Skip to Content

04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

பிறர் வாழ விரும்புவது நல்லெண்ணம்

மாமாவுக்குப் பையன் நமஸ்காரம் செய்தான். "நான் ஆசீர்வாதம் செய்து, நீ பெரிய மனுஷனாகிவிட்டால், என்ன செய்வது? என் ஆசீர்வாதம் பலித்துவிட்டால் ஆபத்தாயிற்றே?" என்றார் மாமா. அவர் விளையாட்டாகச் சொன்னார். பையன் பெரிய இடத்திற்கு வந்துவிட்டான். தமாஷான குதர்க்கத்தின்பின் நல்லெண்ணம் இருந்ததால்தான் இன்று பையன் வசதியாக இருக்கிறான். ஹாஸ்யமான சொல்லானாலும் மக்கள் மனநிலையை இது காட்டுகிறது.

அதனால் உளமார வாழ்த்துவது உயர்ந்தது.

உழவன் அடுத்தவன் உண்பதைப் பொறுத்துக் கொள்வான், உழுவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டான்என்பது சுபாவத்தை விளக்கும் சொல்.

ராமநாதன் தன்னால் ஜெயிக்க முடியாத South Indian Tennis Tournamentஐத் தம் மகன் கிருஷ்ணன் ஜெயிக்க வேண்டுமென வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். ICSஇல் 8 பேர் எடுக்கும் நாளில் 8ஆம் நபராக வந்தவர் மார்க்கை 9ஆம் நபருக்குப் போட்டு அவரை எடுத்தனர். அவர் கல்லூரி ஆசிரியரானார். தாம் பெறாத ICSஐத் தம் மகன் பெற அவர் சிறுவயதிலிருந்து முயன்றதால் IASஇல் அவன் உயர்ந்த ராங்க் வாங்கினான். பெற்றோர் தம் மக்கள் தங்களைவிட உயர்ந்தவராகவரப் பிரியப்படுபவர். இது இயல்பு. பெரும்பாலும் உண்மை. அடுத்த பக்கம் உண்டு.

  • தம்மைவிட மகன் புத்திசாலியாக இருப்பதால் பொறாமைப்படும் பெற்றோரும் உண்டு.
  • மகள் தம்மைவிட அழகானால் பொறுக்காத தாயாருண்டு.
  • யாதவப் பிரகாசருக்கு தம் சிஷ்யன் பிரபலம் பொறுக்கவில்லை.

இவையும் உலகில் உலவும் நடைமுறை. நமக்கு அக்குணம் இல்லாவிட்டாலும், உள்ளே புதைந்திருக்கும். அதற்கு மாற்றுசெய்வது பெரும்பலன் தரும்.

  • மனிதனால் பிறருடைய திறமையை ஏற்க முடியாது.
  • அதை ஏற்பவராலும் பிறர் நல்ல குணத்தை ஏற்க முடியாது.

நல்லெண்ணத்தின் பவரை உயர்த்த நாம் செய்ய வேண்டியது:

  • நம் உறவினர், நண்பர்கள், குறிப்பாக நெருக்கமானவர்கள், மேலே உள்ளவர், கீழே வேலை செய்பவர்கள் 15 அல்லது 20 அல்லது 50 பேரைப் பட்டியலாக எடுத்து, நிதானமாக அவர்களுக்குள்ள திறமைகளை ஆராய்ந்து மனத்தை ஏற்கும்படிச் செய்ய வேண்டும். அதைப் பாராட்டிப் பேச வேண்டும். அவரிடமே சந்தர்ப்பம் வரும் பொழுது சொல்ல வேண்டும். அவரைப் பாராட்டும்பொழுது நம் மனம் சந்தோஷப்படுவது, நிறைவது நம் உணர்வு உண்மையானதுஎனக் காட்டும்.
  • அதேபோல் இவர்கள் எந்த விஷயத்தில் நல்லவர்கள், எந்த அளவு நல்லவர் என்பதைத் துல்யமாகக் கணித்து, மனம் ஏற்க வேண்டும். அவர் திறமையை ஏற்பதைவிட நல்லவர்என ஏற்பது சிரமம். அதை வெளியில் பேச வேண்டும். அவரிடமே சொல்ல வேண்டும்.
  • நல்லெண்ணம் பிறர் வாழ்வு செழிக்கச் செய்யும்.
  • பிறர் திறமையைப் பாராட்டுவது மனம் விசாலமடையும்.
  • பிறர் நல்ல குணத்தை அவரிடமே பாராட்டிப் பேசுவது மனமும், உணர்வும் பவித்திரமாகப் பக்குவம் அடைந்ததைக் காட்டும்.

