Skip to Content

04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி  

  • "காசு வரமாட்டேன் என்கிறது, மழை வருகிறது. மற்றவெல்லாம் தவறாமல் நடக்கின்றன".
    • ஒரு குடும்பத்தில் ஒரு பக்தரிருந்தால், அவருக்காக குடும்பத்தில் பல நல்லது நடக்கும். மற்றவர்கள் அந்த சௌகரியத்தை அனுபவிப்பார்கள். அனுபவிப்பது அன்னைக்கு எதிராக இருக்கும்.
      தான் எதுவும் செய்யாமல் பல நல்லது நடப்பதுபோல் தன் அழிச்சாட்டியத்திற்கு அன்னை காசு தரவில்லை என ஒருவர் குறைப்படுவார்.
      உழைப்பு காசு.
      உழைப்புஎன்பது உடல் உழைப்பு.
      உடலைக் கடந்தது உயிர். உயிரால் உழைப்பது என்பது இனிக்கப் பழகுவது.
      உயிரால் உழைத்தால் வரும் காசு பெரியது.
      அதைக் கடந்தது மனம்.
      மனத்தின் உழைப்பு யோசனை, அறிவு.
      அறிவின் உழைப்புக்கு அதிகமான காசு வரும். அது பணமாகும்.
      அறிவை ஏற்று உடல் உழைத்தால் அபரிமிதமான பணம் பெருகும்.
      அறிவையும், உயிரையும் ஏற்ற உழைப்பு, பெறுவது செல்வம்.
      அறிவு செயலில் பிறர் இனிக்க வெளிப்படுவது பெருஞ்செல்வம்.
      ஆத்மா மௌனமானது.
      ஆத்மாவின் உழைப்பு அகிலத்தின் செல்வம்.
      அன்னையின் சூழல் ஆத்மாவின் உழைப்பின் பலன் தரும்.
      அது அருள்.
      அருள் மழையாக வருகிறது.
      மழை வருகிறது எனில் அனைத்துமிருக்கிறது எனப் பொருள்.
      இருப்பதை இதமாக ஏற்று இனிக்கச் செயல்படுவது செல்வம் தானே பெருகுவதாகும்.
      காசு வரவில்லை எனில் உழைப்பில்லைஎனப் பொருள் அல்லது குதர்க்கமிருப்பதாகப் பொருள்.
      பிறர் பொருளை மனம் நினைத்தால் தனக்கு வரவேண்டிய பொருள் வாராது.
      காணிக்கை இறைவனின் பொருள்.
      வால்டருக்கு காணிக்கைத் தர முடியவில்லை.
      கோடி கோடியாக வந்தும் கையில் எதுவும் வரவில்லை.
      போர் முதலியார் (water diviner) குதர்க்கம்.
      குதர்க்கம் கோணல் பேசும்.
      குதர்க்கமும் மாறி காணிக்கை கொடுத்து பெருஞ்செல்வம் பெற்றது.
      போர் முதலியார் (water diviner)க்கு எஸ்டேட் முதலாளி கண்ணுக்குத் தெரிந்தது.
      போர் முதலியார் தண்ணீர் கண்டுபிடித்து வாழ்க்கை நடத்துபவர்.
      ஆரோவில்லுக்கு 19 இடங்களைச் சேவையாக அவர் கண்டுபிடித்துக் கொடுத்தார். ஓர் அன்பருக்கு 10 கிணறு போட உதவினார். அன்பர் பெருநிலம் வாங்கி அங்கே கிணறு தோண்ட முதலியாரைக் கூப்பிட்டார். அன்பருக்கு பெருமுதலாளி நண்பர். நண்பர் பெருந்தரித்திர அம்சம் உடையவர். முதலியாருக்கு தரித்திரமோ, அன்பரோ கண்ணுக்குத் தெரியவில்லை. "முதலாளி' தெரிகிறது. அவரைக் கூப்பிட்டார். நிலத்தில் ஏற்கனவே நீருள்ள இடங்களை முதலியார் பார்த்திருக்கிறார். கிணறு தோண்ட இடம் சரியாகக் குறிப்பிட வேண்டும். வேப்பங் கவையை முதலியார் கையில் எடுத்து நடந்தால் நீருற்றுள்ள இடத்தில் கவை நகரும், சுற்றும். முதலியாருக்கு பெருமுதலாளி தம் திறமையைப் பாராட்ட வேண்டும்என்பது அவா. நீரூற்றுள்ள இடத்திற்கு அனைவரும் போனார்கள். கவை சுற்றவில்லை. தரித்திரம் பலிக்கிறது. ஏற்கனவே இறைத்துக் கொண்டிருக்கும் கிணறுகளிடம் முதலியார் சென்றார்.
      கவை சுற்றவில்லை. முதலியாருக்குப் புரிந்தது. தன் திறமை அழிந்ததுஎனப் புரிந்தது. பீதி வந்தது. பிழைப்பே போயிற்று. ஆனால் பெருமுதலாளியின் தரித்திரம் தம் பிழைப்பை விழுங்கியதை முதலியார் அறியவில்லை.
      அதனால் பிழைக்கும் வழியே போய்விட்டது.
      மீண்டும் மனம் முதலாளிமீது இருக்கிறது.
      அது தரித்திரம், பரம தரித்திரம், பரம்பரை தரித்திரம்.
      பரம்பரை தரித்திரத்தைமீறி ஒருவன் சம்பாதித்தான்.
      அதன் காரணம் பணிவு.
      திருட்டு புத்தியுள்ளவன்.
      அவன் காணிக்கையைத் திருட வேண்டியதாயிற்று.
      திருடனுக்கு அருள் செய்ய அவனது காணிக்கையைத் திருட வேண்டும்.
      எல்லாப் பக்கங்களிலும் பெருஞ்செல்வம் காத்திருக்கும் பொழுது "காசு வரமாட்டேன்” என்றால் அது தரித்திரத்தின் மீதுள்ள பிரேமை.

