Skip to Content

08.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

           (சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

அண்ணன் - இதனுள் சில அனுபவங்கள், உண்மைகள் அடங்கியுள்ளன. அவை,

1) விவரம் தெரியாமற் பேசும்பொழுது நல்லவர்களைக் கெட்டவர்கள் என்போம்.

2) அனுபவமில்லாத விஷயத்தைப் பற்றிச் சொல்லும்பொழுது அபிப்பிராயம் தவறாகும்.

3) அறிவு, அனுபவத்தைத் தர முடியாது.

4) உணர்வு பெறுவது அனுபவம், மனம் பெறுவது அறிவு.

5) தோற்றமும், உண்மையும் மாறுபட்டும், வேறுபட்டும், எதிராகவுமிருக்கும்.

எலிசபெத் டார்சியை அலட்சியம் செய்யும்பொழுது பணக்காரனை அலட்சியம் செய்வதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். பணக்காரன் கர்வமாக இருந்தால், அலட்சியம் செய்வது உயர்ந்த பண்பு என நினைக்கிறோம். அதிலுள்ள உண்மை முழுமையானதன்று.

எலிசபெத் £2000 எஸ்டேட்டில் வளர்ந்தவள் என்றாலும் £10,000 எஸ்டேட் என்றால் என்ன என்று அறியாதவள். பெம்பர்லி மாளிகையைக் கண்டவுடன், அதற்கும் லாங்பார்ன் என்ற தன் வீட்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. பெம்பர்லி அரண்மனை. தன் வீட்டில் housekeeper ஹில் என்பவளை பெம்பர்லி housekeeper ரேனால்ய்ஸ் என்பவரோடு ஒப்பிட்டால் ஹில், ரேனால்ய்ஸ் வீட்டு வேலைக்காரி போலிருப்பது தெரிகிறது. கண்ட காட்சி கற்பனையைக் கடந்தது. உடல் புல்லரித்தது. மனம் மாறியது. டார்சியை நெதர்பீல்ட்டில் பார்க்கும்பொழுது டார்சியின் உண்மைச் செல்வ நிலை தெரியவில்லை. தெரிய முடியாது. மனம் வெறுப்பாக இருந்த சமயம் டார்சியைப் பற்றி விக்காம் சொல்லிய பொய்க் கதை காதில் விழுந்தது. மனம் மாறிய சமயம் டார்சியின் உயர்வு காதில் விழுகிறது. விக்காம் தறுதலை என்ற சொல் கேட்கிறது. அறிவு என்பது மனத்தின் உணர்வைப் பொருத்தது என்ற ஆன்மீக உண்மையை அறிகிறோம்.

டார்சி பார்வைக்குக் கர்வமாகத் தோன்றினாலும், கர்வம் அவனிடம் கொஞ்சமுமில்லை என்று கேள்விப்படுகிறாள். Impression is far from reality. தோற்றம், உண்மையிலிருந்து மாறுபட்டிருக்கும். தோற்றத்தை முடிவாகக் கொள்வது சரியாகாது.

பெம்பர்லியில் ரேனால்ய்ஸ் டார்சியைப் பற்றி "இனிமையானவன், நெகிழ்ந்த நெஞ்சம் உடையவன், 4 வயதிலிருந்து என்னிடம் கடுமையாக ஒரு சொல் சொல்லியதில்லை'' என்றபொழுது எலிசபெத்தை Mrs.கார்டினர் "இது டார்சியா?'' என்னும்படி நோக்கினார்.

தம்பி - நெதர்பீல்ட்டில் எலிசபெத் எப்படி டார்சியின் உண்மை நிலையை அறியமுடியும்?

அண்ணன் - எலிசபெத்திற்கு டார்சியைப் பற்றி உண்மை தெரிய முடியாது. அவள் வெறுப்புடனிருந்ததால் வெறுப்புக்குரிய செய்தி வருகிறது. அத்துடன் இரு எதிரான குணங்களும் ஒருவரிடமே இருக்கும் என்பது உண்மை. ஒருவரிடமேயிருப்பதை நாம் அறியவேண்டும்.