பிறர் பெருமை நம் மனத்திற்குத் தரும் நிறைவு ஆன்மீக அதிர்ஷ்டமாகும்.

நிதானம் தேவை. யோகத்தை அளவோடு ஏற்க வேண்டும். (Find the balance)

  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிறந்தபொழுது அவர் தாயார் ஸ்வாதீனம் இழந்தார்.

    இலண்டனிலிருந்து வரும் செய்தி தவறாக வந்து, தகப்பனார் மாரடைப்பால் இறந்தார். (பிள்ளைகள் பயணம் செய்யும் கப்பல் மூழ்கியதுஎன்ற தவறான செய்தி வந்தது).

    பகவான் மனைவி பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு வரும்வழியில் நோயுற்று இறந்தார்.

    ஏன் அவதாரப் புருஷருக்கு இந்த நிலையென நாம் கருத வேண்டும். இலட்சிய ஆர்வத்தில் நாம் யோகத்தை அளவுக்கு மீறி ஏற்றால் வாழ்வு கடுமையாகும்என்பது சட்டம். (நாம் நம் நிலையை பகவானுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, பார்க்கக்கூடாது).

    நடந்தன எல்லாம் நல்லனவே. நல்லது மட்டுமே என்றால், எப்படி இது போன்ற நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்வது?

    1. நமக்கு நல்லது குழந்தைக்குக் கசப்பு.
    2. சட்டத்தில் நல்லது நியாயத்திற்குத் தவறு.
    3. தவற்றை நல்லதாக அறியும் ஞானம் விவேகம்.
    4. பிள்ளையைக் கறி சமைப்பது பிள்ளைக்கு மோட்சம் என்பது ஆன்மீக ஞானம்.
    5. ஸ்ரீ அரவிந்தம் அதையும் கடந்தது.
    6. இறைவன் செயலை முகமலர்ச்சியுடன் ஏற்றுப் போற்றுவது ஸ்ரீ அரவிந்த ஞானம்.
      • மனம் செயல்படக் கூடாது - அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு.
      • உணர்ச்சி எழுவது பாவம் மட்டுமன்று; மட்டம்.
      • செயலை நாடுவது தோல்வி.
      • மனம் அமைதியாக, உணர்ச்சி உயர்வாக, தானே எழும் செயல் இறைவன் செயல் - உடல் புளகாங்கிதம் பெறும்.
      • அது சமர்ப்பணம்.
  • எல்லோரிடமும், ஒருவர் தவறாமல், நல்ல பெயர் வாங்க முடியாதவர் எதற்கும் பயன்படமாட்டார். தேறச் (pass) செய்ய எதிரி வாயால் புகழ் எழ வேண்டும். இது குறைந்தபட்ச தகுதி.

    மனம் குறையை மறக்க வேண்டும்.
    குறையிருந்தால் மதரில்லை.
    எண்ணத்திலேயே குறை எழக்கூடாது. இது அவசியம்.
    குறை எழுந்தால் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
    நமக்கு எவரும் கணக்கில்லை, நாம்மட்டுமே கணக்கு.
    டி.வி. பார்ப்பது மனம் தாழ்வது.
    நல்ல புரோகிராம் பார்க்கலாம், மட்டமானவற்றைத் தவிர்க்க வேண்டும்.
    சிறப்பான சிந்தனையும் சிந்தனை என்பதால் கூடாது.