     
  • ஒரு குழந்தையின் சுபாவம்
    • சிறு குழந்தை, மனவலிமையுடையவன்.
      அதன் சுபாவத்தை அதன் செய்கைகள்மூலம் விளக்க முயல்கிறேன்.

      மனவலிமை, அடம் பிடிக்கும்.
      பெரிய திருடு.
      வேண்டாம்என்பதைத் தவறாது செய்வான்.

      ஆழ்ந்த பிரியம் தேவைப்படும் குழந்தைக்கு நடைமுறைப் பிரியம் எரிச்சல் தரும்.

      குழந்தை திருடு, பக்காத்திருடு, அடங்காப்பிடாரி.
      அது தரித்திரம் வைரமானதுஎனப் பொருள்.
      இக்குழந்தையை எவரும் மாற்ற முடியாது.
      உற்பத்தி ஸ்தானம் மாற்றலாம்.

      தகப்பனார், தாயார் மாறினால் குழந்தையை மாற்றலாம்.

      அதற்குப் "பணிவு” போதாது.
      தம்மைக் காண்பவர் தீட்டுப்படும் அளவு சுபாவம் தீண்டாதவர்கள் என மனம் அறிய வேண்டும்.
      தன்னைப் போன்றவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்.
      எதிரானவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்.
      எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும்.
      அதைப் பெறமுயன்றால், உலகம் தன்னைப்போல் கிராக்கி செய்வதைக் காணலாம்.
      அடக்கம், அமைதி, பணிவு, கீழ்ப்படிதல், தீண்டத் தகாதவர்கள் என்ற அறிவு ஏற்படாதவரை குழந்தை பேயாக இருப்பான்.
      குழந்தை பெற்றோரின் பிரதிபலிப்பு.

      வறுமைக்கு அறிவு வருவது தரித்திரம்.

