயுரிய சட்டம் உண்டு.
It imposes it on the material existence.
ஜட வாழ்வை அதற்குட்படுத்துகிறது.
It is so more and more.
அதன் அளவு அதிகரித்தபடியிருக்கிறது.
The Mind is subtle.
மனம் சூட்சுமமானது.
It has to assimilate.
மனம் மற்றதைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.
For that it needs not devour.
விழுங்கியே அதைச் சாதிக்க வேண்டிய அவசியமில்லை.
It possesses and grows.
மனம் மற்றதை ஏற்று, கலந்து, வளர்கிறது.
Mind gives more.
மனம் அதிகமாகக் கொடுக்கிறது.
The more it grows.
எவ்வளவு கொடுக்கிறதோ அவ்வளவு வளர்கிறது.
It fuses into others.
பிறருடன் இணைகிறது.
It fuses others into itself.
பிறரைத் தன்னுடன் இணைக்கிறது.
This too is above.
இதுவும் முன் போலவே நடக்கிறது.
It increases its scope of being.
மனம் தன் ஜீவனின் வீச்சை வளர்க்கிறது.
Physical life too gives.
ஜட வாழ்வும் கொடுக்கிறது.
It exhausts by itself.
அதனால் களைத்துப் போகிறது.
Too much giving ruins physical life.
அதிகமாகக் கொடுப்பது ஜட வாழ்வை அழிக்கும்.
Too much devouring too ruins it.
அதிகமாக விழுங்குவதாலும் ஜட வாழ்வு அழிகிறது.
Mind leans on the law of Matter.
மனம் ஜட வாழ்வைப் பாராட்டலாம்.
It suffers the same limitation.
மனம் அதனால் ஜட வாழ்வின் அளவால் சுருங்கும்.
It can propose to grow into its own law.
தன் சட்டத்தையே மனம் கருதலாம்.
It overcomes this limitation in proportion.
அந்த அளவுக்கு இந்தத் தடையை மீறும்.
In that measure there is a change.
எந்த அளவுக்கு இதை கடந்து வருகிறதோ அந்த அளவுக்கு மாறுதல் உண்டு.
Then giving and receiving become one.
அப்பொழுது கொடுப்பதும் பெறுவதும் ஒன்றே.
There is the upward ascent.
வாழ்வு மேலெழுந்து உயருகிறது.
There the rule of unity acts.
அங்கு ஐக்கியமான சட்டம் செயல்படுகிறது.
It is a law of differentiation.
அது பிரியும் சட்டம்.
It is a divine law.
இது தெய்வீக சட்டம்.
It is the law of the manifest Sachchidananda.
இது சச்சிதானந்த சிருஷ்டியின் சட்டம்.
There is a second term of the original
status of life.
Page No.204
Para No.9
வாழ்வின் முதல் நிலைக்கு இரண்டாம் கட்டம் உண்டு.
It is subconscious will.
இது ஆழ் மன உறுதி.
It is a secondary status.
இது இரண்டாம்பட்சமான நிலை.
It becomes hunger and conscious desire.
இது பசியாகவும், தன்னையறியும் ஆசையுமாகவும் மாறும்.
They are the first seeds of mind.
அவை மனத்தின் முதல் வித்து.
Life grows into the third status.
வாழ்வு மூன்றாம் கட்டத்திற்கு உயர்கிறது.
It does so by a principle.
அது ஒரு சட்டப்படி நடக்கிறது.
It is one of association, the growth of love.
ஒத்துழைப்பு, அன்பு வளர்வது அச்சட்டம்.
It does not abolish the law of desire.
அது ஆசையின் சட்டத்தை அழிப்பதில்லை.
But rather it transforms and fulfils it.
வாழ்வைத் திருவுருமாற்றிப் பூர்த்தி செய்கிறது.
Love has a nature.
அன்புக்குரிய சுபாவமுண்டு.
It is a desire to give oneself to others.
அன்பு கொடுக்கப் பிரியப்படுகிறது. பிறருக்குத் தன்னை வழங்குகிறது.
It desires to receive others in exchange.
பிறரைத் தான் பெறப் பிரியப்படுகிறது.
It is a commerce between being and being.
ஜீவன்கட்குள்ள பரிவர்த்தனை அது.
Physical life does not desire to give itself.
ஜட வாழ்வு கொடுக்கப் பிரியப்படுவதில்லை.
It desires only to receive.
அது பெற மட்டும் பிரியப்படுகிறது.