தம்பி - அது எப்படி?

அண்ணன் - கணித மேதை என்பதால் அவர் நல்லவர் எனக் கொள்கிறோம். நோபல் பரிசு பெற்றவர் உயர்ந்தவர் என்று வைத்துக்கொள்கிறோம். அறிவுக்கும், பண்பின் உயர்வுக்கும் சம்பந்தமில்லை. அழகுக்கும், உயரத்திற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல், இரு மாறான, எதிரான குணங்கள்.

தம்பி - இதற்குரிய உதாரணங்கள் உண்டா?

அண்ணன் - உதாரணங்கள் உண்டு. நாம் அறியவேண்டியது மேற்படி உண்மை. உதாரணம் சொல்ல நாம் உயர்ந்தவரின் தாழ்ந்த குணங்களைக் கூறவேண்டும். தாழ்ந்தவரின் உயர்ந்த குணங்களையும் சொல்லவேண்டும். அது நமக்குப் பயன் தாராது. அவசியமானால் கூறலாம்.

தம்பி - ரேனால்ய்ஸ் பேசியதைக் கேட்ட கார்டினர் "இவர்கள் சொல்வது விக்காம் கூறியதற்கு எதிராக இருக்கிறதே'' என்கிறார். எலிசபெத் இதையும் கேட்டபின் இதை நம்ப மறுத்து விக்காம் நல்லவன் என மனதால் உறுதிப்படுத்துகிறாள்.

அண்ணன் - கெட்டவனை நல்லவன் என நினைத்தால் மறுநாள் கெட்டவன் கெட்டதைச் செய்துவிட்டான் எனச் செய்தி வருகிறது.

தம்பி - விக்காம் கெட்டவன். மனம் அவனை இதமாக நினைக்கிறது. அதனால் கெட்ட குணம் வலுப்பட்டு, நமக்குக் கெட்டது செய்ய முடிகிறது. லிடியாவுடன் விக்காம் ஓடிவிட்டான் என்ற செய்தி மறுநாள் வருகிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமா?

அண்ணன் - நம் மனம் இடம் கொடுக்காமல் நமக்கு ஒரு காரியம் நடக்காது என்ற சட்டம் இங்குத் தெரிகிறது. அகம், புறத்தைப் பிரதிபலிக்கிறது.

தம்பி - இந்த ஞானம் நமக்கு நடக்க இருக்கும் தவறுகளைத் தடுக்கப் பயன்படுமா?

அண்ணன் - நம் மனம் தவறான உணர்வுக்கு இடம் கொடுக்காவிட்டால், நமக்குத் தவறு நடக்க முடியாது என்பது ஆன்மீக உண்மை. அன்னை கூறும் உண்மை. நம் அனைவர் அனுபவத்திலும் கண்ட உண்மை.

தம்பி - எலிசபெத் வீட்டில் நடந்த அசம்பாவிதத்திற்கு அவர்கள் இடம் கொடுத்துவிட்டார்கள் என்று பொருளா?

அண்ணன் - எலிசபெத்தைப் பொருத்தவரை விக்காம் மீதுள்ள அளவுகடந்த கனிவுதான் காரணம். தாயறியாத சூலுண்டோ என்பதைப்போல், நம் மனம் இடம் தாராமல் நமக்கு ஒரு காரியம் நடக்காது.

தம்பி - காலின்ஸ் ஏன் இப்படி அளவு கடந்து பேசுகிறார்? அனைவரும் சிரிக்கிறார்களே.

அண்ணன் - புதியதாக நாம் கற்றுக்கொண்டது அடிக்கடி நம்மைப் பேசச் சொல்லும். நம் அறிவுக்கு அதிகமாக நாம் பயின்றால் வாய் ஓயாமல் பேசச் சொல்லும். அளவுக்கு மீறியிருப்பதால் தானே நிரம்பி வழியும்.

