Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

பகவான் ஸ்ரீ அரவிந்தர் பூமியின் சார்பாக இறைவனிடம் கேட்ட வரம் பெரியது. சித்திப்பது கடினம். சத்தியம் ஜடத்துள் சித்திக்கும் வரம் அது.
அதைப் பேரருள்மட்டுமே சாதிக்க வல்லது.

சக்தி ஜடத்தின் ஜீவியத்துள் வந்து அதன்பின் நிற்கிறது. இருண்ட திரை மறைவில் சக்தியுள்ளது. பேரருளின் நிபந்தனை பூர்த்தியானால் அது பலிக்கும். பூரணச் சரணாகதி, தெய்வத்திருவுள்ளத்தைமட்டும் ஏற்கும் பாங்கு, பொய்யை மறுத்து சத்தியத்தை முழுமையாக அறிந்து தேடும் மனநிலை அந்நிபந்தனைகள். இவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஜடம்வரை அது ஊடுருவ வேண்டும்.

–Sri Aurobindo

Volume-IV, page 55

வரம் மனிதன் தெய்வத்தைக் கேட்பான். வாழ்க்கைப் பலனை வரமாகக் கேட்பது மனிதன் பழக்கம். தவமிருப்பவர்கள் ஆன்மீகப் பரிசுகளான மோட்சம், இறைவன் தரிசனம், மௌனம், ஆனந்தம் போன்றவற்றைக் கேட்பார்கள். சாகாவரம் "நித்தியத்துவம்” கேட்பதுண்டு.

  • புத்தர், விவேகானந்தர் போன்றவர் உலக மாந்தர் அனைவரும் மோட்சம்பெற விழைந்தனர். அது இறைவனை, பிரம்மத்தைக் கேட்கும் வரம்.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் கேட்டது பூமாதேவிக்காகக் கேட்ட வரம். பூமாதேவி பிருத்வி, ஜடம் 5 முறை மாறியதில் முடிவான மாற்றம். அதையும் கடந்து ஜடத்தின் ஜீவியமும், ஜடமும் உள்ளன. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட மனம், இருளை உற்பத்தி செய்ய வேண்டி, ஒளியையும், முழுமையையும் மறந்து, இருளின் கருவிகளான மனம், வாழ்வு, ஜடத்துடன் இணைந்து ஐக்கியம் பெற்றது. அவை திருவுருமாறி மனம் சத்தியஜீவியமாகி, வாழ்வு ஜீவியமாகி, ஜடம் சத்தாவது திருவுருமாற்றம். அது நடைபெற 30,000 ஆண்டுகளாகும்.

    அந்த சித்தியை பூமிக்குப் பகவான் வரமாக முழுப் பிரம்மத்தைக் கேட்டார்.

  • அந்த வரம் சித்திக்கும் சக்தி சத்தியஜீவியம்.
  • அது தன்னிலையினின்று இழிந்து வந்து ஜடத்தின் பின் திரை மறைவில் உள்ளது.
  • இது மனிதனால் சித்திக்க வேண்டியது.
  • மனிதன் மேலிருந்து வந்த சத்தியத்துடன் பொய் கலந்திருப்பதை உணர்ந்து பொய்யை விலக்கி சத்தியத்தைப் பூரணமாக ஏற்பது நிபந்தனை.
  • மனிதன் பொய்யை விலக்கினால், பொய்யும், இருளும் வலுவிழந்து விடும்.
    மனிதன்மூலம் வாழ்வும், வாழ்வுமூலம் ஜடமும் ஒளி பெறும்.
  • மேலிருந்து இறங்கி வரும் ஒளி 4 நிலைகளிலுள்ள மனம் வழியாக வருவதால், அந்நிலைகட்குரிய பொய் கலந்திருக்கும்.

    பொய்க்கலப்பை விலக்க மனிதனால் முடியாது.
    ஏனெனில் மனிதனுக்குப் பொய் ருசிக்கும்.

  • ஆயிரம் ஆண்டுகளில் நடப்பது ணீ க்ஷணத்தில் நடக்கும் நேரம் சிருஷ்டிக்கு வந்துள்ளது. அதைப் பலிக்க வைப்பது மனிதன் கடமை.

*******



book | by Dr. Radut