Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. மனித மனத்தில் நம்பிக்கைஊற்று வற்றுவதில்லை.
    • நம்பிக்கையின் ஊற்றுக்கு உறைவிடம் விழிப்பான ஆன்மா.
  2. அதிகமான நம்பிக்கை ஏமாற்றமளிக்கும்.
    • அதிகமான நம்பிக்கை ஞானமாகும்.
  3. நல்லது நடக்கும்என்று நம்பு.
    • நல்லது மட்டும் நடக்கும்என்பது அன்பர் வாழ்வு.
  4. உடல்நலக்கேடு ஆத்மாவின் நலமாகலாம்.
    • ஆழ்ந்த தியானம் உடல்நலக்கேடு உடல்நலமாக மாறுவதை கட்டம் கட்டமாகக் காட்டும்.
  5. வாழ்வின் இனிப்புச்சுவை மகிழ்வே.
    • மகிழ்வையும் இனிமையாக்கும் மகிமையுண்டு சமர்ப்பணத்திற்கு.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
பெறும் நிலைகள் அனைத்திலும், தான் தாழ்ந்த நிலையில் இருப்பதை உணர்வதே (sincerity) உண்மை நோக்கம் ஆகும்.
 
பெறுபவர் தாழ்ந்தவர்.

*****



book | by Dr. Radut