Skip to Content

02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

11. அருவெறுப்பு :
தனக்கு பிடிக்காததை தள்ளி வைக்க வேண்டும் மற்றும் அதனிடமிருந்தும் தள்ளி நிற்க வேண்டும் என்ற உணர்வு.
12. கோபம் :
ஒருவருடைய சூழ்நிலை அவருடைய கட்டுப்பாட்டை மீறுவதால் அவர் ஒரு இயலாமை நிலைக்கு தள்ளப்படும் பொழுது ஏற்படுகின்ற உணர்வு.
13. உள்ளெழுச்சி :
நம்முடைய பர்ஸனாலிட்டியின் ஆழத்தில் இருந்து கற்பனைகளும், காட்சிகளும், கருத்துகளும் தோன்றுவதை உள்ளெழுச்சி என்கிறோம்.
14. காட்சி :
உயர்ந்த ஜீவிய நிலைகளிலிருந்து நமக்குத் திடீரென்று தென்படுகிற உண்மை.
15. அமைதி :
நாம் அசைய முடியாத அளவிற்கு நம்மை சாந்தி தொடும்பொழுது அதை நாம் அமைதியாக உணர்கிறோம்.
16. மௌனம் :
சக்தி அசையாமல் நிலைப்பெற்றிருக்கும் பொழுது அதை நாம் மௌனமாக உணர்கிறோம்.
17. சத்தியஜீவியம் :
சச்சிதானந்தம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது சத் சத்தியமாகவும், சித் ஜீவியமாகவும், ஆனந்தம் வரம்பற்ற நிலையாகவும் மாறுகின்றன. இப்படி சத்தியமும், ஜீவியமும் வரம்பற்ற நிலையும் ஒன்றாக காட்சி அளிக்கும் பொழுது அதை சத்தியஜீவிய நிலை என்கிறோம்.
18. சின்சியரிட்டி :
உண்மையோடு நம் மனநிலை ஒத்து இருப்பதை நாம் சின்சியரிட்டி என்கிறோம்.
19. சின்சியரிட்டி
     கெட்ட நிலை :
உண்மையோடு ஒத்து போகின்ற நிலை கெட்டுப் போகும்போது சின்சியரிட்டி கெட்டு போய்விட்டது என்கிறோம்.
20. ஏற்புத்திறன் :
இறை உணர்வுகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையை ஏற்புத்திறன் என்கிறோம்.
 
தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உணர்வு எண்ணத்தை ஏற்றால் எண்ணம் வலிமை பெறும். ஆனால் அது சத்தியக் கருத்தாகாது. ஏனெனில் அதிலுள்ள சக்திக்கு முழுத் திறன் வருவதில்லை.
 
உணர்வு எண்ணத்தை ஏற்றால் எண்ணம் வலிமை பெறும்.

******



book | by Dr. Radut