Skip to Content

11.லைப் டிவைன் - கருத்து

The Life Divine - கருத்து

ஜடத்தில் அறியாமை என்பது இல்லை

ஜடத்தில் அறியாமையில்லை, வாழ்வில் அறியாமையில்லை, மனத்தில் அறியாமையில்லை. சத் முதல் ஜடம்வரை எந்த லோகத்திலும் அறியாமையில்லை என்பது ஜடம் அறியாமை என நம்பும் நமக்கு ஆச்சரியமானது.

வாழ்வில் சூது, வாது, கபடு, திருடு, பொய் மலிந்துள்ளது. சீட்டாட்டத்தில் சூதுண்டு, சட்டமன்றத்தில் வாதுண்டு, பேரம் பேசுவதில் கபடுண்டு, பணப்பழக்கத்தில் திருடுண்டு, எங்கும் பொய்யுண்டு என நாம் கூறுவது பொய்யில்லை என்றாலும் மெய்யில்லை.
 

. சீட்டாட்டம் நம்மைச் சூதாக நடக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.

. சட்டமன்றத்தில் வாதம் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.

. கபடில்லாமல் பேரமில்லை என்பதில்லை.

. திருடியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பணப்புழக்கத்திற்கு இல்லை.

. பொய் சொல்லியாக வேண்டும் என வாழ்வு நம்மை வலியுறுத்தவில்லை.

- சீட்டாட்டம், சட்டமன்றம், பேரம், பணப்புழக்கம், வாழ்வு ஆகியவை சூது, வாது, பொய், கபடு, திருட்டுக்கு இன்று ஏற்ற அரங்கங்களாக அமைகின்றன.

- இவற்றை எல்லாம் செய்வது மனிதன்.

- மனிதனுக்குச் choice உண்டு. நேராகவும் போகலாம், எதிராகவும் நடக்கலாம்.

- இன்று மனிதன் தன் சௌகரியத்திற்காக எப்படியும் போகிறான்.

- இவ்வரங்கங்களில் முழுவதும் நேர்மையாக மனிதனால் இருக்க முடியும். ஆனால் செய்வதில்லை,

என்பதுபோல் சத் முதல் ஜடம்வரை எல்லா லோகங்களும் அறியாமையின்றிப் படைக்கப்பட்டுள்ளன. மனித மனம் இரு வகைகளாகவும் செயல்படக் கூடியது. அதன் ஆதி சத்திய ஜீவியம். தன் ஆதியை மனம் மறக்காதவரை அறியாமை எழுவதில்லை. மனம் அதை மறப்பதால் அறியாமை எழுகிறது. எழுந்த அறியாமை வாழ்வில் வலுப்பட்டு, ஜடத்தில் பூர்த்தியாகிறது.

நாம் ஜடம் முழுவதும் அறியாமையால் நிரப்பப்பட்டதாக அறிவோம். ஜடம் அறியாமையிலிருந்து விடுபட்ட நேரம் ஆனந்தமயமாகும். அதுவே பரிணாமத்தின் சிகரம். பிம்பம் கண்ணாடியில்லை. நாம் கண்ணாடி முன் நிற்பதால் பிம்பம் ஏற்படுகிறது. கண்ணாடிக்குப் பிம்பம் வேண்டும் என்ற அவசியமில்லை. சொத்துரிமையோ, திருமணமோ வாழ்விற்கு அவசியமில்லை. நாம் திருமணத்தை நாடினால், சொத்துரிமையை ஏற்படுத்தினால் சமூகம் அவற்றை ஏற்கிறது. வாழ்விற்கோ, சமூகத்திற்கோ சொத்துரிமை தேவையில்லை.


 

****


 


 



book | by Dr. Radut