      தரித்திரம் தன் பெருமையை உணர்வது தரித்திரம் வலுப்படுவதாகும்.
      இதையும் மீறி வரும் வசதி ஆற்றுவெள்ளம் கலங்கலாக இருப்பதைக் குடிநீராகக் கருதுவது.
      அதிகாரம், அதிக காரம் - தரித்திரத்தின் முத்திரை.
      அனைவரும் தன்னை அதிகாரம் செய்ய மனம் விழைய வேண்டும்.
      தரித்திரம் சுபாவமாகி, ஜீவனாக முடிவாக தேவதையாகிவிட்டது.
      சுபாவத்தை எரித்துச் சாம்பலாக்க வேண்டும்.
      பொய் அதன் கருவி.
      பொய் தரித்திரத்தை வலுப்படுத்தும்.
      முழுமெய் பேசியும் போகாத தரித்திரம்.
      இதன் அடையாளம் பகல் தூக்கம்.
      பகலில் தூங்குவது பரம தரித்திரம்.
      அதுவே இவரின் வரப்பிரசாதம்.

     
  • மடக்கிப் பேசினால் விஷயம் புரிந்து கொள்ள வழியில்லை.
    • பண்பு என்பது பிறர் பேசும்பொழுது பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பது.
      மடக்கிப் பேசுதல் (retort) மரியாதையில்லை.
      பதிலில்லாதவன் மடக்கிப் பேசுவான்.
      சிறுவர்களிடம் இது உண்டு. அதுவும் சரியில்லை.
      மடக்கிப் பேசுதல் is defensive.

      தன்னைக் காப்பாற்றிக் கொள்வது.

      விஷயமிருந்தால் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.
      விஷயம்என எதுவுமில்லாதவர் மடக்கிப் பேசுவர்.
      கேள்விக்குப் பதிலாகக் கேள்வி எழுப்புவது மடக்குதல்.
      மடக்கிப் பேசுபவன் பிறர் தன்னை மடையன்எனப் புரிந்து கொள்வார்என அறிவதில்லை.
      பேசுவது ஒரு கலை.
      பெரியவர் பேசுவதை சிறுவர்கள் பதில் சொல்லாமல் கேட்பது மரியாதை. மரியாதை பண்பால் வரும், பயத்தால் வரும்.
      பயத்தால் வரும் மரியாதை பயம் போனவுடன் துடுக்காக எழும்.
      துடுக்காகப் பேசுபவர் சிறுவயதில் பயந்து அடங்கியவராவர்.
      மடக்கி ஏன் பேசுகிறார் என்பதைவிட மடக்கிப் பேசினால் எதிரி என்ன சொல்ல வருகிறார்என அறியும் வாய்ப்பு போய்விடும்.
      எதிரியின் மனம் தெரியாவிட்டால் நம்கற்பனை பல திசைகளில் போகும்.

      உண்மை - உள்ளது - தெரியாவிட்டால் நாம் கற்பனை உலகில் வாழ்வோம்.

      என் நண்பன் மடக்கிப் பேசுவான்.
      அவன் தகப்பனார் 40 காணி நிலம் படைத்த காங்கிரஸ் தலைவர்.
      அவர் கூலிக்காரனாக இருந்து சொத்து சம்பாதித்தவர்.
      அவர் முனிசிபல் கௌன்சிலுக்கு நின்றபொழுது ஓர் ஓட்டு கிடைத்தது.
      மனைவி, மகன், மகள்கள் அவருக்கு ஓட்டுப் போடவில்லை.
      தன் ஓட்டு மட்டும் விழுந்தது.
      அவனுக்கு நண்பர்கள்என எவருமில்லை.
      30 ஆண்டு ஹைகோர்ட்டில் கேஸில்லாமலிருந்தான்.
      கடைசி காலத்தில் அதிகமாகச் சம்பாதித்தான்.
      அவன் மடக்கிப் பேசுவதன் மூலம் தகப்பனார் கூலி வேலை செய்தது.
      யாராவது, எதாவது சொல்லிவிடப் போகிறார்கள்என முந்திக் கொண்டு மடக்கி பிறர் வாயை அடக்குவது மடக்கிப் பேசுவது.
      ஒருவர் எது கேட்டாலும் அவர் நண்பர் அவர் குறையைச் சுட்டிக்காட்டி மடக்குவார்.
      இது பேசும் முறையில்லை.
      இப்படிப் பேசுவது தரித்திரம் போகக் கூடாது என முயல்வது.

