Skip to Content

சாவித்திரி

P. 4 And buried its seed of grandeur in the hours

அற்புதங்களின் வித்தை தாங்கிவரும் காலத்தின் பகுதிகள்.

தனித்திருந்து மனிதன் சிந்திக்கும் பொழுது எழுவது கற்பனை. இறைவனின் கற்பனை இயற்கையாக மாறியதைத் தத்துவம் காலம் என்கிறது. நான்கு அங்குல டிஸ்க்கில் 30,000 பக்க கலைக்களஞ்சியம் கம்ப்யூட்டரால் அச்சிடப்பட்டுள்ளது இன்றைய விஞ்ஞான சாதனை.

உலகத்தின் அற்புதங்களை இறைவன் காலத்துள் வைத்துள்ளான்

என்பது மேற்கூறிய வரியின் கருத்து. ஜோஸ்யரிடம் போனால் நம் பிறந்த நாளைக் கேட்கிறார். நேரத்தைக் கூறுகிறோம். அவர் கட்டம் போட்டு நாள், நட்சத்திரம், லக்னம், ராசி, திசை என ஆயிரம் விவரங்களை எழுதுகிறார். அவர் கணக்கு முடிந்தபின் நாம் கூறிய நாள், மணி இவ்விரண்டிலிருந்து நம்முடன் பிறந்தவர், பெற்றவர்கள், நாம் வாழ்க்கைப்பட்டவர், நமக்குப் பிறந்தவர், செய்த தொழில், இனி செய்யப் போகும் தொழில், இதுவரை வாழ்வில் நடந்தவை, இனி நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறுகிறார். மேலும் அவரால் போன ஜென்மத்தையும், அடுத்த ஜென்மத்தையும் சொல்லமுடியும்.

நாம் கூறிய சிறு விவரங்களினின்று அவர் நம் உலகையே அறிந்து பேசமுடிகிறது என்றால் அந்த நேரம் என்ற ஒரு விஷயத்தில் வாழ்வு என்ற கடல் மறைந்துள்ளது. இந்த நேரம் நாம் பிறந்த நேரம்.

காலத்தின் நாழிகை இறைவன் பிறக்கும் நேரமாகும்.

ஜோஸ்யர் நம் வாழ்வை அறிவார். ரிஷி நேரத்தில் இறைவன் ஜாதகத்தைக் காண்கிறார். அதுவே மேலே எழுதப்பட்ட காவியத்தின் வரியாகும். இதையொட்டி எழுந்த சித்திரங்களை பகவான் ஸ்ரீ அரவிந்தர் பலவகைகளாக எழுதுகிறார்.

  • வானமெனும் திரையில் வண்ணமெனும் எழுதுகோல் எழுதிய சூத்திரம்.
  • மறை பொருளான இலட்சியத்தின் சிறு குறிப்பான அற்புதம். 
  • அனந்தனின் மையத்தில் தெரியும் ஆனந்தத்தின் வதனம். 
  • தூரத்து இன்பத்தின் தூய உருவம் 
  • காலத்தைக் கடந்த உலகிலிருந்து வரும் காலத்தின் தூதன்  
  • நட்சத்திரங்களின் நடுநிலை வழுவாத கதி 
  • இயற்கையின் காதில் ஒலிக்கும் அவள் அடிச்சுவடுகளின் ஒலி
  • புவியின் மோனம் பூத்தெழுந்த புனிதம் 
  • மனத்தின் எண்ணம் தெய்வவரமாகும் யோக சமர்ப்பணம்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கொள்ளை, போர் மூலம் நாகரீகம் எழுகிறது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நெருங்கிய நண்பனுக்கும், விரோதிக்கும் ஒரே குணம் இருப்பதுண்டு. நம்மைப் பொருத்தவரை அவர்கள் போக்கு எதிரானது.



book | by Dr. Radut