Skip to Content

பகவானுடைய இதரநூல்கள்

யோகக் குறிப்புகள்

இந்தியப் பரம்பரை கர்ணபரம்பரை. எழுத்தில் எதுவுமிருப்பதில்லை. மேலும் இரகஸ்யம் முக்கியம். குரு தம் ஞானத்தை சிஷ்யனுக்கு மட்டும் கொடுப்பார். அதுவும் அவர் மனம் எந்த சிஷ்யனால் இனிக்கிறதோ அவனுக்கே கொடுப்பார். அதைத் தம் உயிர் பிரியுமுன் அவனை அழைத்து இரகஸ்யமாகச் சொல்லுவார். சிஷ்யன் அதை பிறரிடம் சொல்லக்கூடாது. சொன்னால் பாவம், அவனுக்குப் பலிக்காது. இதுவே நம் ஆன்மீகப் பரம்பரை.

ஸ்ரீ அரவிந்தர் இப்பரம்பரையைப் பின்பற்றினார் என்றாலும், நேர் எதிராக நடந்தார் என்றாலும் இரண்டும் உண்மையாகும். ஏனெனில், ஸ்ரீ அரவிந்தர்,

ஒரு கருத்து உண்மையானால், அதற்கு எதிரான கருத்தும் உண்மை

என்று கூறியிருக்கிறார். வாழ்வில் இது உண்மை. மிகவும் கடுமைக்கும், கண்டிப்புக்கும் உட்பட்ட குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கண்டிப்பு, கடுமையே அறியாத சுதந்திரமாக இனிமையாக வளர்க்கப்பட்ட குழந்தையின் எதிர்காலமும் சிறப்பாக இருப்பதுண்டு. யோக இரகஸ்யங்கள் பரம்பரையாக யோக இரகஸ்யமாகவே இருந்தன. இன்றும் இருந்து வருகின்றன. ஸ்ரீ அரவிந்தர் அது போன்ற இரகஸ்யங்களை, விவரமாக, வெளிப்படையாக நோட்டில் எழுதி வைத்துள்ளார். Archives பழைய செய்திகளைத் தாங்கிவரும் பத்திரிகையில் 1980க்கு மேல் இச்செய்திகள் வெளிவருகின்றன. தினமும் தம் யோகத்தில் நடந்தவற்றை மணிக்கு மணி ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ளார். இவற்றின் தத்துவங்கள் Synthesis of Yoga என்ற நூலில் நான்காம் பாகம் பூரண யோகத்தைப் பற்றியது. அதில் 25 அத்தியாயங்களில் பகவான் எழுதுவது இந்த யோகக்குறிப்புகளில் சொந்த அனுபவமாகக் காணப்படுகிறது.

யோகானுபவங்களை 7 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் சிறு பகுதிகளாகப் பிரிக்கிறார். இவை பெரும்பாலும் மரபிலுள்ளவை, என்றாலும் பகவான் செய்த யோகம் மாறுபட்டிருக்கும். நாம் மாட்டுவண்டி, குதிரைவண்டியை வண்டி என்கிறோம். இன்று "வண்டி'' என்றால் மோட்டார் பைக், கார், பஸ், ரயில் எனப்படும். மௌனம் என ரிஷிகள் கூறுவது மனத்தின் மௌனம். மௌனம் என பகவான் கூறுவது சத்திய ஜீவிய மௌனம். வித்தியாசம் ஏராளம். மாட்டுவண்டிக்கும் பஸ்ஸுக்கும் உள்ள வித்தியாசமாகும். பரம்பரையான சொற்களில் புதிய யோகத்தை பகவான் விளக்குகிறார். அந்த ஏழு பகுதிகள்

1) சமதா சதுஷ்ட்டயா

சமதா, சாந்தி, சுகா, ஹாஸ்யா (அ) ஆத்மாபிரசாதா

2) சக்திசதுஷ்ட்டயா,

வீர்யா, சக்தி, தெய்வபிரகிருதி, சிரத்தா

3) விஞ்ஞான சதுஷ்ட்டயா,

ஞானம், திரிகால திருஷ்ட்டி, அஷ்ட சித்தி, சமாதி

4) சரீர சதுஷ்ட்டயா,

ஆரோக்கியா, உத்தாபானா, சௌந்தரியா, அனந்தா

5) கர்ம சதுஷ்ட்டயா,

கிருஷ்ணா, காளி, கர்மா, காமா

6) பிரம்ம சதுஷ்ட்டயா,

சர்வம் பிரம்மா, அனந்தம் பிரம்மா, ஞானம் பிரம்மா, ஆனந்தம் பிரம்மா

7) யோக சதுஷ்ட்டயா,

சுத்தி, முக்தி, புக்தி, சித்தி



book | by Dr. Radut