  • புதியதாக அதிகாரத்திற்கு வந்தவருடைய குத்தலான ஆச்சரியம்.
    அது பலமானது.
    • எதிர்பாராதது ஆச்சரியம் தரும்.
      பதவி வந்தால் ஆச்சரியம் எழும்.
      புதியதாக எழும் மரியாதை ஆச்சரியமானது. புரிந்து கொள்ளும் சக்தி, பிறர் மேலுள்ள பிரியத்தை அவருக்குப் புரியும்படி எடுத்துரைக்கும் திறன் ஆச்சரியம் தரும்.
      குத்தலாகப் பேசுவது கிண்டல், கேலி, புதியதாகப் பணம் வந்ததுபோல் பேசுவது மனம் புண்படும்.
      தமாஷ் செய்வது, அன்பாக, அழகாக, நல்லதாக இருக்கும்.
      குத்தலான கேலி மனம் நோகும்படிச் செய்யும், அடுத்தவர் மனம் ஒடியும்.
      "ஓ! எழுத ஆரம்பித்து விட்டீர்களா?'' என்று புதிய எழுத்தாளரைக் கேட்பது அவரை எழுதுவதையே மறக்கச் செய்யும்.
      மட்டமான வெளிநாட்டார் அதுபோல் பேசுகிறார்கள்.
      அப்படிப்பட்டவர் தன்னைமட்டும் பாராட்டுவார்.
      எவருடைய திறமையையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
      குத்தல் மயிரிழை இருந்தாலும் நட்பு அழியும்.
      அதுபோன்ற ஒருவரை நான் அறிவேன். அவர் கேலி விஷம், கெட்ட எண்ணமுடையது, உயிரை எடுக்கக் கூடியது.
      முடிவாக தன்னையே அடியோடு அது அழிக்கும்என அவர் அறியார்.
      இப்படிப் பேசும் நேரம் ஒருவர் வாழ்வில் முக்கியமான கட்டம்.
      அது திடீரென எழும்.
      ஓரிரு வினாடிக்குள் அவர் நல்லதாகப் பேசுவதா, கெட்டதாகப் பேசுவதாஎன தீர்மானம் செய்ய வேண்டும்.
      எப்பொழுதும் அன்னை நல்லபடியாக நடக்கும் வாய்ப்பைத் தருகிறார். பிறரைப் பாராட்டும் சந்தர்ப்பம், தான் விரும்பும் பெண்ணை பாராட்டும் வாய்ப்பு, அது வாழ்க்கையை நிர்ணயிக்கும் நேரமாகும். அந்த நேரம் நல்ல பக்கம் திரும்பினால், அக உணர்வு உயர்ந்து வளரும்.
      எலக்ஷன் வெற்றி, பிறர் பிரியமாகப் பேசுவது, அடுத்தவர் நம்மை நம்பி இரகஸ்யம் கூறுவது, கூட்டம் கைதட்டிப் பாராட்டுவது ஆகியவை அப்படிப்பட்ட நேரம்.
      மனிதன் நல்லதை நோக்கி வளரும் சந்தர்ப்பம் அது.
      அவை முக்கியமான நேரம்.
      நல்லதைச் செய்தால் பெரிய நல்லது வரும்.
      கெட்டதை விரும்பினால் பெரிய கெட்டது நடக்கும்.
      அன்னை அப்படிப்பட்ட ஆயிரம் வாய்ப்பைத் தருகிறார்.
      ஓர் ஆபத்தான நேரத்தில் அன்னையை அழைத்து சரி செய்யலாம். அந்த நேரம் கரண்ட் அடிக்கடி நின்றால் அன்னையைக் கூப்பிடுவது மிகச் சிரமம். கூப்பிட்டு வெற்றி பெறுவது பெரியது. அப்படி வெற்றி பெற்றால் கர்வம் எழும் - அத்துடன் மனிதன் அழிவான்.

      விக்காம் போன்றவர் பெண்களுடன் தளுக்காகப் பேசி, குழைந்து, "உன்னைப் போலுண்டா'' என்பான். பெண் அவ்வலையில் விழுந்து அழிவாள்.

