Skip to Content

03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • தெய்வீகம்
    • உலகத்தின் பாவத்தை உன்னத இலட்சியமாகச் செய்வது தெய்வீகப் பரிணாமம். எதிராக செயல்படுவது உள்ள சொரணையையும் அழிக்கும்.
      • இரண்டும் முடிவில் இறைவன் திருவடியில் சேர்க்கும்.
      • நாமறிந்த பையனுடைய தரித்திரம் அவர்கள் குலம் பெற்ற தரித்திரம். அவன் அண்ணனும் நானும் யோசனை செய்து வியாபாரம் ஆரம்பித்து அது போக உதவியது. படிப்பு தரித்திரத்தை அழிக்கும். இவன் SSLC பாஸ் செய்து பட்டம் பெற்றது அந்த ஜாதியின் தரித்திரம் அதிர்ஷ்டமாக உதவியது. இது transformation திருவுருமாற்றம். இதுவே கிராமத்திலும் நடந்தது. மற்ற நண்பர் இருவர் வாழ்வும் இதுவே.
      • பிள்ளைகள் வாழ்வில் அஸ்திவாரத்தின் தரித்திரம் இது போல் மாற வேண்டும்.
      • திருடு, இலஞ்சம், கெட்ட நடத்தை, கொலையை சிறியதாக்கும் மனப்பான்மைகள் ஏராளமாக உண்டு. அவை சில ஜாதியினரிடம் ஏராளம். அதைக் கூறினால் "அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியாது''. மருமகள் அங்கு திருவுருமாற transform வேண்டும். நம் சுபாவத்தை அந்த ஆழத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இது அன்னை Mother யார் எனக் கூறும். யோகத்தை ஏற்பவர் ஒரு மாதத்தில் இந்த வாய்ப்பை அழித்துவிடுவார்கள். தோப்பில் வேலை செய்தவர் பொய், திருடு, சாகஸம், கெட்ட எண்ணம். மனைவிக்கும் மகனுக்கும் அது குறைவு. பெரிய பையனுக்கு கெட்ட எண்ணம் அதிகம். அவர் நம்மிடமிருந்து போனது, அவையெல்லாம் நம் பிள்ளைகளை விட்டு எதிர்காலத்தில் போக முடியும் எனக் காட்டுகிறது.
      • பெரிய பண்டிட் 10 பவுன் நகையை வரும் மாப்பிள்ளைக்கு தண்டனையாகப் போடுவோம். நின்று போன நிச்சயதார்த்தத்தை நிறைவேற்று என்றார். வேறு மாப்பிள்ளையைக் கொண்டு வந்தவர் ஊரில் பெரிய மனிதர். முதல் நிச்சயதார்த்த 10 பவுனை வரும் மாப்பிள்ளைக்கு உபரியாகத் தரலாம் என்றார். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர் பெற்ற தண்டனை பெரியது. இது பேசக் கூடாத வார்த்தை. தரித்திரம் பேசச் சொல்கிறது. பிறருக்கு சேர வேண்டியதை சந்தோஷமாக மறுப்பது கெட்ட எண்ணம் மட்ட எண்ணமாகப் பரிமளிப்பது.
    • கறுப்பு வெள்ளையாகத் தெரியும்.
      கண்ணாடி கலராக ஊர் தெரியும்.
      நேர் எதிராக உலகை அறியும் மனிதர்கள் இவர்கள்.
      அதே போல் அன்னையைப் பற்றி வினோதமாகப் பலவற்றை நினைத்துக் கொள்வார்கள்.
      பாஸிட்டிவாக இருந்தால் பெரிய மனிதர்கள் உயர்ந்தவர் எனவும் நெகட்டிவாக இருந்தால் பெரிய மனிதர் பொல்லாதவர் எனவும் நினைப்பார்கள்.
      மூட நம்பிக்கை ஏராளமாக இருக்கும்.
      அதைப் போல் பலனை எதிர்பார்ப்பார்கள்.
      தாங்கள் செய்யாததெல்லாம் பிறரிடம் எதிர்பார்ப்பார்கள்.
      நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என Mother அன்னையிடம் நினைப்பார்கள்.
      எந்த இடத்திலும் - கோவில், சாமியார் - நடக்காததை Mother அன்னையிடம் எதிர்பார்ப்பார்கள்.
      குறைந்தபட்சமும் முறையாக இருக்கமாட்டார்கள்.
      = மதரிடம் நடக்காதது நடப்பதை இவர்கள் கண்டு விட்டனர் = எனப் பொருள்.
      மதரிடம் வந்துவிட்டதால் எந்த தவறும் நடக்கக்கூடாது.
      எல்லாவித அதிர்ஷ்டமும் வர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
      மாமியார் தனக்கு அடங்க வேண்டும்.
      முதலாளி இர்ள்ள் தன்னிஷ்டப்படியிருக்க வேண்டும்.
      பழைய எதிரிகள் மனம் மாற வேண்டும் என வேடிக்கையானவற்றை நினைப்பார்கள்.
      இவ்வளவையும் அரசியல் நண்பரிடம் நான் பார்த்துள்ளேன்.
  • லாரா
    • டிராலப் கதையில் லாரா கதாநாயகி. பெரிய மனம் படைத்தவள். அழகான Finn என்பவனை விரும்புகிறாள். அவனுக்குப் பணமில்லை. தான் தன் £ 40,000 பவுனை சூதாட்டத்தில் கடன் பெற்ற அண்ணனுக்குக் கொடுத்து விட்டாள். 1½ மில்லி யன் பவுன் சொத்துள்ள கென்னடியை, காபினட் மந்திரி, மணக்கிறாள். கென்னடியின் அல்ப புத்தியுடன் அவளால் குடும்பம் செய்ய முடியவில்லை.
      • Finn அழகானவன். எந்த இலட்சியமுமில்லாதவன்.
        நல்லவன். வருமானமில்லாதவன்.
