Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

 

P.113 Bring brief magnificent reminiscences

உயர்ந்த நினைவுகளைச் சுருங்கக் கொண்டு வரும்

  • விளக்கம் தரும் எண்ணத்தின் உயர்ந்த உன்னதம்
  • அது ஞானசிருஷ்டியின் ஆனந்தமில்லை
  • உள்ளது திரை, அதன்பின் உள்ளது ஒளிந்துள்ளது
  • அழகின் சிறையில் அகப்பட்ட ஆனந்தம் அப்படி பாதுகாக்கப்பட்டது
  • இறைவனை நோக்கி இதயகமலம் எழ மறந்தது
  • நமக்குப் பின்னுள்ள நாணயமாக சூட்சும அழகு
  • உருவமே உள்ளது, தெய்வமே அரசன்
  • அழகிய எல்லைக்குள் எழும் அர்த்தமுள்ள ஜோதி
  • களையான இயற்கை கரைந்தெழும் பிழையற்ற எழில்
  • சுதந்திரம் அங்கு சிறப்பை உருவாக்கும்
  • அற்புத சித்திரம் அசைவின் சக்தியைப் பெறவில்லை
  • ஜனித்தது, ஆன்மாவின் பூரிப்பு அர்த்தமுள்ளதாயிற்று
  • ஒருமையின் கவர்ச்சி அதிசயமென எழுந்தது
  • கோடாக எழுந்த கோலான எழிற் கற்பனை
  • நிறைவுதரும் முழுமையை உணர்ந்தவர் பலரும்
  • பூரித்தெழுந்த முழுமையின் புதுமை அளவால் சிறந்தது
  • குறுகிய சிறுமையில் குதித்தெழும் அற்புதம்
  • சிறிய இடத்தில் சீறி எழும் பூரிப்பின் புரியாத சிக்கல்
  • சூழலைத் தழுவும் சுருதியின் பாங்கு
  • சட்டப்படி எழும் சிறப்பான வடிவம்
  • பிழையற்ற அமைப்பு கவர்ச்சி நிறை பயன் தரும்
  • சொந்த ஆனந்தம் தரும் சுகம்
  • சிறப்பையறிந்து வாழும் சிந்தனையற்ற வாழ்வு
  • சொர்க்கம் ஏற்கும் சொந்த நிறைவு
  • உள்ளதே எல்லாம், தேவையென்பது எழ மறுக்கும்
  • உடைந்த உள்ளம் உழலும் அவலமில்லை
  • சோதனை ஒழிந்த போராட்டமற்ற பெருவாழ்வு
  • எழும் வலியின்று, எதிர்ப்பிற்கு வழியின்றி
  • பயமும் சோர்வும் அற்ற உலகம்
  • குறையின் அருளில்லை, தோல்வியின் எழுச்சியில்லை
  • தவறு செய்ய வழியில்லை, தடுக்கி விழும் தன்மையில்லை
  • செறிவான சொந்த ஆனந்தம் வகுத்த வழி
  • சொல்லிழந்த எண்ணம் கண்ட ரூபமெனும் வண்ணம்
  • அலையென எழும் அற்புத எண்ணமும் செயலும்

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உணர்வின் உண்மையைக் காணும்பொழுது மனம் உடைகிறது. அவ்வெண்ணங்கள் சித்திக்க விழைவது மனம் உடையும் நிலையைப் போற்றுவதாகும்.
 
உணர்வின் உண்மை மனத்தை உடைக்கும்.

******



book | by Dr. Radut