Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - கலாட்டா, திருடு இரண்டும் மாறி சூழல் சரியாகும் வரை காண்ட்ராக்ட்டுக்கு ஆபத்து. வீடு கட்டும் பொழுது, பிரமோஷன் வரும்பொழுது நாம் இந்த எச்சரிக்கையுடனிருக்கிறோம். அன்னையிடம் அதே எச்சரிக்கையுடனிருப்பதில்லை.

தம்பி - எச்சரிக்கையாக இருப்பவர்கள் அன்னை விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துவிடுகிறார்கள். இருந்தும் 2 வகைகளில் தப்பு வருகிறது.

1) அன்னையிடம் வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறதல்லவா? சந்தோஷமாகப் பாராட்டுவது தவறு என்று சாதாரண மாகத் தெரிவதில்லையில்லையா? அதனால் தவறு வருகிறது

2) மேலும் அன்னை நமக்கு 5 கோடி பெரிய காண்ட்ராக்ட் என்றால் 50 கோடியை கொடுத்துவிடு கிறார்கள். அது நமக்கு நிலை கொள்வதில்லை. வழக்கமான நிதானம் அங்கு தவறிப்போய் விடுகிறது.

அண்ணன் - வாழ்க்கையில் தவறாத விஷயங்கள், அன்னை தரும் விஷயங்களில் தவறும். அதுவும் புரிவதில்லை.

தம்பி - இது முக்கியம். தெரியவில்லை என்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம். பெரியசாமி நண்பர்கள் எல்லாம் E.B.இல் கூலி வேலை செய்கிறார்கள். இவன் அங்கு இன்ஜீனீயர். பெரியசாமிக்கு அங்கு சூப்பர்வைசராகும் நிலையும் அந்தஸ்தும் இல்லை. அன்னை சூப்பர்வைசர் கிடைக்க முடியாதவனுக்கு இன்ஜினீயர் பதவியைத் தந்துவிட்டார்.

அண்ணன் - விஷயமே அதுதான். இன்ஜினீயர் வேலை வக்கீல் மகனுக்கு வந்தால் அவன் எல்லாருக்கும் சொல்

சந்தோஷப்படுகிறான். அது அவனை பாதிப்பதில்லை. பெரியசாமிக்கு இன்ஜினீயர் வேலை வந்தது என்றவுடன் எல்லாருக்கும் அதிர்ச்சி. அது ரத்தாகி விடுகிறது. என்ன தவறு, எல்லாரும் செய்வதைத்தானே நானும் செய்தேன் என்றால் சரி வருமா?

தம்பி - அன்னை கொடுப்பது அவரவர் நிலைக்குப் பெரியது. அதனால் அதிக எச்சரிக்கை வேண்டும். This is ordinary common sense. பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான். இடம், பொருள், ஏவல் பார்த்து செய்யவேண்டும். இல்லை என்றால் விஷயம் கெட்டுப்போகும். ராமசாமி USAக்கு போகும்பொழுது கடைசிவரை யாருக்கும் தெரியாது. ஊருக்குப் போகும்பொழுது சொல்லிவிட்டுப் போனான். அவன் பெரியப்பா பையன் US ஆர்டர் வந்தவுடனே எல்லாரிடமும் சொன்னான். வருஷம் 2 ஆயிற்று. ஒன்றும் வரவில்லை.

அண்ணன் - ராமசாமிக்கு படிப்புள்ளது. இவனுக்கு எதுவுமில்லை. இவனுக்கு எப்படி USஆர்டர் வந்தது எனநினைப்பார்கள். அதனால் இவன் சொல்லியது தவறாகப் போய்விட்டது.

தம்பி -ராமசாமிக்கு போகணும் என்பது முக்கியம். சொல்லணும் என்பதில்லை. இவனுக்கு போவதைவிட, சொல்ல வேண்டும் என்பது முக்கியம். அதனால் இவன் சொல்வது தவறு.

