Skip to Content

11. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

அனந்தம் பூஜ்யத்திலிருந்து எழுகிறது. நிகழ்காலம் பிறப்பதற்கு முன் அழிகிறது (P.77)

  • இறைவன், பிரம்மம் என்பது அனந்தமானது, நித்தியமானது.
  • அணு தன்னுள் அனந்தத்தைப் பெற்றுள்ளது.
  • பிரம்மம் எடுக்க எடுக்கக் குறையாது.
    பிரம்மம் எவ்வளவு பெற்றாலும் வளராது.
    பிரம்மம் மனித மனத்தால் அறிய முடியாதது.
    பிரம்மம் மனித மனத்தின் புலன்களுக்கு பூஜ்யமாகக் காட்சியளிக்கும்.
  • உலகில் பல்வேறு பொருட்கள் - மலை, நதி, சந்திரன், சூரியன், மனிதர், தாவரம், விலங்கு - உள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளுண்டு. மனிதனுக்கு ஏராளமான சுபாவம், குணம் உண்டு.

    இவையத்தனையும் அனந்தமானவை.
    அனந்தமில்லாத அம்சம் பிரபஞ்சத்திலில்லை.

  • நமக்குப் புரியாததை மனிதன் இல்லை என்பான்.
    அவனுக்குப் பயன்படாததையும் இல்லை என்பான்.
    அவன் புலன்கட்குப் புலப்படாததை இல்லை - பூஜ்யம் - என மனம் கூறுவது ஆச்சரியமில்லை.
  • என் கண்ணுக்குத் தெரியவில்லை எனக் கூறும் அடக்கமில்லாத நேரம், அவன் கண்ணில் படாதது இல்லை, பூஜ்யம் என அவன் கூறுகிறான்.

    பூஜ்யம் என மனிதன் கூறுவது இல்லை என்று பொருளில்லை. அவனுக்குப் புரிவது, பயன்படுவது, புலப்படுவது எதுவும் இல்லைஎனப் பொருள்.

  • பூஜ்யம் என மனம் கூறுவது அனந்தம்.
    சீனுவாச ராமானுஜம் பூஜ்யம் இறைவன்; அனந்தம் சிருஷ்டி என்றார்.
    பூஜ்யம் என்ற கருத்தைக் கண்டவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நிகழ்காலம்என சொல் ஆரம்பிக்குமுன் அது கடந்த காலமாகிறது.
    காலம் உண்டு. நிகழ் காலம், கடந்த காலம், எதிர்காலம் என்பன மனம் பிரித்தது.
    அப்பிரிவினையில் உண்மையில்லை.
    காவிரி நதி, அதை அந்தந்த ஊரில் "எங்கள் ஆறு'' என்கிறார்கள். காவிரி பல ஊர்கள் வழியே செல்வது போல் காலம் பல நிகழ்ச்சிகள்மூலம் ஓடுகிறது. காலத்தில் பகுதியில்லை.
    பிரிவினை - 3 காலம் - மனம் செய்வது.
  • காலம் என்பது ஆன்மா தன்னையறிவது. தன் அசைவை ஆன்மா காலமாக அறிகிறது.
    காலம் ஆன்மாவின் அகம்.
    இடம் ஆன்மாவின் புறம்.
    காலத்தில் உற்பத்தியான செயல் இடத்தில் வெளிப்படுகிறது.

******



book | by Dr. Radut