  • நெருக்கமான இருவர், மிக நெருங்கியவர்கள் (தம்பதி; உடன் பிறந்தவர், பெற்றோர், பிள்ளைகள்) ஒருவர் அடுத்தவருக்கு மேற்கூறிய மனப்பான்மையில் சொல்லக்கூடியது:

    "உங்களைவிட எனக்குச் சிறந்தவரை நான் சந்தித்ததில்லை. நீங்களே எனக்கு எல்லாம். நாம் நெருங்கிவரச் சில ஆண்டுகளாயின. இப்பொழுது நீங்களே எனக்கு அன்னையென நானறிய பல ஆண்டுகளாயின. அது உங்கள் ஆன்மீகப் பெருமை. என் இதயத்தை முழுவதும் திறக்கக்கூடியவர் ஒருவரே. அவர் நீங்கள்தாம். நீங்களே என் உணர்வு மையம். எனக்குக் கவசமாக நீங்கள் அமைய வேண்டும். நீங்களே என் ஆவித்துணை. அது அன்னை பக்தி. உங்களை அன்னையாக நான் காண வேண்டும். இது நடக்க வேண்டும். உங்கள் எண்ணம் என் வாழ்வில் பலிக்கும்''.

வேத வாக்கு

வெறும் பேச்சையும் வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்னை சொல், ஸ்ரீ அரவிந்தர் சொல் வேதம்.

"மனைவிக்குச் சரணடையாமல் மனம் மலராது.

அவள் தாளினை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்.

யோகம் அவனுக்கு அவளில் பூர்த்தியாகும்'' என்பது ஸ்ரீ அரவிந்தம்.

அனைவரும் பாராட்ட வானை எட்டும் அளவு உயர வேண்டும்.

வமையைக் கேட்டால், கிடைக்கும்.

மனம் அடங்கினால், கேட்டனவெல்லாம் கிடைக்கும்.

மனம் அழிந்தால், கேட்காதனவெல்லாம் கிடைக்கும்.

மனம் உயர்வது உடல் ஆரோக்கியத்தில் தெரியும்.

இந்த மனநிலையில் நினைவே பிரார்த்தனை.

பிரார்த்தனை - உடனே பலிக்கும்.

5 வருஷ வியாதி 5 நாளில் போகும்.

சொல்வதற்கு ஒன்றுமில்லை - செய்வதற்கு ஏராளமாக இருக்கின்றன.

அன்னையை அறிந்தது அதிர்ஷ்டம், அருள்.

அதற்கேற்ப நடக்க வேண்டும்.

"உன்னை நினைத்ததைப்போல் அன்னையை நினைத்தால் யோகம் சித்திக்கும்'' என உணரும் மனைவி, கணவன்மார் ஏராளமாக உண்டு.

என் மனம் ஒரு முறை திறந்தது.

இதுவே சட்டம்.

"என் உணர்வு உன்னில் பூர்த்தியாக வேண்டும்'' என நினைக்கும் தம்பதிகள் உண்டு.

"என் உணர்வையும் பூரணமாக ஏற்பது நல்லது''.

மனித இதயம் எளிதில் திறந்து மலர்வதில்லை.

"எனக்கு அன்புதவிர வேறெதுவும் தெரியாது.

என் இதயத்தைத் திறந்து அங்கே நிலையாக வாசம் செய்.

உன் மூலமாக நான் அன்னையை அடைகிறேன்'' என்பது ஆர்வமுள்ள தம்பதியின் குரல்.

அன்பு தூய்மையானால் அது விஷத்தையும் அமிர்தமாக்கும்.

அமிர்தமான அன்பு அன்னையின் அருளின் அற்புதம்.

அன்பு உற்பத்தியானால் நெஞ்சு வெடித்துவிடும்.

வெடிக்கும் நிலைக்கு வந்த நெஞ்சு நிறைந்து நிலைக்க வேண்டும்.

நினைவு நிறைவு.

நினைவிருந்தால் நெஞ்சு ஆலயம்.

நிலையான காதலை நிதர்சனமாக்குவது அன்னையின் அருள்.

அன்பு என்பது சிரிப்பின் மலர்ச்சி.

அன்புக்கு அறிவு வந்தால் அதற்கு இனிமைஎனப் பெயர்.