காலின்ஸ் தகப்பனார் படிக்காதவர். நாகரீகமில்லாதவர். காலின்ஸ் முதல் தலைமுறையில் படித்தவர். பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கல்வியை உயர்ந்த முறையில் அவரால் பெற முடியவில்லை. அதன் புறத் தோற்றத்தையே பெற்றார். உயர்ந்த முறையில் பெற்றிருந்தால் அது மனதில் ஊன்றி அறிவுடன் கலந்து உள்ளே உறையும். மூளையும், அறிவும் சிறியன. முதல் தலைமுறை படிப்பு. தாம் பெற்ற கல்வியைப் பெரிதாக நினைக்கிறார். அதனால் அது உள்ளே தங்க முடியாமல் வழிந்து ஓடுகிறது. அவரை மீறி ஓடுகிறது.

தம்பி - புதுப் பணக்காரன் ஆடம்பரமாக வாழ்வதைப் போலிருக்கிறது?

Mr.பென்னட் எப்பொழுதும் நிதானமாகப் பேசுபவர்.காலின்ஸ் முதலில் வந்தபொழுது லேடி காதரீனை முகஸ்துதியாக தாம் பேசுவதுண்டு என்று அவர் கூறியபொழுது Mr.பென்னட் "அவற்றை இயல்பாகப் பேசுவீர்களா? முன்கூட்டித் தயார் செய்வீர்களா?'' எனக் கேட்கிறார். இது மட்டமான கேள்வி.

அண்ணன் - Mr.பென்னட் கேட்பது Mr.காலின்ஸ்க்குப் புரியவில்லை. எலிசபெத் புரிந்து சிரிக்கிறாள். சிரிப்பை அடக்கிக் கொள்கிறாள். பென்னட் மட்டமாகப் பேசுவது காலின்ஸ்க்குப் புரியவில்லை. வாழ்வின் காதில் விழுகிறது. பின்னர் பதிலை அனுப்புகிறது.

தம்பி - லிடியா ஓடிவிட்டதுடன் காலின்ஸ் அதைக் கண்டித்து கடிதம் அனுப்புவது மூலம் வாழ்வு பென்னட்டிற்குப் பதில் கூறுகிறது. நாம் மறந்தாலும், எவர் மறந்தாலும், வாழ்வு மறக்காது.

முதல் கடிதம் Mr.காலின்ஸிடமிருந்து வந்தவுடன் Mrs.பென்னட் உயிலை மாற்றவேண்டும் என்கிறார்.

அண்ணன் - பென்னட்டிற்குப் படிப்பில்லை. சட்டம் புரிய படிப்பு வேண்டும். படிப்பில்லாவிட்டால் சட்டத்தை ஏன் மாற்றக்கூடாது என்று நினைப்பார்கள். சட்டம் ஏற்பட்டதே படித்தவன் சட்டத்தின்மூலம் தன்னை ஆள அனுமதித்ததால்தான்.

தம்பி - படிப்பிற்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் - படிப்பு ஏற்பட்ட பிறகுதான் சட்டத்திற்கு மரியாதை வந்தது. படித்தவன் சட்டத்தை மீறக்கூடாது என்று புரிந்துகொள்வான். சட்டத்திற்கு அதிகாரமுண்டு எனப் படித்தவன் அறிவான். படிக்காதவனுக்கு அது தெரியாது. தன்னிஷ்டம்போல் நடக்கலாம் எனநினைப்பான். Mrs..பென்னட்டுக்கு படிப்பில்லாததால் (entail) உயிலை மாற்ற வேண்டுமென்று பேசுகிறாள். பெண்கள் படித்தவர்கள் என்பதால், அது முடியாது என்று விளக்கம் கூறுகிறார்கள்.

தம்பி - முதல் டான்ஸில் டார்சி எலிசபெத்தை முதலில் கவனிக்கவில்லை. பிறகு அவள் பால்ஈர்க்கப்படுகிறான். அவன் அதை அறியவில்லை.

அண்ணன் - Liking விருப்பம் என்பது மேலெழுந்தவாரியானது. Attraction கவர்ச்சி என்பது ஆழ்ந்தது. கவர்ச்சி என்பதை நாம் மட்டமான கருத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் attraction என்பது உயர்ந்தது. வேறு சொல் சொல்ல முடியவில்லை. டார்சி தன்னையறியாமல் அவள்பால் ஈர்க்கப்பட்டதால் அதனுள் உண்மையுண்டு. அது பலவகைகளில் பிறகு தெரிகிறது.

