Skip to Content

05. சாவித்ரி

"சாவித்ரி"

P.100 An atavism of higher births is hers

உயர்ந்த பிறப்பின் உயிரோட்டமான சுபாவம்

  • அழிந்த நினைவுகள் ஆழ்ந்த நித்திரையைக் கலைத்தன.
  • இழந்த லோகங்களை அழைத்தெழுந்தன.
  • மார்பகம் மறக்காத சக்திகள் அசைந்தன.
  • வளரும் பெருவிதியின் வளமான உறவுகள்,
  • அழியாத வாழ்வை அடைந்தன மீண்டும்.
  • பிறப்பையும் இறப்பையும் பிரித்தெடுக்க இசைந்தன.
  • முழுமையின் மின்னலைப் பெற்றுச் செயல்படும்,
  • கபோதியின் உழைப்பு கடுமையிழந்து அமைதியுற,
  • மலையிலெடுத்த சிறுகல்என்ற பிம்பம்,
  • அமைதியான ஜோதியின் அரவணைப்பின் அகம்,
  • ஆண்டவன் ஏற்ற அலுவல்; குருட்டுப் பார்வைக்குரிய கலங்கரை விளக்கம்.
  • உலகையாள எடுத்து வைத்த சிறுஅடி,
  • முடவனின் முயற்சி, அரைகுறையான வேலை, அனைத்துலக வாழ்வு,
  • மறைந்த மகிமையை மாற்றும் ஐயங்கள்.
  • உயர்ந்த இலட்சியங்களை உற்று நோக்காத ஆரம்பம்,
  • பெருமையின் ஆரம்பம் பெற்ற பேற்றின் நடுக்கம்,
  • விவரமற்ற விஷயம் விறுவிறுப்பாக சந்தித்து,
  • ஆயிரம் வண்ணங்கள் அழிந்தெழும் ஐக்கியம்,
  • அறிவைக் கேலி செய்யும் கலைஞனின் களிப்பு,
  • இறைவனின் இதயம் எட்டிப் பார்க்கும் எழில்,
  • ஞானத்தின் தெளிவை ஞாபகப்படுத்தும் யுக்தி.
  • பல லோகங்கள் பங்கு கொள்ளும் சித்திரத்தின் திரை,
  • தெய்வம் தந்த பளிங்கு யோகம் தந்த யந்திரம்.
  • இயற்கையின் அஞ்ஞானத்திரையின்பின் மலர்ந்த மனம்,
  • பரந்த ஜடத்தின் இடம் நிரப்பிய பார்வையுள்ள பரப்பு.
  • லேசான கீறலான ஆத்மா நெளிந்து நகரும் வண்ணம்,
  • காலத்தின் பின்னணிக்குரிய நிலைபெற்ற கால்கள்.
  • அனந்தம் சுருங்கிய அழகின் பிரகாசம்,
  • உலகை உட்கொள்ளும் கடுகெனும் கற்கள்,
  • பிரபஞ்ச புதிரின் விளக்கமான பாதை.
  • அவலமான அடித்தளம் ஆரம்பமாக நடந்தது.
  • சூன்யம், இரகஸ்யமான முழுமையின் துவாரமான வாயில்,
  • அனந்தம் அழிந்தெழுந்த பூஜ்யத்தின் திரள்,
  • முழுமையும், முழுஅழிவும் ஒன்றென எழுந்த பாங்கு,
  • என்றும் இல்லையெனும் இல்லாத ஆடை.

******



book | by Dr. Radut