It is true it is compelled to give itself.
அதைக் கொடுக்கக் கட்டாயப்படுத்துவது உண்மை.
There is a life which only receives.
பெறும் வாழ்வுண்டு.
Life that does not give must be barren.
கொடுக்க முடியாதது வறண்ட வாழ்வாகும்.
It must wither and perish.
அது வாடி வதங்கி அழியும்.
If indeed such life is possible at all.
அப்படிப்பட்ட வாழ்விருக்குமெனில்,
Either here or any other world.
பூமியில் அல்லது வேறெங்கும் அது இருக்குமானால்,
But it is compelled, not willing.
அது கட்டாயப்படுத்தப்படுகிறது, அதற்குப் பிரியமில்லை.
It obeys the subconscious impulse of Nature.
இயற்கையின் ஆழ்மன சுபாவத்தை அது ஏற்கிறது.
Rather than consciously shares in it.
அறிந்து செய்யாமல் தன்னையறியாமல் செய்கிறது.
Love intervenes.
அன்பு குறுக்கிடுகிறது.
The self-giving at first still preserves.
அர்ப்பணம் பெரும் அளவுக்கு தொடர்கிறது.
There is the subconscious will in the atom.
அணுவில் ஆழ்மன உறுதியுண்டு.
To a large extent it has a mechanical character.
பெரும் அளவு அது ஜீவனற்றது.
Love itself at first obeys the laws of hunger.
முதலில் அன்பும் பசியின் சட்டத்தை ஏற்கிறது.
It enjoys receiving.
பெற விரும்புகிறது.
Rather than giving and surrendering to others.
கொடுப்பதையும் பிறருக்கு சரணடைவதையும்விட பெற விரும்புகிறது.
It admits it chiefly as a price.
கொடுப்பதை ஒரு நிபந்தனையாக ஏற்கிறது.
A price for the thing it desires.
பெறுவதற்கு விலையாக அதை ஏற்கிறது.
Here it has not attained its true nature.
இப்பொழுது அதன் உண்மை சுபாவம் எழவில்லை.
Its true law is to establish an equal commerce.
சமமாக இருக்கும்படி செயல்படுவதே அதன் உண்மையான சட்டம்.
There is joy of giving equal to joy of receiving.
அங்கு கொடுப்பதும் பெறுவதும் சமமாக இனிக்கும்.
In the end it tends to become greater.
முடிவாக அடுத்த கட்டத்திற்கு வளரும்.
But that is when it is shooting beyond itself under Psychic pressure.
சைத்திய புருஷனானால் அதன் வேகத்தால் தன்னை மீறி செயல்படுகிறது.
It is to attain to the fulfillment of utter unity.
பூரண ஐக்கியம் பெற விழைகிறது.
Therefore it sees the not-self as its own
individuality.
அதனால் அசத்தை தானேயென உணர்கிறது.
There is the law of love.
அன்பின் சட்டம் உண்டு.
It has a character in its origin.
மூலத்தில் அதற்குரிய சுபாவமுண்டு.
It is the impulse to realise and fulfil in oneself others.
பிறரில் தன்னைப் பூர்த்தி செய்யும் அவா அது.
And by others to be enriched by enriching.
பிறரால் பேறு பெற்று பெறுவதால் இருவரும் உயரும் சட்டம் அது.
It is a desire to possess.
பிறரை ஆட்கொள்ளும் அவா அது.
It is a desire to be possessed.
பிறர் தன்னை ஆட்கொள்ள விழைவது அது.
Without being possessed one does not possess oneself utterly.
தன்னைப் பிறர் ஆட்கொள்ளாமல் தான் தன்னை முழுவதும் ஆட்கொள்ள முடியாது.
Contd....
தொடரும்......
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அகந்தை அழிந்தால் நாம் சிருஷ்டியின் ஆன்மாவை  அடைகிறோம். அறியாமை தெய்வ மனதில் எழுகிறது. அகந்தை இயற்கையின் சக்தி.
உணர்வின் சத்தியக் கருத்து உற்பத்தியாக உணர்வின் சக்தி தன்னையறிந்து உணர்வோடு இணைந்து முழுமை பெற்று,
உணர்வும் சக்தியும் ஒன்றையொன்று வலியுறுத்த முடிய வேண்டும்.
அறியாமை, அறிவு தன்னுள் தானே மறைவதால் எழுவது.
சக்தியின் உணர்வு சத்தியஜீவியமாகும்.
 
*******



book | by Dr. Radut