Skip to Content

06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

    சாண் ஏற முயன்றால், முழம் ஏறுவோம்.

  2. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

    வாயைத் திறந்தால் பிழைப்பு போகும்.

  3. ஏழைக்கு இராஜ வைத்தியம்.

    ஏழையென்பதால் இராஜ கவனம் உண்டு.

  4. மயிலே, மயிலே என்றால் இறகு போடாது.

    மயிலைக் கெஞ்சினால் அத்தனை இறகையும் போடும்.

  5. ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டும்.

    எல்லையைக் கடந்தபின் அளவு கூடாது.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மேல் மனத்தின் எந்நிலையிலிருந்தும் அழைப்பது நம் முயற்சி. அதைத் தாண்டினால் அழைப்பு நிற்காது. தானே எழும்.
 
தானே எழும் அழைப்பு உள் மனத்திற்குரியது.

*******



book | by Dr. Radut