. திருமணத்தில் முடிகிறது.

. எலி சபெத் திட்டியது டார்சிக்குக் கோபத்தை உண்டு பண்ணவில்லை.

. அவள் கடுமையாகச் சொல்லியவற்றை உண்மை என ஏற்று மனம் மாறுகிறான்.

தம்பி - இந்தக் கதையைப் பயன்படுத்தி நாம் என்ன அறியலாம்?

அண்ணன்- 1) மனிதன் வளரும் வழி என்ன?

2) சமூகம் எப்படி வளர்கிறது?

3) சாதிப்பதெப்படி?

4) செல்வம் எப்படி உற்பத்தியாகிறது?

5) வாழ்வில் சந்தோஷத்தை எப்படி அதிகரிப்பது?

6) உலகம் அற்புதம் என அறிவது.

7) The Life Divineஇல் கூறும் தத்துவங்களை அறியலாம்.

தம்பி - கதையின் மையக் கருத்தென்ன?

அண்ணன் - The Life Divineஇல் .239இல் ஜடமே சச்சிதானந்தம் என்று பகவான் விவரிப்பதை, நாமே சச்சிதானந்தம் என அறிய கதை உதவும்.

தம்பி - The Life Divine இல் என்ன சொல்கிறார்?

அண்ணன் - நாம் ஜடம் என்பது இறைவன் ஒளிந்துள்ள உடல். உடலினுள் இறைவனும், ஜீவியமும் ஒளிந்துள்ளன. மேலும் உடலே ஆனந்தம். ஆனந்தமான உடல் மறைந்துள்ள ஜீவியத்தை ஆசைகாட்டி உள்ளுறை இறைவனை வெளிக்கொணர முயல்கிறது என்று The Life Divine கூறுகிறது.

தம்பி - புரியாத தத்துவமாக இருக்கிறதே.

அண்ணன் - தத்துவம் என்றால் புரியாது என்றுதானே அர்த்தம்!

தம்பி - கதையில் தத்துவம் எங்கே வருகிறது?

அண்ணன் - உள்ளுறை இறைவனை மறைந்துள்ள ஜீவியம்மூலம் புறஉருவமான ஆனந்தம் அழைக்கிறது என்பது தத்துவம். இந்தக் கதையில் 4 திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணமே இவர்களுடைய "இறைவன்''.புற நிகழ்ச்சிகள் உள்ளுறை "திருமணத்தை'' இவர்களுடைய குணம் (ஜீவியம்)மூலம் வெளிக் கொணர்கிறது.

தம்பி - திருமணம் கடவுள் என்றீர்கள். அப்படியானால் ஆனந்தமெது? புற நிகழ்ச்சிகளா? ஜீவியம் என்பது குணமா?

அண்ணன் - ஆமாம்.

தம்பி - திருமணம் எப்படி இறைவனாகும்?

அண்ணன் - உள்ளே திருமணத்திற்குரிய குணமிருந்தால் புறத்தே திருமணம் நடைபெறும். உள்ளே உள்ள குணம் மாறும்வரை திருமணம் தள்ளிப் போகிறது. ஜீவியம் மாறிய உடன் திருமணம் நடக்கிறது.

தம்பி - இந்த மாற்றத்தைப் புற நிகழ்ச்சிகள் செய்கின்றனவா?

அண்ணன் - நம் வாழ்வைப் புரிந்துகொண்டால், கதை புரியும், கதை புரிந்தால் நம் வாழ்வு புரியும்.

தம்பி - இப்படிச் சொல்லலாமா?

. மனிதன் இறைவனைத் தேடுகிறான். அவன் உள்ளேயிருக்கிறான். உடல் ஆனந்தமயமானது. உடல் என்பது புற நிகழ்ச்சிகளாலானது. நம் குணம்

இறைவனைக் காண மாறும்படிப் புறநிகழ்ச்சிகள் நிர்ப்பந்தம் செய்கின்றன.

