Skip to Content

03. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம:

ஸ்ரீ அன்னையே நம:

அன்புள்ள அன்னையின் பக்தர்களே, உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள ஒரு இனிய சம்பவம் அன்னையினால் நடைபெற்றது. 12-12-2005 அன்று நான் பெங்களூருவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் பிழைப்புக்கும் சாவுக்கும் நடுவில் போராடி தத்தளித்துக் கொண்டிருந்தேன். டாக்டர்கள் என்னை அன்றைய தினம் ஆபரேஷன் செய்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு நான் படுத்திருந்த படுக்கை தலையணை அருகில் அன்னையைக் கண்டேன். அவர் என் தலையைத் தம்முடைய திருக்கரங்களால் ஸ்பர்சித்து "எதற்கும் பயப்பட வேண்டாம்'' என்று ஆசீர்வதித்து, "எல்லாம் நல்லபடியாக முடியும்'' என்று கூறி மறைந்தார். நான் அந்த வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நோயினால் என் உடம்பில் விஷம் ஏறி, ரத்தத்தில் கலந்து, Pneumoniaக்கு திரும்பிவிட்டது. எனக்கு 24 மணி நேரம் dead lineஐ டாக்டர்கள் விதித்திருந்தனர். இதனால் ஆபரேஷன் நேர்ந்தது. ஆபரேஷனுக்குப் பின்பு 3 நாட்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்யப்பட்டிருந்தேன். ஆனால் என் பாக்கியத்தை என்னவென்று சொல்ல முடியும்! ஏனென்றால், ஜூலை 2005இல் பாண்டிச்சேரியில் அன்னையின் தரிசனம் முடித்து வந்திருந்தேன். அதன் பிறகுதான் மேற்கண்ட விஷயங்கள் நிகழ்ந்தன. அன்னை எப்பொழுது தம் திருக்கர ஸ்பர்சத்தினால் என்னை ஆசீர்வாதம் செய்தார்களோ, அதன் பிறகு எனக்கு ஆபரேஷனில் எவ்வித கோளாறுமின்றி இந்த அபாயகரமான நோயிலிருந்து மீட்கப்பட்டேன். இந்த அனுபவங்களை பக்தர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. நான் அன்னைக்கு எவ்வித சேவையும் செலுத்தியதாக ஞாபகம் இல்லை. ஆனால் வியாதியினால் ஆபரேஷன் செய்யப்பட்டு கிடந்த நான் அன்னையின் அருளாலும், அன்பாலும் மறுபிறப்பு எடுத்தேன்.

- K.V. மரகதவல்லி, பெங்களூரு

*****



book | by Dr. Radut