Skip to Content

04. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையே சரணம்!

நமக்கு வரும் பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றிக் கொள்ள அன்னையிடம் வழி உண்டு என்பதற்காக எனக்கேற்பட்ட ஓர் அனுபவம்.

நான் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பணி செய்து வந்தேன். ஒரு நாள் எங்கள் வீட்டு septic tankஐ clean செய்வதற்கு துப்புரவுப் பணியாளர்களை வரச் சொல்லி யிருந்தேன். குழாய்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வருவது வழக்கம். அப்பணியாளர்கள் clean செய்ய வந்த அன்று வர வேண்டிய தண்ணீர், குழாயில் வரவில்லை. எனவே அவர்களை அடுத்த நாளுக்கு மறுநாள், தண்ணீர் வருகின்ற தினத்தன்று வரச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டேன்.

அடுத்த நாள் Isolation வார்டில் பணி செய்த சகோதரி லீவு போட்டுவிட்டதால், நான் அங்கு பணி செய்ய நேர்ந்தது. அப்போது காலரா சீசன். காலரா நோயாளிகளைத் தொட்டு பணி செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, என் மகள் தெரு முனையிலுள்ள போரிங் பைப்பில் தண்ணீர் எடுத்து வந்து குடம், பக்கெட்டுகளில் நிரப்பியிருந்தாள்.

3வது நாளாக இன்று தண்ணீர் வரும், septic tankஐ clean செய்துவிடலாமென எண்ணியவாறு பணிக்குச் சென்றேன். பணியை முடித்து வீட்டுக்கு வந்தபோது, அன்றும் தண்ணீர் வரவில்லையெனத் தெரிந்தது (எங்கள் தெருவுக்கு மட்டும்). அதனால் இரவு 11 மணிக்கு நானும் என் மகளும் போரிங் பைப்பில் தண்ணீர் அடித்து எடுத்து வந்தோம். 11½ மணி சுமாருக்கு அப்பணியாளர்கள் வந்து clean செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

பின் 5வது நாளும் தண்ணீர் வரவில்லை. குளித்து முடித்தபின் AE அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர் அங்கு இல்லை. எனவே அங்குள்ள பணியாளர்களிடம் ஐந்து நாட்களாக தண்ணீர் வராத விவரத்தை மிகுந்த கோபத்துடன் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

AE வந்ததும் பணியாளர்கள் மூலம் விவரத்தைக் கேட்டறிந்த பின், தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நான் வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் தண்ணீர் வந்து தொட்டி நிரம்பியது. ஒரு பணியாளர் வந்து தண்ணீர் வருகிறதா என AE உங்களிடம் கேட்டு வரச் சொன்னார் என்றார். பின்னர் தண்ணீரைத் திறந்து விடாமல் தவறு செய்த பணியாளரை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன்.

ஓரிரு மாதங்கள் கழித்து மேட்டுப்பாளையத்தில் 6 (over tank) டேங்குகள் கட்டி வருவதாகக் கேள்விப்பட்டு, அவ்வூருக்கு நிரந்தரமாக தண்ணீர் பஞ்சத்தை அன்னை தீர்த்துவிட்டார்கள் என எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.

-- M. Sulochana, கடலூர் மையம்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தீய சக்திகள் செயல்பட்டால், அவை சூழலைத் தாழ்த்தும்; வாய்ப்பைக் கெடுக்கும்; சந்தர்ப்பத்தைக் கலைக்கும்; மனிதனை வக்கிரமாக்கும். அல்லது அவனை "அறிவுடன்” நடக்கச் சொல்லும்.
 
வெளிப்படும் ஆன்மீகம் சூழலாக மாறும்.

********



book | by Dr. Radut