அண்ணன் - இவனால் சொல்லாமலிருக்க முடியாது. அதனால்தான் தவறு வருகிறது.

தம்பி - Discipline அதுதான், சொல்வது சரியா, தப்பா என்பதில்லை. சொல்லும் மனப்பான்மை சரியா, தப்பா என்பதே முக்கியம். இப்படிச் சொன்னால் புரியும்.

அண்ணன் - புரியும் என்பது சரி, புரிந்தால் செய்வார்களா? எப்படிச் சொன்னால் செய்வார்கள் என ஒரு முறையிருக்கிறதா? எல்லாருக்கும் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் சொல்லமுடியாது.

சொல்ல வேண்டும். அவர் பயன்பட வேண்டும் என்று நினைப்பதே சரியில்லை என்றல்லவா பகவான் கூறுகிறார்.

தம்பி - எனக்கு அதுபோல் சொல்வது selflessness பரநலம். உங்கள் disciplineக்கு அது தவறு. பிறர் பயன்பட வேண்டும் என்பதே ஆசை என்பது உங்கள் நிலை. அப்படியானால் சட்டம் எது என்று தெளிவாகச் சொல்லமுடியுமா? நம் அனுபவத்தைப் பார்ப்போம். எத்தனை பேருக்கு வந்தது? யார் யாருக்குக் கூடிவரவில்லை என்று பார்த்தால்,

1)எதுவும் செய்யாத சாமர்த்தியசாலிக்கு 26 award விருது வந்தது. இது நமக்குத் தெரியும் எப்படி வந்தது என்று. இவருக்கு அன்னையைத் தெரியாது. ஆனால் அன்னை சக்தி இவரிடம் பலனாக தவறாமல் வருகிறது. ஏராளமான பொய், திருட்டுத்தனம். அதை மீறி மனிதர் பெரிய பிரபலமடைகிறார். காரணம் என்ன? யாரும் காதில் வாங்கிக் கொள்ளாத இலட்சியத்துக்கு, இவர் முழு ஆதரவு கொடுத்தார். அதன் மூலம் உலகுக்கு அன்னையின் இலட்சியம் பலித்தது. பெரிய சேவையல்லவா? இவருடைய receptivity சேவைக்குத் தரும் ஆதரவு, இவர் பொய், பித்தலாட்டத்தைவிடப் பெரியது என்றாகிறது. இவரே அன்னையிடம் நெருங்கியவரானால், இப் பொய் இவர் வேலையை ரத்து செய்திருக்கும்.

2) 800 கோடி திட்டம் அமெரிக்கருக்கு முடிவாயிற்று. மகன் மூலமாக வந்தது. அவர் மகனுக்கே உண்மையாயில்லை. இல்லை என்றாயிற்று.

3) ஆபீஸ் குமாஸ்தாவுக்கு அமெரிக்க ஸ்காலர்ஷிப் வந்தது. விஷயம் முடிவதற்குள் நிலையிழந்து போனார். தவறிவிட்டது.

4) தொழில்

இலாபம் 6 மாதத்தில் 10 மடங்காயிற்று. அவர் எல்லாம் தெரிந்திருந்தும் தன்னை அழிக்க விரும்புபவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆபத்தாயிற்று.

5) போட்ட முதல் 1 1/2 வருடத்தில் 18 மடங்கு உயர்ந்தது. உதவி செய்தவரையே தூற்ற ஆரம்பித்ததால், பலனில்லாமல் போயிற்று.

6) கம்பனியை மூட வேண்டிய நிலை வந்தபின், அன்னை யிடம் வந்தவரையும், கம்பனியையும் அன்னை காப் பாற்றினார். கொடுத்த வாக்கைப் பூர்த்தி செய்யவில்லை. வேலையும் பூர்த்தியாகாமலிருக்கிறது.

7) பம்பாய் தொழிலதிபருக்கு ரூ. 2000 கோடி கடனுக்கு ஏற்பாடாயிற்று. கையெழுத்தாக அனைவரும் சந்தித்தனர். எதிரியை அனுமதித்தார். ரத்தாய்விட்டது.