      வாழ்வு பெரியது.
      அன்னை வாழ்வு அதைவிடப் பெரியது.
      ஒரு தியானத்தில் பல ஜென்மப் புண்ணியம் பெறலாம்.
      அதுவே அன்னை சக்திக்குரியது.
      நாம் அதை இனிமையாக ஏற்க முடியுமா?
      மனத்துள் விழிப்பு இருக்குமா?
      அவ்விழிப்பு தியானத்தைவிடப் பெரியது.
      மனம் விழிப்பாக இருந்து தீவிரமாக விரும்பும் எதையும் தவறாது பெறலாம்.

  • "நான் உன்னை அழிப்பேன்".
    • "நீ அழிந்து தெருவில் நிற்பதைக் கண்டு நான் கை தட்டிச் சிரிப்பேன்'' என்பது வாழ்வில் வெற்றி பெற்று உயர்ந்தவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் சொல்லத் தவறாத சொல்.
      • பொறாமைப்படாத மனிதனில்லை.
      • பொறாமைப்பட முடியாத மனிதனை கையெடுத்துக் கும்பிடலாம்.
      • மனிதன் பொறாமைப்படுவான்என அறியாதவர் அழிக்கப்படுவார்.
      • பொறாமைப்பட முடியாத மனிதனை பொறாமைப்பட்டு தங்களையே அவர்கள் அழித்துக்கொள்வார்கள்.
      • அப்படிப்பட்டவர் அன்பரானால் அவரால் உலகில் பொறாமை வலுவிழக்கும்.

      அன்னை சக்தியுடன் எக்காரணத்திற்காக மோதினாலும் இதுவே பலன் என நான் அறிய 1975-1980 ஆயிற்று.

      எவர்க்கு எந்தக் குறையிருந்தாலும், எந்த தப்பும் நமக்குச் செய்ய நாம் கருவியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிந்தேன். அதன்பின் வலிய எனக்குத் தொந்தரவு தர முயன்றவரிடமிருந்து பெரும்பாடுபட்டு எரிச்சலில்லாமல் விலகினேன்.

      இது பெரிய Power. சக்தி.
      எந்த வழியும் போகவிடாது.
      எவருடனும் தொடர்பு கூடாது.
      எந்தத் தொடர்பையும் நாமே விலக்கக் கூடாது.
      சிறிய நல்லதிற்கும் சிறிய கெட்டதிற்கும் பெரிய நல்லதும், பெரிய கெட்டதும் நடக்கும் என்கிறார் அன்னை.

      இரண்டு வீடுள்ள என்னுடைய பேராசிரியர் எனக்கு வீடு விற்றவருக்குப் பால்ய நண்பர். வீட்டை விற்றவர் பத்திரம் எழுதித் தாராமல், வீட்டைத் தமக்குத் திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்கிறார். அவருக்கு வீடுண்டு.

      "நீங்கள் வீட்டை நண்பருக்குக் கொடுத்தால் நான் சந்தோஷப்படுவேன்'' என்று என் பேராசிரியரே என்னிடம் நேராகக் கூறினார். அவருக்கு சமாதி புஷ்பம் அனுப்பினேன். வீட்டுக்காரர் என்மீது பொய்க் கேஸ் போட்டுத் தோற்றார். பேராசிரியர் தம் பெரிய வீட்டை தானமாக எழுதித் தரும் சந்தர்ப்பம் வந்து கொடுக்க நேரிட்டது.

      நல்லதும் செய்ய முடியாது.
      கெட்டதும் செய்ய முடியாது.
      சமர்ப்பணம் செய்யலாம், வேறெதுவும் செய்ய நமக்கு உரிமையில்லை.

தொடரும்....

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஞானயோகத்திற்கு நிஷ்டை கருவியாவதுபோல், ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.
 
ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பொறுக்க முடியாதவன் அவசரப்படுகிறான். பொறுமைக்கு சிருஷ்டியின் வேகமுண்டு. அதனால் அது க்ஷணம் தரிக்காது.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பெரிய வாய்ப்பைத் தேடிப் போனால் சமூகத்தில் பெரு முன்னேற்றமடையலாம். அது அக வளர்ச்சிக்குப் பொருந்தாது.
 
பெரிய வாய்ப்பும் அக வளர்ச்சிக்குதவாது.
 
******



book | by Dr. Radut