Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே.

அன்புள்ள மதிப்பிற்குரிய அன்னைக்கு வணக்கத்துடன் எழுதிக்கொள்வது.

சென்ற வாரம் 27.12.02 வெள்ளியன்று என் பெரிய மகன் கல்லூரியிலிருந்து வரும்பொழுது தன்னுடைய மணிபர்ஸை தவறவிட்டுவிட்டான். வீட்டிற்கு வந்து உடை மாற்றம் செய்யும்பொழுதுதான் அது தொலைந்துவிட்டது தெரிந்தது. கல்லூரியில் விட்டுவிட்டானா? அல்லது இரண்டு சக்கர வாகனத்தில் வரும்பொழுது தவறவிட்டு விட்டானா என்று எதுவும் புரியவில்லை. எங்கள் இருவருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தோம். அதில் மிகவும் முக்கியமான கல்லூரி ஐடென்டிட்டி கார்டு, பெட்ரோ கார்டு, லைசென்ஸ் ஆகியவை இருந்தன. அன்னையின் படங்களுடன் மற்றும் சில படங்களும் இருந்தன. அழுகை அழுகையாக வந்த எங்களுக்கு அன்னையிடம் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. நாங்கள் இருவரும் அன்னையிடம் கெஞ்சி கதறினோம். அன்னைக்குக் காணிக்கை எடுத்து வைத்துவிட்டு அன்னையின் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன். தாயே, அம்மா, அது யார் கண்ணில் பட்டாலும் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து எப்படியாவது எங்களிடம் வந்து சேரக் கருணைபுரி தாயே என்று கூறி ஓம் நமோ பகவதே சொல்லிக்கொண்டேயிருந்தேன். இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சரியம்! இரண்டு பையன்கள் வந்து இதுதான் ஷியாம் குமார் வீடா? நீங்கள் உங்கள் பர்ஸை தொலைத்துவிட்டீர்களா? என்று கேட்டுவிட்டு, இது 2, 3 நபர்களுடைய கை மாறி வந்துள்ளது. எனவே தாங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி அதைக் கொடுத்தார்கள். அதிலிருந்த ஒரு சிறிய தொகையைத் தவிர அனைத்தும் பத்திரமாக இருந்தன. அன்னையின் கருணையை என்னவென்று சொல்வேன். உடனே அன்னைக்கு நன்றி கூறி அவரது பாத மலர்களில் சரணடைந்தேன். இத்துடன் அன்னைக்காக எடுத்து வைத்த காணிக்கையைச் சமர்ப்பிக்கிறேன்.


 

நன்றி! நன்றி! நன்றி!


 

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

புறநிகழ்ச்சியால் உந்தப்படுவது மனித சுபாவம். புறச் சூழ்நிலையின்றி, தானே உள்ளிருந்து செயல்படுபவன் தவறாது வெற்றி பெறுவான். உள்ளேயும் ஆரம்பிக்க மறுப்பவன், இறைவனை எதிர்பார்ப்பவன், அவன் இறைவன் திட்டப்படி நடப்பவன்.

                இறைவன் செயல்பட நாம் செயல்படக்கூடாது.


 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடல் பழக்கத்தை வலியுறுத்தாவிட்டால், உணர்வு ஆசையைவிட முன்வந்தால், மனம் அன்னை முடிவை ஏற்றால் ஆத்ம சமர்ப்பணம் முடியும்.

ஆசையும் போய் அன்னை முடிவு வருவது சமர்ப்பணம்.


 


 


 


 


 



book | by Dr. Radut