        அவன் சொந்த ஊரில் மேரி என்ற பெண் அவனால் கர்ப்பமாகி, அவளைக் கல்யாணம் செய்திருக்கிறான். பிறகு அவள் பிரசவத்தில் இறந்துவிட்டாள். பின் இதை லாராவிடம் சொல்லவில்லை. லாரா கணவனை விட்டு வந்துவிட்டாள். ஃபின் மீது அவளுக்கு உயிர். ஃபின்னுக்கு வயலெட் மீது உயிர்.
        லாரா எண்ணம் பூர்த்தியாக வழியில்லை.
        ஃபின் எண்ணம் பூர்த்தியாகும் வழியும் இல்லை.
      • இதைக் காதலி லக்கியம் என்பர்.
        எழுத்து அற்புதம்.
        மனித இதயம் இலட்சியத்துத் தகுதியுடையதில்லை.
        இலக்கியப் படிப்பு மனத்தைத் தெளிவுபடுத்தும்.
        இலக்கியம் உலக ஞானம் தரும்.
      • மனம் உண்மையாக இருப்பது உண்மை.
        அந்த உண்மைக்கு வாழ்வில் இடமில்லை.
        இந்த பாத்திரங்கள் அனைவரும் ஒரு பொய் சொல்ல மாட்டார்கள்.
        ஒரு கோள் சொல்வதில்லை, ஒரு வார்த்தை தவற மாட்டார்கள்.
        உண்மையான மனம் இவர்கட்கு வாழ்வில் காதலைப் பூர்த்தி செய்வதில்லை.
        £ 40,000 பவுனை சூதாடும் அண்ணனுக்கு கொடுத்து விட்டு, அதனால் தான் விரும்பும் அழகனை மணப்பதைத் துறக்க பரந்த மனம் வேண்டும்.
        அவ்வளவு பெரிய மனமும் உண்மையும் இருந்தாலும் வாழ்வில் காதலைப் பூர்த்தி செய்யவில்லை.
        ஏன் என்ற கேள்விக்குரிய பதில் அற்புதம்.
        கதையைப் படித்தவர்க்குச் சொல்லலாம்.
        விளக்கமாகக் கூறினால் விவரம் புரியும். சுருக்கம் தெளிவுபடாது. லாரா உயர்ந்த மனமுடையவள். அண்ணன் திருந்த வேண்டும், நல்ல குடும்பம் நடத்த வேண்டும் என தன் வாழ்வைத் தியாகம் செய்கிறாள். அந்த தியாகத்திற்கு அவன் தகுதியுள்ளவனில்லை. அவன் வாழ்வு திருந்தி வளம் பெறுகிறது. அவனுடைய தரித்திரம் இவளைப் பிடித்துக் கொள்கிறது. அவனுடைய கர்மத்தில் தலையிட அவளுக்கு உரிமையில்லை. கொடுத்த பணம் £ 40,000 பவுன் திரும்பி வருகிறது. அத்துடன் கணவன் 1½ மில்லியன் பவுனும் வருகிறது. வாழ்க்கைப் பாலைவனமாகிறது. அவள் காதலி த்த அழகனும், அவள் தியாகம் செய்த அண்ணனும், அவள் காதலுக்கும், தியாகத்திற்கும் உரியவரல்ல.
      • அவர்களால் அவளைப் பாழாக்க முடிந்தது.
        அவள் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்ற எண்ணமும் அவர்கட்குத் தோன்றவில்லை.
  • ஒரு மெய்
    • குரு ஸ்தானத்திலி ருந்தவர் என்னிடம் 5000, 2000, 14,000 என அடிக்கடி பணம் கொடுத்தார். ஆரம்பத்திலேயே அதை நான் அறவே மறுத்தேன். வற்புறுத்திக் கொடுத்தார். தென்னந்தோப்பை விட்டு கிராமத்திற்குப் போன பின் ஒரு இலட்சம் தருவதாகவும், இதை கயிறு தயாரிக்க நான் பயன்படுத்த வேண்டும் என்றார். அப்பொழுது நான் தோப்பிலி ல்லை. கிராமத்திற்குப் போய்விட்டேன். அதனால் மறுத்துவிட்டேன்.
      • அவர் என்னிடம் சொன்ன ஒரே மெய் இது.
        5 ஆண்டு கழித்துக் கூறினார்.
      அப்படி அவர் கொடுத்தது மொத்தம் 55,000/-. 1973இல் அவருக்கு என் மூலமாக வந்தது ரூ. 1,63,000/-.
      • ஒரு மெய் சொன்னதால் அப்பணம் 3 மடங்காகப் பெருகியது.
    • ஒரு பொய் சொன்னால் 3 மடங்கு பெருகும்.
      • Atmosphere rich சூழல் வளமாக இருப்பதால், ஒரு சிறு முயற்சிக்குப் பெரும்பலன் உண்டு.
        ஒரு சிறு தவறுக்கு பெருநஷ்டம் உண்டு என அன்னை கூறுகிறார்.
      • எண்ணம் மெய்யால் மிளிர்ந்து,
        நினைவு நிலையாக சத்தியத்தை நாடி,
        உணர்ச்சி உள்ளபடி உண்மையில் திளைத்தால்,
        மெய், சத்தியம், உண்மை உயிருக்குத் தெம்பு ஊட்டினால்,
        புறமான சத்தியத்தின் அகமான ஆன்மா க்ஷணம் விழிக்கும்.
        அது அன்னையும், பகவானும் க்ஷணம் வீட்டிற்கு வந்தது போலாகும்.
      • சொல், பார்வை, நடை, உடை, பாவனை, நினைவு, நிலை என அனைத்தும் சத்தியாரோகணம் - சத்தியத்தின் யாத்திரை - மேற்கொண்டால், வீடு ஆசிரமமாகும். நெஞ்சம் ஆலயமாகும். நினைவு தத்துவமாகும்.
      • என்ன சொல்ல வேண்டும் என நினைத்து சொல்வதைவிட நினைப்பு சொல்லாக வெளி வருவது மேல். அது சத்திய ஜோதியாக இருப்பது நல்லது.
    • சமர்ப்பணம் செய்து அழகாக எழுதிய ஒரு கடிதம் வெளிநாட்டுக் கம்பனியை சிறிய கம்பனிக்கு பார்ட்னராகக் கொண்டு வந்தது.