பிள்ளைகட்குச் செல்வம்தரப் பிரியப்படுகிறோம்

  • பில்கேட்ஸ் உலகிலேயே முதன்மையான பணக்காரர்.
    ($70 பில்லியன் சம்பாதித்துவிட்டார், ரூ.280,000 கோடி).

    அவர் பிள்ளைகளுக்குப் அப்பணம் நல்லது செய்யாது என தர்மத்திற்குத் தம் செல்வத்தைக் கொடுத்துவிட்டு, பிள்ளைகட்கு $300 மில்லியன் - ரூ.1,200 கோடி - கொடுத்தார். அமெரிக்காவில் பெரும் பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகட்குச் சிறிது பணம் கொடுத்துவிட்டு, மீதியை தர்மத்திற்குக் கொடுக்கும் வழக்கம் ஆரம்பமாகியிருக்கிறது.

    • பணம் தர முடியும்.
    • பண்பு தர முடியாது.
    • பண்பில்லாமல் பணம் நல்லது செய்யாது.
    • செல்வம் தரலாம், திறமை (character) தரமுடியாது.
    • திறமை (character) தந்தாலும், பண்பு (values) தரமுடியாது.
    • அன்னை (Mother) மேலே நம்பிக்கை தரமுடியுமா?
      மதர் தருவது மற்றவர் தரமுடியாது.
      இது யதார்த்தமாகுமா?
    தத்துவம் பணத்தைவிடப் பெரிய கருவியென பிரபல ஆசிரியர் டிரக்கர் கூறுகிறார்.

    யதார்த்தத்தைவிடப் பெரிய இலட்சியம் - உலகப் போரில் ஹிட்லர் செக்கோஸ்லவேக்கியாவை ஆக்ரமித்தபொழுது பாட்டா கம்பனியை எடுத்துக் கொண்டான். அதுவே பாட்டா கம்பனியின் தலைமை ஆபீஸ். அதன் பெரிய ஆபீஸர்கள் தப்பி ஓடி இலண்டனில் சந்தித்தனர். "கம்பனி போனால் எல்லாம் போகாது. ஆபீஸர்களிருக்கிறோம். மீண்டும் கம்பனியை நாம் ஆரம்பிக்கலாம்'' என்றனர். கனடாவில் ஆரம்பித்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது.

    • கம்பனியின் முதல் பணமில்லை.
      திறமைபெற்ற (executives) அதிகாரிகள்.
    • திறமை பணத்தைவிடப் பெரியது.
    • பண்பு திறமையைவிட உயர்ந்தது.
    • அவல் கொடுக்காமல், அதிர்ஷ்டம் வாராது என்பது குசேலருடைய அனுபவம். வால்டர் காணிக்கை தர மறுத்தார். திட்டம் (project) ரத்தாயிற்று. போர் முதலியார் தர மறுத்து, பிறகு காணிக்கை கொடுத்துப் பலன் பெற்றார். திருடனுக்கு அனுக்கிரஹம் செய்ய காணிக்கையைத் திருட வேண்டும்.

      தெய்வம் பக்தனுக்கு காணிக்கை தரும் நேரமும் உண்டு. அன்பர் அன்னைக்கு 1970இல் 3 இலட்ச ரூபாய்தர முடிவுசெய்து ஒரு திட்டத்தை ஆரம்பித்தார். 1972இல் அன்னை அவருக்கு 2 இலட்சம் கொடுத்தார். மேலும் 1டீ இலட்சமும் வந்தது. அந்த காணிக்கை கருணையாகவுமிருக்கும், கடுமையாகவுமிருக்கும்.

     

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆசைக்கு அறிவை உணர்த்த முயல்வது அறியாமையாகும். இன்று வரும் நஷ்டம் நாளைய இலாபத்தைக் கொண்டு வரும் என விளக்குவது போலாகும் அது. அதிகாரம் செய்யும் மனைவிக்கு அறிவுக்குரிய விளக்கமளிப்பது போலாகும்.
 
அதிகாரம் செய்யும் மனைவிக்கு அறிவுக்குரிய விளக்கமில்லை.



book | by Dr. Radut