அண்ணன் - எதிரிக்கு அந்த நேரம் எப்படி விஷயம் தெரிகிறது?

தம்பி - தெரிவது அப்புறமிருக்கட்டும். ஏற்பாடு செய்தவருக்கு இவர் எதிரி, நண்பனாக நடிப்பவர் எனத் தெரியுமல்லவா? அவரைப் பார்க்க மறுக்கக்கூடாதா?

அண்ணன் - கையெழுத்து எங்கோ போடுகிறார்கள். எதிரிக்கு சூட்சுமமாக ஏதோ நடக்கிறது, நாம் போனால் கெடும் என புறப்பட்டு வருகிறார். அது ஏற்பாடு செய்தவருக்கு

தெரிகிறது. எப்படி, பார்க்க மாட்டேன் என்பது தயக்கம். எவ்வளவு பெரிய விஷயம் கெட்டுவிட்டது. இதென்ன தயக்கம். தப்பில்லையா?

தம்பி - மறுத்திருந்தால் கூடி வந்திருக்குமா? இவர் பார்க்க மாட்டேன் என்பதால் எதிரி கோபப்பட்டால் கெட்டுப் போகாதா?

அண்ணன் - பயந்து மறுத்தால் கோபம் வரும், கெட்டுப்போகும். நிதானமாக மறுத்தால் கெட்டுப் போகாது.

தம்பி - எதிரி வரக்கூடாது. வந்த பிறகு காரியம் வீணாகும்.

அண்ணன் - நிதானமாக மறுத்தால், காரியம் கெடாது.

தொடரும்.

பாதுகாப்பு - Protection

 

இளமையில் தெம்புள்ளபொழுது பட்டினி கிடந்தாலும் உடல் வளரும். வியாதி வரும் போகும். பாதிக்காது. காயம்பட்டால் தானே ஆறும். இளமை அளவுகடந்த தெம்புள்ள நேரம். செல்வர் பிள்ளைகள் வீண் செலவு செய்தால் வீட்டில் வசதி குறையாது. நஷ்டம் வந்தால் தொழில் பாதிக்கப்படாது. உபரி வருமானம் வரும்பொழுது பணவிஷயத்தில் ஆயிரம் தவறு நடந்தாலும் அடிப்படை அந்த நேரம் ஆட்டம் காணாது. இதனால் பட்டினி கிடக்க வேண்டும், காயத்தைக் கவனிக்கக்கூடாது, பணத்தை விரயம் செய்ய வேண்டும் என்று பொருளன்று. உபரி தெம்பு, உபரி வருமானம் வரும்பொழுது, உடல் பாதிக்கப் படுவதில்லை. வீட்டு வசதி குறைவதில்லை. பட்டகாயம் துருப்பிடித்த இரும்பால் பட்டிருந்தால், கவனிக்காமல் விட்டிருந்தால் tetanus ஜுரம் வரும். மறுநாள் உயிர் போகும். பணவிரயம் ரேஸ் மூலம் வந்திருந்தால், முழுச் சொத்தும் போய்விடும்.

அன்னை அன்பர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் விமானம் ஏறினாலும், கப்பலுக்கு லேட்டாக வந்து கப்பல் தவறினாலும், செய்யும் செலவில் பாதி வருமானமாக வரும் சொத்தை வாங்கினாலும், எதிரியை நண்பனாக நம்பி வேலை போனாலும், "உன்னை மட்டும் இந்த ஆண்டு பெயிலாக்கப் போகிறோம்'' என்று எச்சரித்தபின் படிக்க மறுத்தாலும், அறிவில்லாமல் எந்தத் தவறு செய்து கஷ்டம் வந்தாலும், பிரார்த்தனைக்குப்பதிலாக அன்னை காப்பாற்றத் தவறியதில்லை.