      "நான் யார் எனக் காட்டுகிறேன் பார்” என்பதை இரண்டு பார்ட்னர்கள் இருவரும் வாய் ஓயாமல் சொன்னார்கள். அழிந்து போனார்கள். அவர்களால் நமக்கு வாரண்ட் வந்தது. மலை போன்ற வாய்ப்பு. ஆர்ப்பாட்டமாக அழித்தனர்.

      • பெற்றுக் கொடுத்தது ஒரு letter கடிதம்.
        எல்லாக் காரியங்களும் அது போல் செய்ய முடியுமா? முடிய வேண்டும். அந்த ஆர்ப்பாட்டம் செயலி ல், மனதில் இருக்கக் கூடாது.
      • சொல் பெரிய ஆயுதம். நம்மை முழுவதும் காட்டிக் கொடுத்துவிடும்.
      • பொறி வைத்துப் பிடித்து, மாட்டிக் கொண்டாயா எனக் கொக்கரிப்பது, கொம்பேரி மூக்கனாகும்.
      • ஆராய்ச்சி செய்வதைவிட ஆழ்ந்து ஏற்பது நல்லது.
        அந்த ஆழத்தில் திருவுள்ளத்தை ஏற்பது, மனம் மாறுவது அதிர்ஷ்டம் உற்பத்தியாவது. தரித்திரம் அதிர்ஷ்டமாக மாறுவது அதைவிடப் பெரியது.
      • வீண் செலவு, மனமாற்றத்தால் வரவாக மாறும். அவன் மனம் மாறும் அளவு நாம் மனத்தால் Mother அன்னையை ஏற்க வேண்டும்.
      • தரித்திரம் வந்த அடிப்படைக் காரணத்தை இன்று மனம் மாற்றும். மாமியின் கொடுமை, தூக்கம், பொறாமை, அதிகாரம், வீறாப்பு, சுயநலம், புலி, நல்லபாம்பு, ஆகிய அனைத்தும் உண்மையுள்ளது.
        • அவை புரிய மனம் sincereஆக இருக்க வேண்டும்.
        • திருடு, பொய், கருமி, அல்பம் மாற முடியும்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
திருமணம், பட்டம், கார், விஸ்வாசம், மரியாதை, தேச பக்தி ஆகியவை பெருமுன்னேற்றத்தைக் கொண்டு வந்த சமூகப் புரட்சிகளின் சின்னங்கள்.
 
திருமணமும் தேசபக்தியும் செய்த புரட்சி பெரியவை.

*******



book | by Dr. Radut