Skip to Content

03. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

தேவரீர் அப்பா அவர்களுக்கும் மற்றும் அன்னை அன்பர் அனைவருக்கும் எனது முதற்கண் நன்றி கலந்த வணக்கத்துடன் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் சமர்ப்பணம் செய்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.

இச்சிறியவனின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வினைப் பதிவு செய்கிறேன். நான் அஞ்சல் துறையில் குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகிறேன். என் தவறினால் எனக்குக் கிடைக்க வேண்டிய arrears (நிலுவை தொகை) பணம் கிடைக்காமல் தள்ளிக் கொண்டே போனது. எப்பொழுதும் நம்முடன் இருக்கும் அன்னையை வேண்டி எனது மேலதிகாரியை பார்க்கச் சென்றபொழுது அவர் சம்மதித்து நாளை பணத்தைப் பெற்றுக் கொள்ள ஆணையிட்டார். அதன்பின் மறுநாள் குளித்தலையில் இருந்து கரூர் சென்றேன். செல்லும்பொழுது பேருந்தில் ஸ்ரீ அரவிந்தர் coin (ஸ்ரீ அரவிந்தர் 2 ரூ. நாணயம்) கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தர் coin கிடைத்தால் எனது பிரச்சினைகள் தீர்ந்துவிடும். எனது arrears பணத்தினை பெற்றுக் கொண்டு அன்னைக்கு நன்றி சொல்லியவண்ணம் இல்லம் வந்து சேர்ந்தேன். ஸ்ரீ அரவிந்தர் coinஐ எனது இல்ல பூஜை அறையில் வைத்துவிட்டேன். சில நாட்கள் கழித்து இரவில் சென்று அன்னையை வழிபடும்போது அங்கு coin இல்லை. எனது இளைய மகன் தான் எடுத்திருப்பான் என்பதை அறிந்து அவன் தூக்கத்தை கலைக்காமல் விட்டு காலை அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். இரவு 7 மணிக்கு இல்லத்திற்குத் திரும்பியவுடன் என் இளைய மகனிடம், "உன்னை நான் தண்டிக்கமாட்டேன். அன்னை கூறியிருக்கிறார்கள். உண்மையைக் கூறு'' என்றேன். அவனே தவற்றை உணர்ந்து, "அப்பா, நான்தான் எடுத்தேன். என்னை மன்னியுங்கள்'' என்றான். அருகில் உள்ள டீ கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன் என்றான். அவன் குற்றத்தை உணர்ந்து திருந்தியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. உடனே அந்த டீ கடைக்குச் சென்று கடைக்காரரிடம் விவரத்தைக் கூறினேன். அவரும் தனது கல்லாப்பெட்டியை திறந்து "இதோ இந்த coinதானா'' என்றார். ஆம், இச்சிறியவனுக்குக் கிடைத்த அதே ஸ்ரீ அரவிந்தர் coin. சந்தோஷம். அன்னைக்கு நன்றி, நன்றி, நன்றி. என் மனதில் நன்றியை மட்டும் சொல்லிக்கொண்டே சென்றேன்.

எப்பிறவியில் என்ன நன்மை செய்தேனோ, நிரந்தர ஆனந்தம் நிலையாக வாழ்வில் வளம்பெற எல்லாம் வல்ல ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் பாதகமலங்களை சரணாகதி அடைந்து இக்கடிதத்தை அனுப்புகிறேன்.

அப்பாவிற்கு, தங்களின் சேவை இப்பூவுலகில் என்னை போன்ற பலருக்கும் கிடைத்து பலன் அடைந்திருக்கிறார்கள். அனைவரது சார்பிலும் என் நன்றி கலந்த நமஸ்காரத்தைத் தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

-- P.V. கார்த்திகேயன், குளித்தலை

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வின் அமைப்பு முறைக்கு அஸ்திவாரம் ஜடத்தின் தூய்மையான "நாணயம்''.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நண்பர்கள் இரு கட்சிகளாவது நமக்கு விளையாட்டு. பிரம்மம் இரு கூறுகளாகப் பிரிந்து தன் திறமைக்குத் தானே சவால் விடுதல், அதிகபட்ச ஆனந்தத்தைத் தருவதில் ஆச்சர்யம் இல்லை.
 
பிரம்மம் இரு கூறுகளாகப் பிரிந்து விடும் சவால் லீலை.
 
*******



book | by Dr. Radut