. பாத்திரங்களுக்குள் மறைந்துள்ள திருமணத்திற்குரிய குணம் எழும்வரை, பாத்திரங்களுடைய சுபாவம் - குணம் - மாறும்படி நிகழ்ச்சிகள் நிர்ப்பந்தம் செய்கின்றன.

அண்ணன் - ஓரளவு பொருத்தமான விளக்கம். கதையில் டார்சியும், எலிசபெத்தும் உயர்ந்த திருமணத்திற்குரியவர்கள். அவர்கள் மனம் அதை நாடுகிறது. குணம், சுபாவம் இடம் கொடுக்கவில்லை. புற நிகழ்ச்சிகளால் சுபாவம் மாறியவுடன் டார்சி, எலிசபெத்தை மணக்கிறான்.

தம்பி -நமக்கு அதிர்ஷ்டம் என்ற இறைவன் உள்ளேயிருக்கிறான். நம் சுபாவம் அவன் வெளிப்படுவதை அனுமதிக்கவில்லை.லிடியா ஓடிப்போனவுடன் எல்லோர் சுபாவங்களும் மாறுகின்றன. திருமணம், அதிர்ஷ்டம், இறைவன் என்பன உள்ளிருப்பது நமக்குத் தெரிகிறது.

அண்ணன் - நமக்கு நடப்பவை நாம் மாறவேண்டும் என்று கூறுகின்றன. அதை ஏற்று மாறினால் அதிர்ஷ்டம் - இறைவன் - உள்ளேயிருந்து வெளிவருகிறது.

. இன்று நம் சுபாவம் அதிர்ஷ்டத்திற்குத் தடை.

. சுபாவத்தை மாற்றினால் அதிர்ஷ்டம் வரும்.

தம்பி - இது புரிகிறது. The Life Divine இதைத்தான் கூறுகிறதா? மேற்சொன்ன அத்தியாயத்தில் "நம் நோக்கம் viewமாறினால் ஜடம் திருவுருமாறும்'' என்கிறார். நாம் அதைச் "சுபாவம் மாறினால் அதிர்ஷ்டம் வரும்'' என்கிறோம்.

அண்ணன் - டார்சிக்கும், எலி சபெத்திற்கும் சுபாவம் மாறியவுடன் அதிர்ஷ்டம் வருகிறது. அதுபோல்,

. நாம் இறைவனின் உருவம். நம்முள் இறைவன் ஒளிந்துள்ளான். உலக நிகழ்ச்சிகளால், அவற்றின் ஸ்பர்சத்தால், அவன் வெளி வருகிறான் என நாம் அறிய வேண்டும். அதை நம் வாழ்வுக்குரிய முறையில் சொல்லவேண்டுமானால்,

. நம் வாழ்வு எனும் உலகை நிர்ணயிப்பதும், சிருஷ்டிப்பதும் நாமே என்று முடிக்கலாம்.

தம்பி -Pride &Prejudice என்ற கதையை வாழ்வின் உண்மையான பிரதிபலி ப்பாகக்

கொள்ளலாம் என்று கூறுகிறோமே?

அண்ணன் - ஆமாம். அது பொதுவாக எல்லாக் கதைகளுக்கும் பொருந்தும்.

. எந்த ஒரு நிகழ்ச்சியும் வாழ்வின் சிறு உருவம் miniatureஎனக் கூறலாம்.

. எந்த நிகழ்ச்சியையும் நம் விருப்பு வெறுப்புகட்கு உட்படுத்தக்கூடாது. எலி சபெத்தும்,

விக்காமும் அதைச் செய்கிறார்கள். அது தவறு.

. பாத்திரங்களை ஆத்மாவாகக் கருதவேண்டும். தங்களுக்குரிய ஆன்மீக உண்மைகளைக் கண்டுபிடிக்க அவை முயல்வதைக் காணவேண்டும்.

. ஒவ்வொரு பாத்திரத்திலும் நம்மைக் காண வேண்டும்.

. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் நம் வாழ்வு பிரதிபலி ப்பதைக் காண்பது அவசியம்.