அன்னைக்குத் துரோகம் செய்தவர்க்கு உபகாரம் செய்தாலும், நம் உதவியைப்பெற்று அதை நமக்கு எதிராகப் பயன்படுத்த அன்னைக்குத் துரோகம் செய்தவருக்கு அதை அüத்தாலும், நமக்கு வேண்டியவர் நாம் அழிய நினைத்தாலும், நம் சக்தியும் தெம்பும் நம்மை அழிக்க நாமே பிறரை அனுமதித்தாலும், துரோகிக்கு சேவை செய்தாலும், அருள் செயல்படமுடியாது. அன்னையால் காப்பாற்ற முடியாது.

  • அன்னைக்குத் துரோகம் செய்தவரையும், நமக்குத் துரோகம் செய்தவர்களையும் விட்டு விலகுதல் நம் கடமை. நாம் விலகாமலிருப்பது நாம் அன்னைக்குச் செய்யும் துரோகமாகும்.

பாதுகாப்பு விஸ்வாசத்திற்கு.

எந்த ரூபத்தில் துரோகம் எழுந்தாலும் பாதுகாப்பு விலகும்.

ஐந்நூறு ரூபாய்

1927ஆம் ஆண்டு ஒருவர் தன் மனைவியுடன் ஆசிரமத்தில் சேர்ந்தார். அதற்குமுன் கொஞ்சநாளாக அவர் ஆசிரமம் வந்து போகும் வழக்கம் உண்டு. நிரந்தரமாக வந்து இங்கேயே தங்க வேண்டுமானால், சுமார் 1000 மைலிலிருந்து வர அவருக்குக் செலவுண்டு. அங்குள்ள கடமைகளைப் பூர்த்தி செய்யாமல் ஆசிரமம் வரமுடியாது. இவையிரண்டிற்கும் உரிய தொகை அன்று அவர் கணக்குப்படி ரூ. 500/-. இவர் வருமானமுள்ள தொழில் செய்பவரில்லை. ஏதோ உள்ள வசதியை வைத்துக் கொண்டு படிப்பின் சிறப்பால் எழுத்தாளராக இருப்பவர்.

1990இல் இந்து பத்திரிகையில் எழுதிய நீண்ட கட்டுரைக்கு சன்மானம் ரூபாய் 250/-. 1927இல் இதே கட்டுரைக்கு ரூ5/- அல்லது ரூ. 10/- கொடுத்திருப்பார்கள். அன்னையிடம் தன் நிலைமையைச் சாதகர் விளக்கினார். அன்னை சம்மதித்தார். சம்மதித்தார் எனில் அவர் எண்ணம் பூர்த்தியாகும் என்றார்.

அவர் ஊர் திரும்பிய கொஞ்சநாள் கழித்து, அமெரிக்காவிலி ருந்து அவரை ஒரு கட்டுரை எழுதச் சொல்லி 500/- ரூபாய் சன்மானம் தருவதாகச் சொன்னார்கள்! தொகை அதிகமாக இருப்பதைக் கண்டு அன்னை சொல் பலித்ததாக அவர் ஆச்சரியப்பட்டார். கட்டுரை எழுதினார். அனுப்பினார். சன்மானம் வந்தது. இனி ஊரைவிட்டு ஆசிரமம் போக வேண்டியதுதான். மீண்டும் அமெரிக்காவிலிருந்து கடிதம் வந்தது. அவர் கட்டுரைதேவைப்படவில்லை எனவும் அது தேவைப்பட்டproject ஐக் கைவிடப் போவதாகவும் கடிதம் சொல்லியது. மேலும் அப்பணத்தை அவர் திரும்பித் தரவேண்டாமெனவும், கட்டுரையை வேறு ஒரு சமயம் பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறியது.

சூழ்நிலையில் இல்லாத சந்தர்ப்பத்தை உற்பத்தி செய்து சாதகரின் தேவையைப் பூர்த்தி செய்வது அன்னையின் திறன் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

 



book | by Dr. Radut