Skip to Content

01. அஜெண்டா

அஜெண்டா

The higher standard of morality is not against ego (Volume 10, 1969, Page 32)

உயர்ந்த இலட்சியம் அகந்தையால் பாதிக்கப்படுவதில்லை

  • மனிதனுடைய குறை ஆண்டவனை பாதிப்பதில்லை.
  • எந்த ஆற்று அழுக்கும் கடலின் பரிசுத்தத்தைப் பாதிப்பதில்லை.
  • எலிசபெத் திட்டியதெல்லாம் டார்சியின் பிரியத்தை பாதிக்கவில்லை.
  • விகாரமான முகம் தெய்வ திருஷ்டிக்கு அழகு.
  • குழந்தை தாயின் மடியில் மலம் கழிப்பது தாயைக் குறைப்படுத்துவதில்லை.
  • கணவன் கல்லாக இருந்து கறுப்பாக செயல்பட்டாலும் கற்புக்கரசியின் பவித்திரம் பாதிக்கப்படுவதில்லை.
  • அன்பர் அறிவின் குறை The Life Divineஇன் ஜோதிக்கு பங்கம் விளைவிப்பதில்லை. அது அன்பரை முழுமையாக வந்தடைகிறது.
  • பொய்யை கருவியாக்கி அதனால் வாழும் மனிதர்களின் போக்கு, அன்னையின் அருள் பாங்க் கடனாக வருவதைப் பாதிப்பதில்லை.
  • சேவையின் சிறப்பு, பெறுபவரின் இருளால் குந்தகம் அடைவதில்லை.
  • பிழைக்க வழியில்லை என்ற நோயாளியை பிழைக்க வைக்கும் டாக்டர் அறிவும், சிகிச்சையும், நோயாளி பிச்சைக்காரன் என்பதாலோ, குற்றவாளி என்பதாலோ பாதிக்கப்படுவதில்லை.
  • மனிதனுக்கு அகங்காரமிருப்பதால் ஆண்டவன் அருள் அவனைத் தேடி வரும்பொழுது அருள் கறைபடுவதில்லை.
  • விபசாரியின் மனநிலை, அவள் ஆத்மாவைப் பவித்திரமாக விரும்பும் புனித ஜீவனின் அன்பின் சிறப்பைக் கெடுப்பதில்லை. (டால்ஸ்டாய் கதையில் பிரபு தன் வேலைக்காரியை கர்ப்பவதியாக்கியதால் அவள் விபசாரியாகி, கொலை செய்து, கோர்ட்டில் குற்றவாளியாக வரும்பொழுது பிரபு ஜூரியாக இருக்கிறார். மனம் மாறி அவளை மணக்க விரும்புகிறார். அவர் உயர்ந்த அன்பு அவள் தாழ்ந்த செயலால் கறைபடவில்லை.)

    கறை படும் அன்பு களங்கமற்றதில்லை.

    அன்பின் உன்னதம் உயர்வானால், கறை அதைத் தீண்டியவுடன் கரைந்து போகும்.

  • கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற சொல்லுக்குரிய விசேஷமிது. மனைவி கழுதையாக இருக்கலாம், கறையே உருவாக இருக்கலாம். கணவன் கடமை உணர்ச்சியினின்று எழும் பிரியமும், அன்பும் கழுதையை கற்பக விருக்ஷமாக்கும்.
  • குறை உலகுக்கு, குறையுடைய கண்ணுக்கு. குறை குறையில்லை, உள்ள குறையை விலக்க வெளியில் எழுவது குறை. குறைக்கு ஜீவனில்லை. பெரும் நிறை மனிதப் பார்வைக்குக் குறையாகக் காட்சியளிக்கும்.
  • "அங்கு பாவம் புண்ணியமாகிறது" என்பது சாவித்திரி.
  • அதிர்ஷ்டமான ஆயிரம் வருஷப் பரிசு அதன் முன் அற்பமாகும் என்பது சாவித்திரி யில் வேறொரு வரி.
  • பிரம்மம் தான் அனுபவிக்கும் ஆனந்தத்தை (Bliss) வளரச் செய்ய வகுத்த வழி இருளைச் சிருஷ்டித்தது. இருளாக மாறிய அருள் மீண்டும் அருளாக மாறுவது ஆனந்தம் வளரும் ஆனந்தமாவதாகும். இறைவன் அதைச் சிருஷ்டிக்க சிருஷ்டியை நாடினான் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  • தனக்காக வாழும் மனிதன் பிறருக்காகவே வாழ ஆரம்பித்தால், பிறர் வாழ்வு ஆன்மாவில் மலர்வதற்காகவே வாழ ஆரம்பித்தால் அது அர்ப்பணமான வாழ்வாகும். சமர்ப்பணம் அருளுக்கு அர்ப்பணமானால், ஆனந்தம் அனைத்து முனையிலும் வளரும் ஆனந்தமாகும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எவ்வளவு உயரமும் எட்டும் தீவிர பிரார்த்தனைகள் பலிக்காமலிருப்பதுண்டு. ஏனெனில் இம்முறையுள் இப்பிரார்த்தனைக்கு எதிரானது இருக்கும்.
 

 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இச்சின்னங்கள் எழ நூறு ஆண்டுகளும் ஆயின. இன்று ஒரே ஆண்டிலும் அவை உருவாகின்றன.
 
நூறாண்டு ஓராண்டாயிற்று.
 
******

 



book | by Dr. Radut