தம்பி - Mrs..பென்னட்தான் எதையும் ஆரம்பிக்கின்றாள். முதன்முதலி ல் Mr.பென்னட்டை நெதர்பீல்ட்டுக்குப் போகச் சொல்வதே Mrs..பென்னட்தான்.

அண்ணன் - கடைசிவரை தனக்கு வேண்டும் என்பதை உடனே கேட்டு, வற்புறுத்தி, பெற முயல்வது Mrs.பென்னட்.

தம்பி - அப்படி Mrs.பென்னட் செய்வது எதுவும் கூடி வருவதில்லை. கூடிவந்தாலும் காரியம் தள்ளிப் போகிறது.

அண்ணன் - நாமே ஆரம்பிக்கக் கூடாது (initiative). அதுவும் அவசரப்பட்டு ஆரம்பிக்கக் கூடாது என்பது அன்னைச் சட்டம். ஆரம்பித்ததைத் தியாகம் செய்ய வேண்டும்

என்கிறார் அன்னை. ஙழ்ள்.பென்னட் எதிராக நடக்கிறார்.

தம்பி - முடிவாக Mrs..பென்னட் 3 திருமணத்தை முடிக்கிறாரே. அதை எப்படிப் புரிந்துகொள்வது?

அண்ணன் - Mrs..பென்னட் அளவுகடந்த சக்தியுடையவர் (full of energy). சக்தி காரியத்தை முடிக்கும். பெண்கள் திருமணத்தில் குறியாக இருக்கிறார். தெம்பிருந்து, காரியத்தில் கண்ணாக இருந்தால், காரியம் முடியும். அவசரப்பட்டு நாமே ஆரம்பித்தால் கெடும்.

தம்பி - கணவனை வற்புறுத்தி பிங்லியைப் பார்க்க அனுப்புகிறார் Mrs..பென்னட். ஜேனைக் குதிரை மேல் அனுப்பி, அங்கேயேயிரு என்கிறார். இப்படியெல்லாம் செய்தால் திருமணம் முடியும் என்று செய்கிறார். என்ன நடக்கிறது? நெதர்பீல்ட்டைக் காலி செய்துவிட்டு அனைவரும் போய்விடுகின்றனர்.

அண்ணன் - தந்திரமாக நடப்பது Mrs..பென்னட் வழக்கம். ஜேன் வண்டியில் போனால் திரும்பி வரவேண்டும். குதிரை மீது போனால், மழை பெய்தால், அங்கேயே இருக்கவேண்டும் என்பது அவர் திட்டம். அந்த அளவுக்குத் திட்டம் நிறைவேறுகிறது. அடுத்த கட்டத்தில் காரியம் கெட்டுப் போகிறது.

தம்பி - தந்திரம், யுக்தி, திட்டம் போடுதல் காரியத்தைக் கெடுக்கும் என்கிறார் அன்னை.

அண்ணன் - அது உண்மைதானே. எப்பொழுதும் இவை எதிரான பலனைத்தானே தருகின்றன.

தம்பி -அப்படித்தானே லி டியாவை பிரைட்டனுக்கு அனுப்பிவைக்கிறார் Mrs.பென்னட். அது ஓடிப்போக வசதியாகிவிட்டதல்லவா?

அண்ணன் - யுக்தி எப்பொழுதும் நல்ல பலன் தருவதில்லை.

தம்பி - இரண்டாம் முறை பிங்லி வந்தபொழுது மறுபடியும் Mrs..பென்னட் கணவரைப் போகச் சொல்கிறார். கணவர் மறுத்துவிடுகிறார்.


 

தொடரும்.....


 

****
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பெரிய இலட்சியம் என நாம் பின்பற்றுவதை ஆராய்ந்து பார்த்தால், அர்த்தமற்றவர்களுடைய போக்கிலிருந்து அது சற்றே மாறுபட்டு இருப்பது தெரியும். முழுவதும் அர்த்தமற்ற செயன் பின் திருவுள்ளம் செயல்படுவதைப் பார்க்கலாம்.

அர்த்தமற்றதை அர்த்தமாக்குவது திருவுள்ளம்.


 



book | by Dr. Radut