Skip to Content

09. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(36) பலனைச் சிந்திக்க முடியாத மனம்*

(*Inability to think of the ensuing result.)

நம் வாழ்வில் பெரும்பலன் வந்த நேரங்களை நினைத்துப் பார்த்தால் அப்பொழுது நமக்கு முடிவு என்ன, பலன் எப்படியிருக்கும் என்ற நினைவேயிருந்திருக்காது. நரசிம்ம ராவ் பிரதமரானது, சாஸ்திரி பிரதமரானது, அண்ணாதுரை முதன் மந்திரியானது, காமராஜ் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தலைவரானது, காந்தி மகாத்மா காந்தியாகி இந்தியாவை ஆண்டது, சர்ச்சில் பிரதமரானது போன்ற உதாரணங்கள் அதை விளக்கும். "நான் நூறாண்டு வாழ்வேனா, வாழ்ந்தால் உலகம் எப்படி மாறும்?'' என அன்னை பகவானை சூட்சும உலகில் கேட்டபொழுது "அவை உனக்குத் தேவையில்லை'' என பகவான் கூறினார்.

  • நம்மை மறந்து கடமையைச் செய்யும்பொழுது எதிர்பாராத பெரும்பலன் வருவதை நாம் கண்டிருக்கிறோம்.
  • நம் திறமைக்குப் பெரும்பலன் உண்டு என்று தெளிவாகத் தெரிந்தபின் அதை நினைக்காமல் வேலை செய்வது உலகிலில்லை.

    கிளின்டன் சிறுவயதிலிருந்தே ஜனாதிபதியாக வேண்டும் என்று கண்ட கனவு பலித்ததும், சந்திரசேகர் பிரதமராக உயிரை விட்டது பலித்ததும் எதிரான உண்மைகள்.

  • பகவான் யோகம் செய்யக் கருதவில்லை. சுதந்திரம் பெற யோகம் செய்து சுதந்திரம் வந்தவுடன் இறைவன் அவரை யோகம் செய்யச் சொன்னார்.
  • வாழ்வில் ஒரே குறியாக இருந்து பலிப்பது தவறான முறையால் பெற்ற பலனாக இருக்கின்றன. அல்லது மிகச் சிறியவன் மிகப் பெரியதை நாடி பலித்ததாக இருக்கும்.

    தெரியாமல் பெறும் பலன் (unconscious) கண்மூடிப் பெறுவது, தெரிந்து பெறுவது (conscious) உலகிலில்லை. அப்படிப் பெறுவது யோகம் பலிப்பதாகும்.

  • நாம் செய்யும் எந்தப் பெரிய காரியமும் - நாடு சுபிட்சமாக வேண்டும், தண்ணீர் பஞ்சம் விலக வேண்டும், இலஞ்சம் அழிய வேண்டும், போதை மருந்து சாப்பிடுபவன் மாற வேண்டும், உலகம் அன்னை பகவானை ஏற்க வேண்டும், இந்தியா பாகிஸ்தான் இணைய வேண்டும் - இரு வழிகளில் சாதிக்கலாம். ஒரே குறியாக இருந்து சாதிப்பது வாழ்வின் வெற்றி. அது அரிது. நம் இலட்சியத்திற்குரிய வேலைகளை தவறாமல், சிறப்பாகப் பலனை நினைக்காமல், பலனை நினைக்கவே முடியாமல் செய்தால் அது பலிக்கும்.

    அப்படிப் பலிப்பவருக்கு யோகம் பலிக்கும்.

  • அது பலிப்பது சிரமம்.

    சரணாகதியின் முக்கியத்துவம் தெரிந்து மனம் அதில் இலயித்தால் நாம் நம்மை - நம் அகந்தையை - மறந்து காரியத்தில் ஈடுபடுவோம்.

    • முயல்பவர்க்கு முடியாததெல்லாம் முடியும்.
    • இயல்பாக அச்சுபாவமுள்ளவர்க்கு தற்சமயம் அதுபோன்ற பலன் வந்தபடியிருக்கும். அவர் தனக்கு யோகம் செய்யும் தகுதியுண்டு என அறியலாம். 
  • இம்முறைப்படி பகவான் பூரண யோகத்தை வந்தடைந்தார். அதனால் அன்பர்கட்கு அது உரிய முறை.

தொடரும்.....

*******



book | by Dr. Radut